என் மலர்
கோவில்கள்
வயல் வெளிகள் சூழ ரம்மியமான சூழ்நிலையின் நடுவில் அமையப்பெற்று ஊரின் எல்லையில் கோட்டை போல் உருவாகி இருக்கும் கோவில்தான் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் திருக்கோவில்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் முழுக்க முழுக்க சித்தர்கள் வாழ்ந்த இடமாகவும், அச்சித்தர்களுக்கு ஸ்ரீ ராமர் காட்சியளித்த இடமாகவும், ராமரின் பாதம்பட்ட இடமாகவும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோவிலாகவும், பழைய ஏடுகள் மூலம் தெரியவருகிறது
தலவரலாறு :
தருமபதி – இது திரேதாயுக காலத்தில் ஆதி நாராயண ஸ்தலமாக, மிகப் பெரிய ஆன்மீகக் கோட்டையாக, ஸ்ரீ ராமபிரான் தனது சக்திகளை ஆதி நாராயணர் சந்ததியில் அவதாரப் பெருக்கத்தோடு மஹாசக்தியாக உருவகித்துக் கொண்ட ஸ்தலமாக விளங்கி, பின், கால ஓட்டத்தில், பூமிக்கடியில் அமிழ்ந்து காணப்படுகிறது என்கிறது அய்யா எம்பெருமான் ஸ்ரீஎட்டெழுத்துப் பெருமாளின் திருக்கணக்கு.
திருநெல்வேலி நகரில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி என்னும் பொருணையாற்று நதிக் கரையில் அமைந்துள்ள இப் புண்ணிய பூமியில் தான் ஸ்ரீ ராமபிரான் ஜடாயுவிற்கு மோட்சம் அருளினார். பின், ஸ்ரீ ராமபிரான் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவ பூஜை நிகழ்த்திய புண்ணிய பூமியும் இதுவே.
ராமபிரான் ஈஸ்வரனை பூஜித்த ஸ்தல மாகையால், பழைய ராமேஸ்வரம் என்றும், சிவபெருமானும் ஸ்ரீ ராமபிரானும் சேர்ந்து அருளும் புண்ணிய பூமியாதலால், சேர்ந்த ஐயன் மங்கலம் என்று பெயர் பெற்ற இத்தலங்கள், காலப்போக்கில் மருவி தற்போது அருகன்குளம் மேலூர் என்றும் சேந்திமங்கலம் என்றும் அழைக்கப்படுகின்றன.
1891ம் ஆண்டு ஆனி மாதம் 18ம் தேதி பழைய ராமேஸ்வரம் என்னும் பழைய கிராமத்தில் அவதரித்த மாயாண்டிச்சித்தர் தனது 28ம் வயதில் திருநெல்வேலி அருகில் உள்ள வல்லநாட்டு மலையில் கடுந்தவம் புரிந்து வருகையில், அய்யா எட்டெழுத்துப் பெருமாள் ஒரு வயோதிகர் உருவில் பிரசன்னமாகி, பால்கஞ்சி கொடுத்து, ஊருக்குச் சென்று அய்யாவை வணங்குமாறு கூறி மறைந்து விடுகிறார்; ஓர் ஓலைச்சுவடியும் கைவரப் பெற்றார் மாயாண்டிச்சித்தர்.
அய்யா எட்டெழுத்துப் பெருமாள் உத்தரவுப்படி ஊருக்குத் திரும்பிய மாயாண்டிச்சித்தர், வீட்டில் பெருமாள் சிலையை நிறுவி வழி படத்துவங்கினார். தீர்க்கதரிசியான மாயாண்டிச்சித்தரிடம் சுற்றுவட்டார மக்கள் தங்களின் குறைகளைச் சொல்லி, அய்யாவின் அருள்வாக்குப் பெற்றனர். சிறிது காலத்திற்குப் பின், அய்யாவின் அருளால், தற்போது கோவில் அமைந்துள்ள நிலம் கைவரப்பெற்று, அங்கு ஓர் ஓலைக் குடிசையில் அய்யா எட்டெழுத்துப் பெருமாள் கோவில் அமைந்தது. பின்பு, இரண்டு பிரகாரங்களோடு மண்சுவர்க் கட்டிடம் எழுப்பப்பட்டு தளம் போட்ட கோவிலாக உருவானது ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் ஆலயம்.

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.
ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும்.
சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம்.
மூலவர், தாயார் :
இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.
தேர்த்திருவிழா :
இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும். இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.
தமிழகத்தில் தேர் போன்ற அமைப்பில் பல கோயில்களில் உள்ள கருவறைகளோ, மண்டபங்களோ காட்சியளிக்கின்றன. அவற்றில் தாராசுரம், பழையாறை, திருக்கருக்காவூர், மேலக்கடம்பூர், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் கூறலாம்.

தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 27 திருக்கோவில்களில், மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபுவனம் என்ற ஊர். பட்டுத் துணி உற்பத்தி செய்யப்படும் இந்த ஊரில் இருந்து, அதே சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 27 திருக்கோவில்களில், மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஓங்கி உயர்ந்து காணப்படும் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், திருத்தோரணத் திருவாயில் என்ற பெயருடன் நம்மை வரவேற்கிறது ஆலயம். வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் பரந்த வெளியும், புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபமும், அதில் கொடிமரமும், நந்திபீடமும் காணப்படுகின்றன. திருமாளிகைத் திருவாயில் என்ற மற்றொரு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் படிக்கட்டுகளுடன் கூடிய மாடக்கோவில் அமைப்பில், கலை அழகு மிக்க தூண்களைக் கொண்ட மண்டபங்கள் உள்ளன. இதனைக் கடந்து சென்றால் கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கலாம்.
