நடிகர் விக்ரம் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விக்ரம்
விக்ரம்
Published on

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோப்ரா

 ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கோப்ரா

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "மிகுந்த பொருட்செலவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, 'கோப்ரா' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com