நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. வெளியான தகவல்..

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'கோப்ரா'.இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விக்ரம்
விக்ரம்
Published on

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கோப்ரா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா திரைப்படம் வரும் 23 -ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com