வலதுபுறம் உள்ள விநாயகருக்கு தோப்புகரணம் போட்டுவிட்டு திரும்பினால், நந்தியெம் பெருமான் வீற்றிருக்கிறார். அவருக்கு நேர் எதிரே லிங்கத் திருமேனியில் இறைவன் கருவறையின் உள்ளே காட்சித் தருகிறார். இறைவன் ‘கம்பகரேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.
மன்னனுக்கு அருள் செய்த ஈசன் :
மதுரையை ஆட்சி செய்த மன்னன் (கி.பி. 792–835) வரகுண பாண்டியன். வேட்டைப்பிரியன். ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு, குதிரையில் நாட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனை, அவன் வந்த குதிரை மிதித்துக் கொன்றுவிட்டது. எனவே பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பிடித்தது. இதனால் அவன் மிகவும் துன்பம் அனுபவித்து வந்தான்.
அவன் ஒரு முறை சோழ நாட்டில் உள்ள திருவிடை மருதூர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக சென்றான். அந்த ஆலயத்திற்குள் நுழைந்ததுமே, மன்னனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அங்கிருந்து சில காலம் வழிபட்டு வந்தான். இருப்பினும் தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட நடுக்கம் மட்டும் மன்னனை விட்டு அகலவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டான்.
பின்னர் திருவிடை மருதூரில் இருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த, இந்த ஆலயத்தின் எல்லையை அடைந்ததும், அவனது உடலில் இருந்த நடுக்கம் குறையத் தொடங்கியது. இதை உணர்ந்த அரசன், அங்கே வில்வ வனத்தில் இருந்த சிவபெருமானை வழிபட்டதும், அவனது நடுக்க நோய் முற்றிலுமாக மறைந்தது. சில காலம் மன்னன் அங்கேயே தங்கியிருந்து ஈசனை வழிபட்டு நாடு திரும்பினான். மன்னனின் நடுக்கத்தைப் போக்கியவர் என்பதால், இத்தல இறைவன் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார்.
நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும், மனக்கலக்கத்திலிருந்தும் விடுபட மூலவரான நடுக்கம் தீர்த்த சிவபெருமானை வழிபாடு செய்தால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேள்விகளும், அபிஷேகங்களும் செய்தும் பக்தர்கள் இறையருள் பெறுகிறார்கள்.
மகா மண்டபத்திலேயே, தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. அங்கே துர்க்கை, லட்சுமி, நவக்கிரக சன்னிதி போன்ற வழிபடும் மூர்த்தங்களும் உள்ளன. நடராச சபை நோக்கியிருக்கும் தெற்கு வாயில் வழியே வந்தால், அழகிய சிற்ப நுணுக்கத்துடன் கூடிய தூண்கள் நிறைந்த தேர் வடிவ மண்டபத்தில் சோமாஸ்கந்தர் திருவருள் தருகிறார்.
கலைக் கோவில் :
பரதநாட்டிய பாவங்களும், புராண இதிகாச சிற்பங்களும் செதுக்கப்பட்டுக் கலைக் கோவிலாகக் காட்சி தருகிறது. இறைவனின் கருவறைக்கு மேல் எழுந்துள்ள விமானமானது, ராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருங்கோவில் மற்றும் ராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போல உயர்ந்து விளங்குகிறது. மேற்கண்ட சோழ மன்னர்களின் வழித்தோன்றலான குலோத்துங்க சோழனின் உருவாக்கம்தான் இந்த ஆலய விமானம் என வரலாற்று வரிகள் உரைக்கின்றன. விமானத்தின் அமைப்பு ‘அறிவானந்த வடிவம்’ என்று கட்டிடக் கலை சொல்கிறது.
சுவாமி சன்னிதிக்கு இடது புறம் தனிக்கோவிலில் தர்மசம்வர்த்தினி எனும் ‘அறம் வளர்த்த அன்னை’ எழுந்தருளியிருக்கிறார். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களும், கோமுகம் அருகே சண்டிகேசர் சன்னிதியும் உள்ளன. விசாலமான வெளிப் பிரகாரத்தில் சிவனுக்கு பின்புறம் அருணகிரிநாதரால் பாடப்பட்ட, வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார்.
நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரர் :
இத்தல அம்மன் கோவில் எதிரே, தெற்கு நோக்கிய மண்டபத்தில் சரபேஸ்வரப் பெருமான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். ஏழடி உயரத்தில் கம்பீரமான உருவத்துடன் அச்சம் நீக்கி அருள் பொழிகின்றார். திருமால் தனது பக்த குழந்தை பிரகலாதனுக்காக, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார். தூணை பிளந்து கொண்டு வெளியே வந்த நரசிம்மர், இரண்யகசிபுவை தன் மடியில் தூக்கி வைத்து கைவிரல் நகங்களால் கீறி வதம் செய்தார். இதனால் தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இரண்யகசிபுவை வதம் செய்து முடித்த பின்னரும், நரசிம்மருக்கு கோபம் தணியவில்லை. அரக்கனின் குருதியை குடித்ததனால் மேலும் உக்கிரமானார். யாராலும் அவரை சாந்தப்படுத்த முடியவில்லை. தேவர்கள் அனைவரும் சிவனிடம் சரணடைந்து முறையிட்டார்கள். கருணை கொண்ட சிவபெருமான் பூத கணங்களின் தலைவரான அகோரமூர்த்தியை அனுப்பி வைத்தார். நரசிம்மரின் ஆவேசத்தை அவராலும் குறைக்க முடியவில்லை. அண்டங்களும், அனைத்து உயிர்களும் நடுங்கின.
