என் மலர்
கோவில்கள்
செல்வவளம் தரும் பிரசன்ன வெங்கடாஜலபதி, திருச்சி அருகிலுள்ள குணசீலத்தில் அருள்கிறார். இவரை அட்சய திரிதியை அன்று வழிபட்டு வரலாம்.
ஸ்தலவரலாறு :
திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாகக் கொண்ட குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்திலும் அவர் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருந்தார். குணசீலரின் வேண்டுதலின்படி அவ்விடத்தில் எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு "குணசீலம்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு, தால்பியர் தன்னுடன் தங்கும்படி அவரை அழைத்தார்.
குணசீலர் தன் சீடர் ஒருவரிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் அந்தப்பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடர் சிலையைப் போட்டு விட்டு ஓடி விட்டார். பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது.
ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இது பற்றி விசாரிக்க வந்தான். பசுக்கள் ஒரு புற்றின் மேல் பால் சொரிவதைக் கண்டான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். "பிரசன்ன வெங்கடாஜலபதி' எனப் பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம் :
கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. திருப்பதியிலும் பாபாநாச தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நிதி கிடையாது. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியின் இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.
மனக்குழப்பத்திற்கு தீர்வு :
மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.
இதர தெய்வங்கள் :
கோயில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சந்நிதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கு சந்நிதி இருக்கிறது.
கோவில் நடைதிறக்கும் நேரம் :
காலை 6.30- மதியம் 12.30, மாலை 4, இரவு 8.30.
இருப்பிடம் :
திருச்சி - சேலம் ரோட்டில் 24 கி.மீ., தூரத்தில் குணசீலம்.

எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம்.
வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களும், நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்களே ஒழிய, மரணம் சம்பவித்து விடக் கூடாது என்ற அச்சம் கொள்கிறார்கள். ஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், எவராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது மரண பயம்.
எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் ஒன்று உள்ளது. அதுதான் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் ஆகும். இந்த ஆலயத்தில் வாஞ்சிநாத சுவாமி என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். வாழவந்த நாயகி என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார். ‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ‘ஸர்வா’ என்ற முனிவர் துடித்துப் போனார். கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது. அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. இதனால் முனிவர், ‘சிவாய நம.. திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார். ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது. கலியுகத்தில் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம் திருவாஞ்சியம் ஆகும்.
காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.
சந்தன மரத்தை தலமரமாக கொண்ட திருவாஞ்சியம் திருக்கோவில், கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கைக் கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனிச்சன்னிதியில் உள்ள எமதர்மராஜனை வழிபட்டு, பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும்.
அதன் பிறகு மூலவரான வாஞ்சிநாத சுவாமியையும், மங்களாம்பிகைகளையும் தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னிதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வெண்ணெய் விநாயகர், ஜேஷ்டாதேவி, பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள். இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன் கங்கா தீர்த்தத்தின் நீராடிய பலனைத் தந்தருளுகிறாள். தட்சனின் யாகத்திற்கு சென்றதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன் தனது ஒளியை இழந்தான். பின்னர் இந்த தீர்த்தத்தில் நீராடிதான் தனது ஒளியைப் பெற்றான் என்பது தல வரலாறு.
அமைவிடம் :
கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாஞ்சியம். குடவாசலில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள்.
இறைவன் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுவான். அதுவும் அவர்களுக்கு துணை யாரும் இல்லை. தன்னையே நம்பியிருக்கிறார்கள் என்னும் போது, ஓடோடி வந்து உதவி புரிவான். அப்படி ஒரு திருவிளையாடலை ஈசன் நடத்திய இடம்தான், திருச்சி தாயுமானவர் திருக்கோவில்.
காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.
தாய் வரத் தாமதம் :
சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சரியான பாலங்கள் அந்த நாளில் இல்லை. வெள்ளப்பெருக்கால் படகு சவாரியும் நின்று போனது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.
பக்தையின் மன வருத்தம் :
பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன.
அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.

தாயாக மாறிய தாயுமானவர் :
உலகமெங்கும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம். யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா இது. என்ன புண்ணியம் செய்தாலோ அந்தப் பெண்.
காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்படலானார்.
சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.
ஆலய அமைப்பு :
மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற 69-வது திருத்தலமாக திகழ்கிறது.
‘நன்றுமையானைத் தீயதில்லாணை நரைவெள் ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்உள்ளம் குளிரூம்மே’- என்பது திருஞான சம்பந்தரின் பாடல் வரிகளாகும்.
இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள். ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமாகவும், மத்திய நகரமாகவும் விளங்கும் திருச்சிராப்பள்ளிக்கு நாம் வழி சொல்ல தேவையில்லை. நகரத்துக்கு வந்ததும் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டைக்கும், அதில் உள்ள தாயுமான சுவாமி கோவிலுக்கும் அடையாளம் சொல்லவும் அவசியம் இல்லை.
திருவிழா :
திருச்சி தாயுமானவர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடக்கும் வசந்தப் பெருவிழாவில் ஐந்தாம் நாள் ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையைக் கையில் ஏந்தியபடி ரத்தினாவதியும், சுவாமி- அம்பாளும் திருவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து, பூவாளூர் என்ற கிராமத்திற்கு புலம் பெயர்ந்துள்ள ரத்தினாவதியின் வம்சாவழியினர் இந்தத் திருவிழாவை விமரிசையாக நடத்துகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும்.
ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் ஆரம்பத்தில் இருந்தது. ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இந்த கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது.
புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.
அம்பாளின் தோற்றம் :
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அம்பாளின் கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீ கமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு,ஸ்ரீவீரபத்திர மகாகாளியம்மன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோவிலின் சிறப்பு :
குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராண செய்திகளும் உண்டு. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.
திருவிழாக்கள் :
சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்,
கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் ஆகியவை வருடாவருடம் இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பரிகாரம் :
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் கூடிய விரைவில் பலனை கிடைப்பது உறுதி.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தருவதாக பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு நேரம் :
காலை சந்தி பூஜை 6 மணி முதல் 7 மணி வரை, உச்சிக்காலம் பகல் 12 மணி, சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை, அர்த்த ஜாமம் இரவு 9 மணிக்கு என பூஜைகள் தினமும் நடைபெறுகிறது.

தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றிலும் சிறந்து விளங்கும் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மிகுந்த சிறப்பு உடையதாகும்.
காவிரியாறு பாய்ந்தோடும் சோழ வள நாட்டில் ஏராளமான சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் தலம், தீர்த்தம், மூர்த்தி எனும் மூன்றிலும் சிறந்து விளங்கும் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மிகுந்த சிறப்பு உடையதாகும். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற பெருமை இத் தலத்திற்கு உண்டு.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், குழந்தை வரமும், பொன்னும் பொருளும் வழங்கி அருள்வார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது.
இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் திருநாமம் கோமுக்தீஸ்வரர். இவர் மாசிலா மணீசர், கோகழி நாதர், அணைத்தெழுந்த நாயகர், புத்திர தியாகர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இறைவி அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை, ஒப்பிலாள் என்ற திருநாமங்கள் கொண்டு திகழ்கிறாள்.
கோவிலின் முன்பு ‘முக்தி தீர்த்தம்’ என்ற தீர்த்தக் குளம் உள்ளது. தல விருட்சம் அரச மரமாகும். இந்த ஆலயத்தை நந்தித் தலம் என்றும் அழைப்பர். கோவிலில் உள்ளே பிரமாண்டமான நந்தி சிலை ஒன்று உள்ளது. பிற ஆலயங்களில் ஒரே கல்லினால் நந்தி சிலை செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு பல சதுர நீண்ட செவ்வகக் கற்களால் வியத்தகு முறையில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலங்களில் இந்த நந்திக்குத்தான் விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.
