என் மலர்tooltip icon

    வழிபாடு

    பால்குண அமாவாசை
    X

    பால்குண அமாவாசை

    • மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது.
    • இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

    மாசி மாதம் மகத்துவமான மாதம். மாசி மாதத்தில் கலைகளையும் கல்வியையும் கற்றறியலாம். உபநயனம் முதலான விசேஷங்கள் செய்யலாம். தீர்த்த நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்றெல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள்.

    மாசி மாத அமாவாசையை பால்குண அமாவாசை என்றும், பால்குண மாதத்தின் நிறைவு நாள் என்றும் சொல்லுவது உண்டு. மாசி அமாவாசைக்கு முன்பாக சிவன் மற்றும் அன்னை பார்வதியை போற்றும் மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்து, சிவனின் அருளை பெற்ற கையோடு அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றால் பித்ருதோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    இந்த மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது. இந்த நாளில் பசுவிற்கு தீவனம் கொடுப்பது நல்லது. அமாவாசை நாட்கள் கிரக பிரவேசம், மொட்டை அடிப்பது, திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் உட்பட எந்த மங்களகரமான சடங்குகளையும் யாரும் செய்வதில்லை.

    ஆனால் அமாவாசை நாட்களில் புனித கங்கையில் நீராடுதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்து முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளை மேற்கொள்வதோடு, சனியுடன் தொடர்புடைய பரிகாரங்களையும் செய்யலாம்.

    அதேபோல் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபடலாம். அன்று புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வேண்டி அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்கி ஆசிபெற்றால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×