என் மலர்
வழிபாடு

கார்த்திகை தீபம் - விளக்கு ஏற்றும் திசையும் அதன் பலன்களும்
- திருக்கார்த்திகை நாளில் நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.
- கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது.
கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.
கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
திசைக்கேற்ப பலன்
நாம் வீட்டில் விளக்கேற்றும்போது, எந்த திசையை நோக்கி விளகேற்றுகிறோமோ அதற்கேற்ப பலன்களை அடையலாம்.
கிழக்கு
துன்பங்கள் நீங்கும், ஐஸ்வர்யம் கிடைக்கும்
மேற்கு
கடன்கள் தீரும்
வடக்கு
சுபகாரியங்கள் நடைபெறும்
தெற்கு திசை பார்த்து விளக்கேற்றக் கூடாது
Next Story