இதையடுத்து சிவபெருமான், சிங்கங்களையே அடித்து வீழ்த்தி பசியாறும் வலிமை படைத்த, சரபப் பறவையின் உருவம் கொண்டு, மனித மிருக வடிவம் கலந்து மகா பயங்கர உருவம் கொண்டார். எட்டுக் கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், சிம்மம் போல நீண்ட வாலும், கருடனைப் போல மூக்கும், காளியைப் போல கோரைப் பற்களும் கொண்டு அவர் காட்சியளித்தார். அவர் பிரத்தியங்கரா காளி, சூலினி துர்க்கா ஆகிய இருவரையும் இரு இறக்கைகளாக கொண்டு பறந்து, நரசிம்மரை நெருங்கினார். ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருந்த நரசிம்மர், சரபத்தை தாக்கத் தொடங்கினார். 18 நாட்கள் நடந்த இந்த போரின் இறுதியில், சரபமூர்த்தி தனது இரு இறக்கைகளாலும், நரசிம்மரைத் தழுவி, அவரை யோக நரசிம்மராக அமைதி அடையச் செய்தார் என்பது புராண வரலாறு.
பேராற்றல் படைத்த சிவரூபமான சரபரை வழிபடுவது சிறப்பு தரும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு, பில்லி, சூனியம், ஏவல், கண்திருஷ்டி போன்ற கெடு பலன்களும், எதிரிகளின் தாக்கமும், பிணி பாதிப்பும், திருமண தோஷமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதினோரு ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில், பதினோரு விளக்கேற்றி, பதினோரு முறை வலம் வந்து மனமுருகி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கன்னியாகுமரியில் இருந்து மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இலந்தையடிவிளை.
கன்னியாகுமரியில் இருந்து மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இலந்தையடிவிளை. ஒரு காலத்தில் இலந்தை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால், இந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு முத்தாரம்மன் எழுந்தருளி மக்களை காத்து அருள்புரிந்து வருகிறாள். முத்து+ ஆற்று+ அம்மன். அம்மை நோயால் ஏற்படும் முத்துக்களை ஆற்றுவதால் (போக்குவதால்) அம்மனுக்கு இந்தப் பெயர் வந்தது.
இத்தல அம்மன் அமர்ந்த கோலத்தில் வடக்கு பார்த்த வண்ணம், கருணை பொங்கும் விழிகளுடன், தீய சக்திகளை அழிக்கும் வகையில் கையில் சூலாயுதத்துடன் காட்சி தருகிறாள். ஐம்பொன்னால் உருவானவள் இந்த அம்மன். ஆண்டு முழுவதும் இந்த அன்னையின் அழகிய திருமுக தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைக்கும். முழுவதும் பட்டாடையால் சூழப்பட்டிருப்பாள். கழுத்தில் இருக்கும் தங்கத்தால் ஆன பெரிய திருமாங்கல்யம், அன்னை பெண்களின் திருமாங்கல்யத்தைக் காப்பவள் என்பதை பறைசாற்றுகிறது.
வருடத்தில் ஒருமுறை ஆடிப்பூரத்தில் மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்பாளின் முழு உருவத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த அபிஷேகத்திற்கு தேன், பால், பஞ்சகவ்யம், சந்தனாதி தைலம், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், தயிர் என ஒன்பது வகையான பொருட்களை வாங்கிக் கொடுத்து தரிசித்து, கருவறை தீபத்தில் சந்தனாதி தைலம் சேர்த்து வழிபட்டால் அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் அகலும். நவக்கிரக நாயகியாய் முத்தாரம்மன் திகழ்கிறாள்.
வியாபார வளர்ச்சிக்கு :
கோவிலின் உட்பிரகாரத்தில் சாஸ்தா, மகாவிஷ்ணு சன்னிதிகளும், பலிபீடமும் உள்ளன. சனிக்கிழமையில் தொடர்ந்து 8 வாரங்கள் சாஸ்தா, மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி ஒருங்கே வழிபட்டு வந்தால், வியாபாரத்தில் வளர்ச்சி, பொன், பொருள் சேர்க்கை போன்ற நற்பேறுகள் கிட்டும். கருவறையில் அம்மனுடன் அரூபமாக வண்டி மலையான் அருள்பாலிக்கிறார். முத்தாரம்மனின் கருவறை வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களாக பைரவரும், பூத வேதாள கணமும் காவல்புரிந்து அருள்செய்கின்றனர். திருக்கயிலையில் ஈசனின் திரு நடனத்திற்கேற்ப இசைக் கருவிகளை மீட்டிப் பாடுபவை பூத வேதாள கணங்கள். மேலும் ஈசன் வேதம் பாட, பூத வேதாளங்கள் ஆடுமாம். வேதாளங்கள், பைரவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவை.
இத்தல முத்தாரம்மன் சிவ அம்ச மாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. சக்தி பீடங்களின் காவலராக சிவபெருமானே பைரவர் வடிவில் எழுந்தருளியிருப்பதாகக் கூறப்படுவதால், சிவாலயங்களில் விளங்கும் பைரவர் சன்னிதியில் செய்யப் படும் பரிகாரங்களைவிட, இத்தலத்தில் பரிகாரம் செய்வது இரட்டிப்பு பலன்களை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கைஆகும்.