முசுகுந்த சக்கரவர்த்தி :
கயிலாயத்தில் இருந்த குரங்கு ஒன்று, மகாசிவராத்திரிஅன்று வில்வ இலைகளை பறித்து கீழே எறிந்து கொண்டிருந்தது. அப்படி எறிந்த வில்வ இலை அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் இறைவன் பெரு மகிழ்ச்சியுடன் அந்த குரங்கிற்கு, மனித உருவத்தைக் கொடுத்து மூன்று உலகங் களையும் ஆளும் சக்கரவர்த்தியாக வரம் அளித்தார். அவரே முசுகுந்த சக்கரவர்த்தி ஆவார். அவர் இறைவன் திருவடி பணிந்து, ‘நான் சக்கரவர்த்தியானாலும் குரங்கின் முகமும், இறைவனை பற்றிய சிந்தனையும் எப்போதும் என்னுடன் இருக்க அருள வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அவரது விருப்பத்தை இறைவனும் நிறைவேற்றி ஆசி வழங்கினார்.
வலாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கு மிக்க துன்பம் கொடுத்ததுடன், இந்திரனை போரில் வென்றான். இதனால் வானுலகை விட்டு இந்திரன் பூமிக்கு வந்தான். இதையறிந்த முசுகுந்தன் பெருஞ்சேனையுடன் சென்று வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார். தனக்கு உதவி செய்த முசுகுந்தனை பாராட்டிய இந்திரன், ‘உனக்கு தேவையானதைக் கேள். உடனே தருகிறேன்’ என்றான்.
முசுகுந்தன், ‘மயன் உனக்கு அளித்த தியாகேசமூர்த்தியை எனக்கு தர வேண்டும்’ என கேட்டார். அதைக்கேட்டு திடுக்கிட்ட இந்திரன், ‘கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது’ என நினைத்தான். உடனே மயனை அழைத்து, மேலும் 6 விடங்கேசர் திருஉருவை உருவாக்கினான்.
இதை முசுகுந்தனிடம் இந்திரன் வழங்க, இறைவன் திருவருளால் உண்மையான திருவிடங்கேசரை அடையாளம் கண்டு அதை தரும்படி கேட்டார் முசுகுந்தன். இதையடுத்து உண்மையான தியாகேச மூர்த்தியையும் கொண்டு வந்து இந்திரன் கொடுத்தான். சப்த விடங்கேசுவரையும் பெற்றுக்கொண்ட முசுகுந்தன், அவற்றைத் தேர் மேல் வைத்து பூமிக்கு கொண்டு வந்தார். பின்னர் திருநாகைக்காரோணம், திருக்ககோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு, திருகாரவாயில் ஆகிய ஆறு இடங்களில் கோவில் அமைத்து எழுந்தருளச் செய்தார்.
பின்னர் வீதி விடங்கதியாகேசரை திருவாரூரில் பொற்கோவில் உருவாக்கி இறைவியோடும், பீடத்தில் எழுந்தருள செய்து ஆகம முறைப்படி ஆறு கால பூஜையையும், விழாக்களையும் நடத்திக் கொண்டு அரசாண்டு வந்தார்.
இப்படி சிறப்பாக ஆட்சி செய்து வந்த முசுகுந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் விடங்க தியாகேசர் சன்னிதிக்கு சென்று தன் மனக் குறையை தெரிவித்தார். புத்திர பாக்கியம் அருளி, தன்னை சிவபக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
அன்று இரவு முசுகுந்தன் கனவிலே தோன்றிய இறைவன், ‘திருவாரூரில் உள்ளதைப் போலவே, திருவாவடு துறையிலும் நான் உள்ளேன். அங்கு சென்று பணி செய்து வா! அப்படி செய்யும் காலத்தில் புத்திரனை பெற்று மகிழ்வாய்’ என்று அருளினார்.
மறுநாள் முசுகுந்தன் சேனைகளுடன் கோமுக்தி வந்து, தீர்த்தத்தில் நீராடி மாசிலாமணி பெருமானின் சன்னிதிக்கு வந்தார். அப்போது இறைவன் திருவாரூரில் உள்ள வன்மிக லிங்கமாக முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். இதனைக்கண்டு முசுகுந்தன் இறைவனைப் போற்றித் துதித்தார்.
அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘முசுகுந்தா! உனக்கு புத்திரப்பேறை அளித்தோம். உனக்கு ஞானத்தை பின்னர் தருவோம். அதுவரை இங்கேயிருந்து நம்மை பூஜித்து வருவாயாக’ என்றது ஈசனின் குரல்.
