என் மலர்tooltip icon

    வழிபாடு

    weekly rasipalan 21.12.2025 to 27.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 21.12.2025 to 27.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • மேஷம் தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம்.
    • மிதுனம் அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம்.

    மேஷம்

    தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசி அதிபதி செவ்வாயுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு பாக்கிய பலன்களை அதிகரித்துக் கொடுக்கக்கூடிய காலமாகும்.திரிகோணங்கள் பலம் பெறுவதால் கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும்.எந்த நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உயர் கல்விக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்க ளுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய நல்ல செய்திகள் தேடி வரும். நவகிரக செவ்வாயை வழிபடவும்.

    ரிஷபம்

    அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார்.விபரீத ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக நடமாடும்.வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். இது வரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திரும ணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம். திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 22.12.2025 அன்று காலை 10.07 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.பேச்சில் கவனம் தேவை.கோபத்தை கட்டுப் படுத்தவும்.மகாலட்சுமியை வழிபடவும்.

    மிதுனம்

    அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் சுக்ரன் குரு சம்பந்தம் உள்ளது. தடைகளைத் தாண்டி வெற்றிகள் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சாலும் செயலாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிக ரிக்கும்.தான, தர்மம் உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதி கரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த வருமானம் எதிர் பார்க்கலாம். வேலையில் புரமோ சன் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். வேலை தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக் கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வயோதி கர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாண வர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.22.12.2025 அன்று காலை 10.07 முதல் 24.12.2025 அன்று இரவு 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் விரய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது.நவகிரக புத பகவானை வழிபடவும்.

    கடகம்

    காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது.தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடை சார்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதா யம் இரட்டிப்பாகும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும்.இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 24.12.2025 அன்று இரவு 7.46 முதல் 27.12.2025 அன்று அதிகாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. குல, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை கவசமாக காத்தருளும்.

    சிம்மம்

    சகாயங்கள் நிறைந்த வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் குரு சனி பார்வையில் சஞ்சரிக்கிறார்.புத்திக் கூர்மை கூடும். புதிய சிந்தனைகள்உருவாகும்.மனச் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். சிலருக்கு தாய் வழிச் சீதனங்களாக பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும்.அஷ்டமத்து சனியால் மறைமுக ஆதாயம் உண்டாகும். பண வரவு அதி கரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல் வீர்கள். 27.12.2025 அன்று அதிகாலை 3.10க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணியி டங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இறை நம்பிக் கையோடு எதையும் எதிர்கொள்ள அற்புதங்கள் நிறைந்த வாரமாக மாறும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

    கன்னி

    முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி புதன் 3-ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். கடன் நோய் எதிரி சார்ந்த பிரச்சினைகள் குறையும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். மாணவர்கள் ஆரோக்கியத்திலும், கல்வியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சனிக்கி ழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

    துலாம்

    மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு குரு பார்வை உள்ளது. சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். வராக்கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நோய்த் தொல்லை குறையும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் வில கும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.6மிட ராகுவால் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குருபகவா னின் பார்வை சாதகமாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தினமும் லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.

    விருச்சிகம்

    விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம். ராசியில் 8,11-ம் அதிபதியான புதன் இருக்கிறார். புதிய மறைமுக சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்த மாக குறுகிய காலத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்க ளுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும்.உடல் ஆரோக்கித்தில் கவனம் தேவை. நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள்.அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உதவி பெற்ற வர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது. பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருட் களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.

    தனுசு

    பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் வாரம்.ராசியில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரனுக்கு குரு சனி பார்வை உள்ளது. ராசி அதிபதி குருவின் சம சப்தம பார்வை பாக்கியாதிபதி சூரியனுக்கு கிடைப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டா கும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறை யும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். அர்த்தாஷ்டம சனியால் எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். அலுவ லகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன் னேற்றம் உண்டாகும்.திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபட நிம்மதி கூடும்.

    மகரம்

    முன்னேற்றம் உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் ராசி அதிபதி சனி சஞ்சரிப்பதால் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.குடும்ப உறவுகளுடன் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும். நண்பிகள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும்.தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும்.தொல்லை கொடுத்த வாடகைதாரர் விலகுவார். புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதி கரிக்கும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருமணம் நிச்சய மாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள்.தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    கும்பம்

    விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தன, லாப அதிபதி குருவின் பார்வை உள்ளது.இது கும்ப ராசியினருக்கு மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம்,சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள்.உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும்.ஆரோக்கிய குறைபாடு கள் சீராகும்.சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம்.பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். காலபைரவர் வழிபாட்டால் நன்மைகளை அடைய முடியும்.

    மீனம்

    மகிழ்ச்சியான நிம்மதியான வாரம். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி.தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய், சுக்ரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும்.இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப் பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும். மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். நோய் தொல்லை குறையும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள். மகான்க ளின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×