சுகப்பிரசவ விநாயகர் :
முத்தாரம்மன் ஆலயம் கேரள கட்டிட அமைப்பில் பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தல வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பக்கம் மாரியம்மனும், உஜ்ஜைனி மாகாளியும், பலிபீடமும் உள்ளன. இத்தல வெளிப்பிரகார தென்மேற்கு மூலையில் தல விநாயகரான வரங்களை அள்ளித்தரும் வரசித்தி விநாயகர் கிழக்கு நோக்கி, தன் அன்னையாம் மூலவரை பார்த்த வண்ணம் உள்ளார். இந்த விநாய கருக்கு அபிஷேகம் செய்து, சிதறுகாய் உடைத்து, நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து, 3 சங்கடஹர சதுர்த்தி தினங்கள் வழிபட்டு வர தடங்கல்கள் அகன்று நல்வழிகள் பிறக்கும் என்பது ஐதீகமாகும்.
வரசித்தி விநாயகரை, சுகப்பிரசவ விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னிடம் வேண்டுதல் வைக்கும் கர்ப்பிணி பெண்களின் பிரசவம் சுகமாய் அமைந்திட வரமருள்வதால் இந்தப் பெயர் பெற்றுள்ளார். பிரசவ நாட்களில், அவ்வைபிராட்டியின் ‘விநாயகர் அகவல்’ படித்து வருவது அதீத பலன் தரும்.
அரச மர பிரதட்சிணம் :
கோவில் வெளிச்சுற்றில் வடமேற்கு மூலையில் செங்கிடாக்காரன், கால சுவாமி (எமன்), சுடலைமாட சுவாமி சன்னிதிகள் பீட வடிவில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளன. கால சுவாமியை எமகண்டத்தில் தீபம் ஏற்றி வழிபட எம பயம், மரண பயம் அகலும், நீண்ட ஆயுள் கிட்டும். எம கண்டத்தில் ‘யம ஸ்துதி’ பாராயணம் செய்வது இரட்டிப்பு பலன்களைத் தரும்.
ஆலய தல மரங்களாக வேம்பும், படர் அரச மரமும் உள்ளன. திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் தினத்தில் காலையில் 9 முறை அரச மரத்தைச் சுற்றி வந்தால் சகல தேவர்களின் அருளும், பதினாறு வகை பேறுகளும் கிட்டும். பூச நட்சத்திரக்காரர்களுக்கு இந்த அரச மர பிரதட்சிணம் கை மேல் பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
இவ்வாலயத்தில் கார்த்திகை 30 நாட்கள், பங்குனி உத்திரம், சித்திரை பெருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. திருக்கார்த்திகை தீப நாளன்று இத்தலத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் லட்ச தீபம் ஆலயம் முழுவதும் ஏற்றப் படும். அம்பிகை சிவ சொரூபமாக அருள்வதால், மகா சிவராத்திரியில் இங்கு நான்கு கால பூஜைகள் உண்டு. தைப் பொங்கல் நாளில் இக்கோவிலில் பெண்கள் முத்தாரம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இலந்தையடிவிளை முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பைரவர் நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சுதை வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. தொடர்ந்து 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாத்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நற்காரியங்கள் யாவும் ஈடேறும். இந்நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது நலம் பயக்கும்.
பைரவர், சனீஸ்வரரின் குரு. ஆதலால் இத்தல பைரவரை சனிக்கிழமை மாலை வேளையில், எள் எண்ணெய் எனும் நல்லெண்ணெய் தீபமேற்றி, 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சகலவிதமான சனி தோஷங்களும் அடியோடு அகன்று விடும். வெள்ளிக்கிழமைகளில் இத்தல பைரவருக்கு வில்வ மாலை அணிவித்து, நெய்யில் சுட்ட உளுந்து வடை நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறும்.
அமாவாசை அல்லது ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, நாகலிங்கப்பூ மாலை சூட்டி, எள் அன்னம் படைத்து முன்னோர்களை நினைத்துப் பிதுர் பூஜை மந்திரம் கூறி அர்ச்சித்து, 10 பேருக்காவது அன்ன தானம் செய்தால் முழுமையான பித்ரு தோஷத்தை பைரவர் நீக்கி அருள்வார். வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, தாமரை பூ சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து 8 வாரங்கள் செய்து வர, திருமணத் தடைகள் அகன்று, மனதுக்குப் பிடித்த துணை அமையும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால் பாயசம் நிவேதனம் செய்தால் நாக தோஷமும், சனிக் கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால்பாயசம், கருந்திராட்சை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விஷய பயமும் அடியோடு அகலும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு, தங்கள் தனத்தை பெருக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.

இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
திருச்சி பெயர்க்காரணம் :
திரிசிரன் என்ற மூன்று தலையுடைய அசுர மன்னன் இப்பகுதியை ஆண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியை திரிசிரபுரம் என்று வழங்கப்பட்டு அதுவே மருவி சிராப்பள்ளி என்றும் திருச்சிராப்பள்ளி என்றும் வழங்கி வருகிறது என்று வரலாறு கூறுகிறது.
சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.
அம்பாள் : மட்டுவார்குழலி.
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம்
தலச்சிறப்பு :
இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
தல வரலாறு :
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.
அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.
தாயுமானசுவாமி உருவான கதை :
இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் மறு கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாயால் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் ஈசனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு தான்,இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது. மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.
நடைதிறப்பு :
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி :
அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்,
திருச்சிராப்பள்ளி - 620 002.
தொலைபேசி எண் : +91-431- 270 4621.

சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
புராண பெயர்(கள்): பிரம்மபுரம், சீர்காழி
பெயர்: சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
ஊர்: சீர்காழி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர்: சோமஸ்கந்தர்
தாயார்: பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம்: பஞ்சரத்திர ஆகமம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்
சீர்காழி பிரமபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை.
ஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.
தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
கோவில் முகவரி :
சட்டைநாத சுவாமி கோவில்
சீர்காழி - 609110,
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன் நம்பர் - 9443053195, +91-4364-270235

சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில், பழமை வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில், பழமை வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மயிலையில் கோபதி நாராயணன் செட்டித் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கோலவிழி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் இருக்கிறது இந்தத் திருத்தலம். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதியை, கிரகித்துக் கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளான். மயிலாப்பூரில் அமைந்துள்ள 7 சிவாலயங்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது.
கோவில் தல வரலாறு :
வாலியின் தாயார் சிறந்த சிவ பக்தையாக இருந்தவர். அவள் ஒரு முறை இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். அவள் முன் தோன்றிய இந்திரனிடம், 'எனக்கு பிறக்கப்போகும் மகன் சிறந்த சிவ பக்தனாகவும், சிவபூஜையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துபவனாகவும், மகா பராக்கிரமசாலியாகவும், அவதார புருஷனால் மட்டுமே அவனது ஆயுள் முடிவடைய வேண்டும் எனவும் பல்வேறு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.
வாலி குழந்தைப் பருவத்தில் இருந்தே சிவ பக்தியில் சிறந்தவனாக இருந்தான். அவன் தன் தாயையே குருவாக எண்ணிக்கொண்டு, தினமும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மேலும் சகல சாஸ்திரங்களையும் கற்றதோடு, மிகுந்த பலம் நிறைந்தவனாகவும் திகழ்ந்தான். சிவ பூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், சுற்றம் சூழல் எல்லாவற்றையும் மறந்து, ஈசன் நினைவிலேயே மூழ்கிவிடும் அளவுக்கு அவனது பக்தி இருந்தது. அவனைக் கண்டு அவனது தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு முறை வாலியை அழைத்த அவனது தாய், பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு வரும்படி பணித்தார். அன்னையின் கோரிக்கைப்படி, திருவண்ணாமலை உட்பட பல சிவாலயங்களுக்குச் சென்ற வாலி, அங்கு மனமுருக சிவபெருமானை வழிபட்டான். ஆங்காங்கே தான் சந்தித்த முனிவர்களிடம் இருந்தும், சிவ பூஜை முறைகளை நன்கு கற்றுக்கொண்டான்.
பல இடங்களைக் கடந்து, பின் மயூரபுரி (தற்போது மயிலாப்பூர்) வந்து, பவதாரண்யேஸ்வரரை வணங்கினார். அவரை மலர்களாலும், வில்வ இலைகளாலும் மற்றும் பழங்களாலும் பூஜித்து மகிழ்ந்தான். வாலியின் பக்தியில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். பின்னர் அவன் கேட்ட வரங்களை வழங்கி ஆசி கூறினார். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்று திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். ஆலயமும் வாலீஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு :
ஆலயத்தின் வாசலைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து சன்னிதிகள் கோபுரத்துடன் அமைந்துள்ளன. கணபதி மற்றும் சுவாமி சன்னிதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி கிழக்கு முகமாகவும், சுப்பிரமணியர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள அருணகிரிநாதர் சன்னிதி மேற்கு முகமாகவும், சாஸ்தா சன்னிதி கிழக்கு முகமாகவும், பைரவர் சன்னிதி தெற்கு முகமாகவும், பஞ்சலிங்க சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளன. பஞ்சலிங்க சன்னிதி கோபுரத்தின் அமைப்பானது, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுர அமைப்பில் உள்ளது.
சனீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியபடியும், ஆஞ்சநேயர் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றன. மூலவர் சன்னிதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சூரிய, சந்திர சன்னிதிகள் மேற்கு நோக்கியும், சந்தானக் குரவர்கள் சன்னிதி வடக்கு நோக்கியும் உள்ளன.
மெய்கண்ட சிவம், அருநந்தி சிவம், மறைஞான சம்பந்த சிவம், உமாபதி சிவம் ஆகியோர் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வாலியின் திருவுருவம் சுவாமி சன்னிதியின் உட்புறத்தில் இறைவனை வணங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லியை பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கிச் செல்கின்றனர். பிரகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேலுள்ள கோபுரத்தில் பதினெட்டு சித்தர் களின் உருவங்கள், சுதை வடிவத்தில் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம், வன்னி மரம் ஆகும்.
ஆலய சிறப்பு :
கிழக்கு முகமாக அமைந்துள்ள விநாயகர் சன்னிதியில், விநாயகர் ஆவுடையாரில் அமர்ந்திருப்பது விசேஷமான அமைப்பாக கருதப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னிதி, மிகுந்த சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு வந்து தியானம் செய்தவர்கள் தங்களுக்கொரு புது அனுபவம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை கூறுகின்றனர். இந்த சன்னிதிக்குக் கீழே ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளதாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.
சனிக்கிழமை தோறும் காம்பு நீக்கிய வெற்றிலையை மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை வாலீஸ்வரருக்கும், வாலிக்கும் சாத்தி வழிபட்டு வந்தால் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பஞ்சலிங்க சன்னிதியில் மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்தால், தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் இந்த சன்னிதியில் சாம்பிராணி தூபம் ஏற்றினால் நிவர்த்தி உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோவில் திருவிழாக்கள் :
வைகாசி பவுர்ணமி தினத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்று வீதிஉலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி உற்சவத்தில், சூரசம்ஹாரமும், மறுநாள் முருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடந்து, சுவாமி திருவீதி உலா நடைபெறும். தவிர சுவாமியும், அம்பாளும் அறுபத்திமூவர் திருவிழாவில் திருக்கோவிலிலிருந்து எழுந்தருளி, கபாலீஸ்வரர் மற்றும் இதர தெய்வங்களுடன் வீதிஉலா வந்து, பின் கோவிலை அடைவர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமியில் கோவிலில் உள்புறப்பாடு நடத்தப்படுகிறது.
புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, 9 நாட்களும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 9-ம் நாள் விழாவில் பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. சித்திராப் பவுர்ணமியில், அம்பாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் மற்றும் மரிக்கொழுந்து சாத்தும் நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜர் வீதிஉலா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவெம்பாவை பாடல் தினமும் பாடி நித்ய கைங்கர்யங்கள் நடைபெறும். பத்து நாட்கள் மாணிக்கவாசகர் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் அருளிய பொன்னூஞ்சல் பாடல்கள், ஆருத்ரா தரிசனத்தின்போதும், மார்கழி மாதத்தின் போதும் பாடப்படுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
இறைவர் திருப்பெயர் : கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
தல விநாயகர் : கற்பக விநாயகர்.
தல மரம் : முல்லை.
தீர்த்தம் : க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் முதலியன.
வழிபட்டோர் : பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோர்.
தல வரலாறு :
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
தல சிறப்புகள் :
* ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
* இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன் லிங்கமும் உள்ளது.
* மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
* சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
* இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
* இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
* கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
* இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
* கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
* கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
* கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
* இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
* இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
* முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
அமைவிடம் :
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
கோவில் முகவரி :
அருள்மிகு கர்பரக்ஷாம்பிகை முல்லை வனநாதர் கோவில்
திருகருகாவூர் -614 302
பாபநாசம் தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி 04374 - 273423
கைபேசி -04374 - 273423
மின் அஞ்சல் - eomullaivananathartkr@gmail.com

திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம், தண்டலைச் சேரி. அங்கே நீள்நெறி என்னும் சிவாலயத்தில் இருக்கும் இறைவன் நீள்நெறி நாதர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம், தண்டலைச் சேரி. அங்கே நீள்நெறி என்னும் சிவாலயத்தில் இருக்கும் இறைவன் நீள்நெறி நாதர்.
ராஜகோபுரம் இல்லா முகப்பு வாசலில் நுழையும் போது கொடிமரமில்லா பலிபீடம் அதிகார நந்தி உள்ளது. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி, தெற்கு நோக்கிய அம்பாள் ஞானம்பிகை, பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்களின் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறையின் பின்புறம் தல விருட்சமான குருந்த மரமும், அதனடியில் சிவலிங்கமும் உள்ளது. கோவில் சற்று உயரமான இடத்தில் உள்ளதால் மாடக்கோவில் வகையைச் சார்ந்ததாக காணப்படுகிறது.
மாடக்கோவில் என்றதும் எழுபதுக்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன் நினைவுக்கு வருகிறார். திருஞான சம்பந்தர், இத்தலத்தின் தேவாரப் பதிகத்தில்,
'கருவருந்தலின் நாண்முகன் கண்ணனென்று
இருவ ருந்தெரி பானொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச் செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே' - என்று பாடுகிறார்.
தொழுநோய் தீர்த்த தலம் :
கோச்செங்கண்ணன் என்னும் சோழ மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு முறை குஷ்ட நோயால் அவதிப்பட்டு வந்தான். வைத்திய முறையில் பல சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போனது. இதையடுத்து அவர் தெய்வத்தின் மீது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தினான். ஒவ்வொரு ஆலயமாக சென்று வந்தான். ஆனால் எதற்கும் பலனில்லாமல் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை அவனது கனவில், 'கல் மாடு புல் தின்னும் தலத்திற்கு சென்று வணங்கி வழிபடு. உன்னுடைய நோய் தீரும்' என்று அசரீரியாக குரல் கேட்டது.
தன் கனவில் கேட்ட அந்தக் குரலின்படி, அப்படி ஒரு ஆலயம் இருக்கிறதா? என்று தேடித் திரிந்தான். அதன் ஒரு பகுதியாக இந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான். சிவபெருமானுக்கு அணிவிப்பதற்காக அருகம்புல்மாலை ஒன்றை கையில் தூக்கியபடி இறைவனின் கருவறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அப்போது சிவபெருமானுக்கு எதிரில் இருந்த கல் நந்தி, உயிர்ப்பெற்று எழுந்து வந்து மன்னனின் கையில் இருந்த அருகம்புல் மாலையை கவ்விக் கொண்டு ஓடியது. இதையடுத்து கனவில் ஒலித்த அசரீரியின்படி ஆலயம் இதுவென்று கண்டுகொண்டான். அங்குள்ள சிவபெருமானை வழிபட்டான். அவனது நோய் முற்றிலுமாக நீங்கியது. இதையடுத்து அந்தக் கோவிலுக்கு பல திருப்பணி செய்தான். கோச்செங்கண்ண மன்னன், சிவபெருமானுக்கு பல மாடக் கோவில்களை கட்டியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டால், நோய் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அரிவாள் தாய நாயனார் :
மருத குலத்துக்கே உரிய சிறப்புகளுடன், நீள்நெறிநாதர் ஆலயத்திற்கு அருகே கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் தாயன் என்ற சிவனடியார் வசித்து வந்தார். அவர் தனது ஊரில் பயிர்த் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் நீள்நெறி நாதரை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது செந்நெல் அரிசியில் செய்த உணவும், செங்கீரையும், மாவடுவும் கொண்டு நைவேத்தியம் படைப்பார். இது அனுதினமும் நடைபெறும் ஒரு சம்பவம். தாயன் நாயானின் தொண்டுக்கு, அவரது மனைவியும் பக்கபலமாக இருந்தார். இருவரும் சிவபக்தியில் சிறந்தவர்களாக இருந்து வந்தனர்.
