என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு பொம்மை"

    • குரங்கு குட்டி பிறந்து சில தினங்களில் தாய் குரங்கு கைவிட்டு சென்றது
    • துணைக்காக குரங்கு பொம்மையை குரங்கு குட்டியிடம் பூங்கா ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

    ஜப்பான் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பு தேடும் குரங்குக் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பிறந்து சில தினங்களில் தாய் குரங்கு கைவிட்டுச் சென்ற நிலையில், துணைக்காக குரங்கு பொம்மையை குரங்கு குட்டி PUNCH-இடம் பூங்கா ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

    இந்த குரங்கு குட்டி கடந்த ஜனவரியில் குரங்கு கூட்டத்தில் சேர்த்து விடப்பட்ட போதிலும், செல்லும் இடமெல்லாம் குரங்கு பொம்மையை விடாமல் எடுத்துச் செல்கிறது. குரங்கு குட்டியின் இந்த செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

    விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் நித்திலன் இயக்கத்தில் வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற இருக்கிறது. #KuranguBommai
    புளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.

    இந்த அறிவிப்பினை புளு சாப்யர் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



    முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    `குரங்கு பொம்மை' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாடகமேடை என்ற குறும்படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். #NaadagaMedai #VijaySethupathi
    நித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 
    `குரங்கு பொம்மை'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கியிருக்கும் குறும்படம் நாடகமேடை. 

    சமூகத்தில் மனிதம் மீது மனிதன் கொண்டுள்ள மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்த குறும்படத்தை கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் தயாரித்திருப்பதடன், அவர்களின் ஊர்நாடு திரைக்களம் மூலம் வெளியிட்டுள்ளார். இது அவரின் தயாரிப்பில் வெளிவரும் ஆறாவது குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தயாரிப்பு தவிர்த்து படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். 



    மனிதனின் உதவும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தின் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

    விரைவில் இந்த குறும்படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #NaadagaMedai #VijaySethupathi

    ×