என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியா செல்டோஸ்"

    • புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2nd Gen கியா செல்டோஸ் 2026 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் - HTE, HTK, HTX, GT-Line மற்றும் X-Line வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஜனவரி 2-ந்தேதி விலை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் சமீபத்திய கியாவின் டைகர் நோஸ் கிரில் மற்றும் முற்றிலும் புதிய பம்பருடன் முற்றிலும் புதிய முகத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில் பக்கவாட்டில் பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் மற்றும் கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் EV மாடலில் உள்ளதை போலவே புதிய ஏரோ-ஓரியண்டட் சக்கரங்கள் உள்ளன. பின்புறம் கனெக்டெட் செங்குத்தான டெயில் லைட்களைப் பெறுகிறது. இது காருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய கியா செல்டோஸ் உள்புறத்தில் புதிய சென்டர் கன்சோல், பிரமாண்டமான 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், புதிய 3-ஸ்போக் கியா ஸ்டீயரிங் வீல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.36 மீட்டரிலிருந்து 4.46 மீட்டராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீல்பேஸ் 2,690 மிமீ ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாடலை விட 80 மிமீ அதிகம் ஆகும்.

    இத்துடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் சவுண்ட் சிஸ்டம், லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், HUD, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், சரவுண்ட் லைட்கள், ஃபுல்-எல்இடி லைட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன்படி 113bhp பவர், 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் யூனிட். 158bhp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் GDi யூனிட் உள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு MT வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டில் கியாவின் 1.5 லிட்டர் யூனிட் 118bhp பவர் மற்றும் 260Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் விலை விவரங்களை கியா நிறுவனம் வருகிற ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. மேலும் இதன் விலை ரூ. 12 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட் , எம்ஜி ஆஸ்டர் , மாருதி விக்டோரிஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹை-ரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃவோக்ஸ்வாகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.

    • இரு கார்களும் பெட்ரோல், டீசல் பவர்டிரெயினில் கிடைக்கின்றன.
    • இரு கார்களிலும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. புது மிட்-ரேஞ்ச் வேரியண்ட் GTX செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    செல்டோஸ் GTX மாடல் HTX+ GTX+ (S) வேரியண்ட்களின் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. சொனெட் GTX வேரியண்ட் HTX மற்றும் GTX+ வேரியண்ட்களின் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு வேரியண்ட்களும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

     


    புதிய சொனெட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. புதிய செல்டோஸ் GTX மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் மற்றும் சொனெட் X லைன் வேரியண்டில் அரோரா பிளாக் பியல் நிறம் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    விலை விவரங்கள்:

    கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT ரூ. 13 லட்சத்து 71 ஆயிரம்

    கியா சொனெட் 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 14 லட்சத்து 56 ஆயிரம்

    கியா செல்டோஸ் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT ரூ. 19 லட்சம்

    கியா செல்டோஸ் டீசல் AT ரூ. 19 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடல் புசான் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதே மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    புசான் சர்வதேச மோட்டார் விழாவில் கியா நிறுவனத்தின் 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

    2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய ஹெட்லைட் மற்றும் ரிவைஸ்டு முன்புற கிரில், அதிக காற்றோட்டத்திற்கு வழி வகை செய்யும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளது. இதன் ஃபாக் லேம்ப் ஹவுசிங்கில் மட்டும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பக்கவாட்டில் 18 இன்ச் மெஷின் கட் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வேரியண்டில் 17 இன்ச் யூனிட்கள் வழங்கப்படலாம்.


    பின்புறம் முற்றிலும் புது டிசைன் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் புதிய பம்ப்பர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. உள்புறத்தில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் UVO கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய கியா செல்டோஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் டொயோட்டா ஹைரைடர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • கியா நிறுவனத்தின் 2022 செல்டோஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய செல்டோஸ் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    2022 கியா செல்டோஸ் மாடல் டிஜிட்டல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புசான் மோட்டார் விழாவில் வெளியாக இருந்த நிலையில், இந்த டிஜிட்டல் அறிமுகம் நடைபெற்று இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய கியா செல்டோஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்தியாவில் கியா செல்டோஸ் சி செக்மண்ட் எஸ்.யு.வி. வெற்றிகர மாடலாக விளங்குகிறது. சமீபத்தில் கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட நிலையில், இதன் அப்டேட் செய்யப்பட்ட வேரியண்ட் தற்போது அறிமுகமாகிறது. இந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்கள் புது காரை வாங்க செய்யும்.


    முன்னதாக கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய மேம்பட்ட மாடலும், பேஸ்லிப்ட் மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. எனினும், 2022 மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், பெரிய முன்புற கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டி.ஆர்.எல்.களின் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் 18 இன்ல் அளவில் புதிய அலாய் வீல்கள், வீல் ஆர்ச்களை முழுமையாக ஆக்கிரமித்து, காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை எளிதில் எடுத்துக் கொடுக்கிறது. பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப், ஃபுல் விட்த் எஸ்.இ.டி. லைட் பார் உள்ளது. இதன் நடுவே கியா லோகோ உள்ளது. 

    ×