கணவன்-மனைவி இருவரையும் சோதித்துப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டான். தாயரின் செல்வம் குறைந்து வறுமை சூழ்ந்து கொண்டது. தனது நிலத்தில் ஆட்களை வேலைக்கு வைத்து பயிர்த் தொழில் செய்து வந்தவர், வறுமையின் காரணமாக தானே கூலியாக வேறு ஒருவரின் நிலத்தில் சென்று வேலை பார்க்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார். அப்போதும் தனக்கு கிடைக்கும் நெல்லை அரிசியாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கணவனும், மனைவியும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.
ஒரு நாள் செந்நெல் அரிசி உணவு, மாவடு, செங்கீரை போன்றவற்றை கூடையில் வைத்து நீள்நெறி நாதர் ஆலயம் நோக்கிச் சென்றார் தாயன். அவரது மனைவியும் பின் சென்றார். பசி மயக்கத்தின் காரணமாக ஓரிடத்தில் தாயன் தடுமாறி விழப்போக, அவரை அவரது மனைவி தாங்கிப் பிடித்தார். இருப்பினும் கூடை சரிந்து, அரிசி, கீரை, மாவடு அனைத்தும் மண்ணில் விழுந்து வீணாகிப்போயின.
நாள் தவறாது செய்து வந்த நைவேத்தியம் இன்று பால்பட்டுப் போனதே என்று எண்ணி வருந்தினார். அவரால் அந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி உயிரோடு இருப்பதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற முடிவுக்கு வந்த தாயன், தன்னிடம் இருந்த கதிர் அறுக்கும் அரிவாள் கொண்டு, தன்னுடைய கழுத்தை அறுக்க முன் வந்தார். அப்போது மண்ணுக்குள் இருந்து ருத்திராட்சம் அணிந்து, திருநீறு பூசப்பட்ட கை ஒன்று வெளி வந்து, தாயனின் கரத்தை பிடித்துத் தடுத்து நிறுத்தியது. ஆம்! அது சிவபெரு மானின் திருக்கரம். இறைவனின் திருக்கரம் தன்னை தடுத்தாட்கொண்டதும் மெய்மறந்து அப்படியே நின்று போனார் தாயன். பின்னர் சிவபெருமானும், பார்வதி தேவியும் இடப வாகனத்தில் தாயனுக்கும், அவரது மனைவிக்கும் காட்சியளித்தனர். அப்போது முதல் அரிவாள் தாய நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் பேறு பெற்றுள்ளார்.
நடராஜர் :
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வழிபட்ட சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. மேலும் சூரியன், சந்திரன் போன்ற சன்னிதிகளும் உள்ளன. இத்தலத்தில் உள்ள நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பொதுவாக அனைத்து கோவில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்காதேவி, இத்தல நடராஜரின் பாதத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 110-வது தலமாக விளங்குகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருந்த மரம், தலவிருட்சமாக இருக்கிறது. தல தீர்த்தம், ஓமக தீர்த்தமாகும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் தான் திருமுருகன்பூண்டி.
முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.
தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது ஸ்தல புராணம்.
சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர், ஸ்ரீ ஸ்ரீ்பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன்பூண்டியில் நிற்கும்.
நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, நீங்களும் ஒருமுறை திருமுருகன்பூண்டி இறைவனைத் தரிசித்து திருவருள் பெற்று வாருங்களேன்!

அனைத்து நவக்ரஹ பரிகார ஸ்தலமாக விளங்கும் அமிர்தகடேஸ்வரர் கோவில்.
இத்திருத்தலம் மிகவும் பாடல் பெற்ற திருத்தலம். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் வந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது வரலாறு
இறைவன் மற்றும் இறைவி:
இந்த தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அம்பாளின் பெயர் வித்யா ஜோதி அம்மன் அருள்பாலிக்கிறார்.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவிலானது காலை 6.00 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இயங்கும்.
கோவிலில் சிறப்பு:
இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளார். இத்திருகோவிலில் மற்றொரு சிறப்பாக உள்ளது சூரிய கதிர்கள் வருடாவருடம் பங்குனி மாதம் அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய கதிர்கள் இறைவன் மீது விழும். இந்த திருக்கோவில் முற்றிலும் கற்களால் ஆன கோவில் ஆகும். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் கல் தேரில் குதிரை மீது அமர்ந்துள்ளார்.
ஸ்தல வரலாறு:
இந்த கோவிலில் உள்ள வரலாறாக கூறப்படுவது தேவர்களும் இந்திரர்களும் தங்கள் தவறை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை பயன்படுத்தும் விதமாக உள்ள கோயில் ஆக உள்ளது. தேவர்களும், இந்திரர்களும் இந்த சிவன் கோவிலில் வந்து வழிபட இருந்தனர். அப்போது அங்கிருந்த திருத்தேரை நகர்த்த முடியாமல் இருந்தது. அதற்கு உதவி செய்யும் வகையில் விநாயகர் வந்தார். விநாயகர் கூறியதாவது நான் இந்த தேரை நகர்த்த வேண்டுமெனில் ஒரு கோடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதற்கு இந்திரனும் சம்மதித்தார். அந்த முயற்சியில் தோற்றுவிட்டார். உடனே ஆயிரம் முறை லிங்கத்தின் பெயரை ஜெபித்தார். அப்போது ருட்ரகோடீச்வர் லிங்கம் தோன்றி நான் இந்த தேருக்கு பின்னால் நிற்பதாக கூறியது. அந்த லிங்கம் தான் அமிரித்தகடேஸ்வரர் திருத்தலம். தினமும் இந்திரன் வந்து பூஜை செய்த தலமாக இந்த கோயில் உள்ளது.
