மன்னித்துவிடுங்கள்.. வைரலாகும் "கோப்ரா" பட இயக்குனர் பதிவு..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜய் ஞானமுத்து - விக்ரம்
அஜய் ஞானமுத்து - விக்ரம்
Published on

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோப்ரா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர்.

கோப்ரா

இந்நிலையில், இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அஜய் ஞானமுத்து தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மன்னித்துவிடுங்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கலந்து கொள்ளமுடியவில்லை. விரைவில் புரொமோஷனில் கலந்துகொள்வேன். ஆனால் என்னுடைய அமேஸிங் டீம் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, உள்ளிட்ட அனைவரும் எங்கள் கிங் கோப்ரா விக்ரம் சாருடன் புரொமோஷனில் ஈடுபடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com