உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும் - எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய விக்ரம் பட டிரைலர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கோப்ரா
கோப்ரா
Published on

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோப்ரா

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. "கோப்ரா" திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com