இக்கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் மட்டற்று சிறப்பாக கருதப்படுவது நவக்ரஹ தோஷம். இந்த கோயிலில் சினுக்கு நவகிரஹன்களுக்கு உரிய வண்ணமே சிவபெருமானிற்கு சாற்றப்படுகிறது. இந்த கோவிலில் தான் அருணகிரி நாதர் முருகபெருமானுக்கு திருப்புகழை பாடி உள்ளார்.
இந்த கோயிலில் விநாயகர், முருகர், அம்பாள், நடராஜர் ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த தளத்தில் ராஜா கோபுரங்கள் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் சரஸ்வதி, அம்பாள், துர்கை ஆகியோர் உள்ளனர். இந்த கோவிலில் கஜ முக வாகனத்தோடு கஜ லக்ஷ்மி அமைந்துள்ளார் .
மேலும் இந்த கோயிலில் மிக சிறப்பாக கருதப்படுவது ரிஷப வாகனம் பத்து கைகளுடன் காட்சி அளிக்கிறது. அந்த காட்சியை பூத கணங்களும், கந்தர்வர்களும் காண்பது போன்று அமைந்துள்ளது. இந்த கோயிலிலும் பிரதோஷ தினங்களிலும் பவுர்ணமி நாளிலும் மிக சிறப்பாக பூஜை நடத்தபடுகிறது.
எப்படி செல்வது:
இந்த திருத்தலதமானது காட்டு மன்னர் கோயிலில் இருந்து அயிந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த தலம் கொள்ளிட ஆற்றங்கரையில் உள்ளது. இந்த கோவிலுக்கு காட்டு மன்னார் கோயிலில் நிறைய பேருந்துகள் உள்ளன.

வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இலங்கையில் வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.
இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.
ஆலய வரலாறு :
பருத்தித்துறை, புலோலியில் “வராத்துப் பழை” என்கின்ற சிறிய கிராமம் உண்டு. இக்கிராமத்தில் கண்ணனையே அனுதினம் பூஜித்து வந்தார் வல்லிநாச்சியார் எனும் மாதரசியாவார். இவருக்கு குழந்தைச் செல்வம் இன்மையால் ஸ்ரீ நாரயண மூர்த்தியிடம் தமது குறையை நீங்க வேண்டுமென அழுது வேண்டினார். கேட்டவர்க்கு வரம்தரும்; வள்ளல் மாயவன், அவர் கனவில் தோன்றி “ நீ, உடனே கற்கோவளம் கடற்கரைக்கு வா” எனக்கூறி அருள, அம்மையாரும் அவ்வண்ணம் அங்கே சென்றார்.
என்னே! ஆச்சரியம், கடலில் அலை நடுவே மச்ச உருவில் (மீன்) துள்ளிவிளையாடிய கண்ணன், பின்னர் குழந்தையாகி, அம்மையாரின் மடியில் விழுந்து தவழ்ந்து நின்றார். சுற்றி நின்ற மக்கள் பரவச நிலை எய்தினர். அப்போதுதான் ஒரு புதுமை நிகழ்ந்தது. கண்ணன் திடீரென ஸ்ரீ சக்கர வடிவம் கொண்டான்.
பின்னர் அனைவருமே வல்லிநாச்சியாரின் கருத்திற்கேற்ப ஸ்ரீ சக்கரத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊருக்குக் கொண்டு செல்லலாயினர். வழியில் தாகசாந்திக்கு என அடியார்கள் பல்லக்கை இறக்கி நீர் அருந்தி முடிந்ததும், மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. ஸ்ரீ சக்கரம் அங்கேயே நிலையாய் இருந்து விட்டது. அந்த இடமே தற்போது கோயில் கொண்ட ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக் கோவிலும் ஆகும்.
இன்று காண்போர் வியக்கும் வண்ணம் மிகப்பெரிய இராஜகோபுரம், மூன்று பெரும் வீதிகளுடனும், மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட சிறப்பினை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் கொண்டுள்ளமை கண்ணனின் அருள் மழையில் நனைந்து, நினைந்துருகும் அடியவர்களின் பக்தியினாலேயோகும்.
வல்லிபுர ஆழ்வார் தோன்றி காட்சி கொடுத்தமையினால் கோவில் அருகே சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தே உள்ள சமுத்திரத்தில் தான் சமுத்திர தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அன்றைய தினம் திரளும் பக்தர்கள் தொகை, வேறெங்கும் காணாத வியக்க வைக்கும் காட்சியேயாகும்.
புலோலியூர் தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார் அவர்கள், கோவிலைச் சூழவுள்ள மணல் மேடுகள், அருகேயுள்ள பழைமை வாய்ந்த இடிபாடுகளுடன் கூடிய கற்கள், கண்டு எடுத்த சான்றுப் பொருட்களைக் கொண்டு மணிமேகலையில் கூறப்பட்ட “மணிபல்லவம்” எனும் இடம் இதுவாக இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார். கற்கோவளம் கடற்கரையோரத்தினை அண்டிய பகுதியே சிங்கை நகர் எனும் இராஜதானி அமைந்திருந்ததாக வரலாற்றியலாளர்களும், தமது ஆய்வு மூலம் சொல்கின்றனர்.
திருவிழா :
இக்கோவில் மூலஸ்தானத்தில் சக்கரமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பரிவார மூர்த்திகளாக விநாயகப் பெருமான், நாகதம்பிரான், நாச்சிமார் ஆகியோர் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றனர். புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும்.
இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இவ்வாறு இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.
வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது.4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் கருதப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்கள் மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு செல்பவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபட எண்ணுவார்கள் என்பதுவும் இக்கோவிலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயமாகும.