என் மலர்
நீங்கள் தேடியது "கோப்ரா"
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'.
- 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா
இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
He's like a #COBRA!! His strike will be felt even before he arrives 🔥#CobraFromAugust11 🔥#ChiyaanVikram ❤️🔥
— Seven Screen Studio (@7screenstudio) June 23, 2022
An @AjayGnanamuthu Film🎬
An @arrahman Musical🥁@IrfanPathan @SrinidhiShetty7 @dop_harish @theedittable @mirnaliniravi @dhilipaction @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/KmV6hXT15y
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'.
- சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.