ஆனந்தம் கொண்ட முசுகுந்தன் அத்தலத்தில் தங்கியிருந்து, திருவாவடுதுறையை காவல்புரியும் சாஸ்தா, காளி முதலான கிராம தேவதைகளுக்கு 10 நாள் திருவிழாக்களை நடத்தினார். மாசிலாமணி பெருமானுக்கு 10 நாள் திரு விழாவை நடத்தினார். 5-ம் நாள் விழாவில் திருநடனம், 9-வது நாள் தேரோட்டம், 10-ம் நாள் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ரதசப்தமி மகோற்சவத்தில் அரசர்கள், வேத விற்பன்னர்களுக்கு சன்மானம் வழங்கினார்.
இறைவனின் திருவருளால் முசுகுந்தனுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சியை மகனிடம் ஒப்படைத்தார். பின்னர் சிவனடியார்கள் கூட்டத்தோடு சேர்ந்து இறைவன் திருவடியில் கருத்தை செலுத்தி இறைவனடி சேர்ந்தார்.
ஆலய அமைப்பு :
கோவிலில் மூலவர் மாசிலாமணி, லிங்கத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சன்னிதியின் இருபுறமும் துவார பாலகர்கள் சிலை உள்ளன. அதன் கீழ் இரு விநாயகர் வீற்றிருக் கிறார்கள். மூலஸ்தானத்திற்கு எதிரில் நந்தியெம்பெருமான் அருள்புரிகிறார்.
ஒப்பிலாமுலையம்மை சன்னிதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை ஜெபமாலை, அபய, வரத ஹஸ்தங்களுடன் நின்ற கோலத்துடன் அன்னை காட்சி தருகிறாள். அம்மன் சன்னிதிக்கு இருபுறமும் ஆடிப்பூர சன்னிதி, பள்ளியறை சன்னிதி உள்ளன. மகா மண்டபத்தின் இடது புற சுவரில் நர்த்தன விநாயகர் அமர்ந்துள்ளார். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இருந்து திருமந்திரம் பாடிய திருமூலருக்கு தனி சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
சம்பந்தருக்கு பொற்கிழி :
ஒரு சமயம் திருஞான சம்பந்தரின் தந்தை வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்கு தங்கம் தேவைப்பட்டது. தந்தைக்கு தேவைப்படும் தங்கத்தை பெற்று தர, திருஞானசம்பந்தர் பெருமுயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து, இறைவனை நினைத்து மனமுருக 11 பாடல்களைப் பாடியுள்ளார்.
‘இடரினும் தளரினும் எனதுரு நோய்
தொடரினும் உனது கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை
மிடரினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறீவ தொன்று யெமக்கில்லையேல்’
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே’
‘ஆவடு துறை அரனே. துன்பம், தளர்ச்சி, வினைத் தொடர்ச்சி ஆகிய எந்த காலத்திலும் உன்னுடைய திருவடிகளைத் தொழுவேன். திருப்பாற்கடலில் அமுதோடு கலந்த நஞ்சை உண்டு, உலகை காத்த வேதியனே! வேள்விக்காக தந்தையார் கேட்கும் பொருளை தனயன் கொடுக்க முடியாத நிலை உண்டானால், அடியவரை இறைவன் ஆட்கொள்ளும் நிலை இதுவோ என்று உலகம் கூறும். அதுவோ உனது இன்னருள்’ என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.
இந்தப்பாடலை பாடிய உடன் சிவபெருமான், பூத கணங்கள் மூலம் ஆயிரம் பொற்காசுகள் நிரம்பிய பொற்கிழியை திருஞான சம்பந்தருக்கு வழங்கினார்.
தம்பதியரை ஒன்று சேர்க்கும் தலம் :
ஒரு முறை சிவன், பார்வதிதேவியை பசுவாக போகும் படி சாபமிட்டார். பசு வடிவம் கொண்ட உமாதேவி, திருவாவடுதுறை காட்டில் மேய்ந்து அங்கிருந்த சிவலிங்கம் மீது பாலை சொரிந்தார். இதையடுத்து உமாதேவியின் பசு வடிவ சாபத்தை நீக்கிய சிவபெருமான், அந்தத் தலத்தில் பார்வதிதேவியை அணைத்தபடி எழுந்தருளினார். இதனால் இந்தப் பகுதி ‘கோமுக்தி நகர்’ என்று பெயர் பெற்றது. சுவாமி அணைத்தெழுந்த நாயகர் என்று அழைக்கப்பட்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் தம்பதியர், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் அவர்கள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. கோவிலின் முன்புள்ள முக்தி தீர்த்தத்தில், அமாவாசை, பிரதோஷம், அஷ்டமி, உத்திராயணம், தட்சிணாயணம், சோமவாரம், செவ்வாய்க்கிழமை, பிரமோற்சவ காலங்களில் நீராடினால், வேண்டிய வரங்களை பெறலாம் என தலபுராணம் கூறுகிறது.
கோவில் பற்றிய தகவல்கள் அறிய +91- 4364 - 232 055 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருவாவடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது.
நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வேளிமலைச் சாரலில் அமைந்துள்ளது குமாரகோவில். இதன் புராணப்பெயர் வேள்வி மலை என்பதாகும். முருகப்பெருமான்– வள்ளியம்மனுக்கு திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை இது என்று கூறப்படுகிறது. எனவே இந்தத் தலம் வேள்விமலை என்றானதாக தல புராணம் தெரிவிக்கிறது. வேள்வி மலையே, தற்போது மருவி வேளிமலை என்று அழைக்கப்படுகிறது. வேளி என்றால் திருமணம் என்று பொருள் உண்டு.
திருமணத் தலம் :
இந்த ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது. மலைக்கோவிலான இந்த ஆலயத்திற்குச் செல்ல 38 திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முருகப்பெருமானின் வலது திருக்கரம் வரத ஹஸ்த முத்திரையுடன் அருள, இடது திருக்கரம் தொங்கவிட்டவாறு காட்சி தருகிறது. வேடனாய் வந்த முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்து சென்றபோது, அவருடன் போரிட்ட மலைக்குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார். நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார்.
மூலவர் முருகப்பெருமான் குமாரசுவாமி என்னும் திருப்பெயரில், 9 அடி உயரத்தில் தென் கிழக்குப் பக்கமாக வீற்றிருக்கிறார். அருகில் வள்ளியம்மை காட்சி தருகிறார். இந்த மூலவர் சுதையால் ஆனவர். உற்சவர் முருகப் பெருமானுக்கு, மணவாள குமரன் என்று பெயர். ஆலயத்தின் வலது புறம் ஆலயத் திருக்குளமும், அதன் முன்புறம் விநாயகப்பெருமான் சன்னிதியும் உள்ளன. மூலவரின் சன்னிதியை அடுத்த, சிவபெருமான் நந்தியோடு காட்சி தருகிறார்.
ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக் கிறார்கள். முருகன், வள்ளியைக் காதலித்த காலத்தில், மலைக்குறவர் கூட்டம் முருகனைத் துரத்தியது. அப்போது முருகப்பெருமான் வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார். எனவே ஆலயத்தில் உள்ள தல மரமாக வேங்கை மரம், முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
விரும்பிய வண்ணம் திருமணம் கைகூட விரும்புபவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் வளம் கூடும்; வாழ்வு சிறக்கும்.
தட்சனுக்கு சன்னிதி :
இந்தக் கோவிலில் தட்சனுக்கு தனி சன்னிதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தரு கிறார். இங்குள்ள தூண் ஒன்றில் பின்னிப் பிணைந்திருக்கும் இரு பெரிய பாம்புகளுக்கு நடுவில் சிவலிங்கம் ஒன்று எழிலாக காட்சி தருகிறது. இதற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபட்டால், நாக தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவிலுக்கு அரைகிலோமீட்டர் தொலைவில் வள்ளியை முருகப்பெருமான் மணம் செய்த மண்டபம் காணப்படுகிறது. அதன் அருகில் விநாயகருக்கு ஒரு கோவிலும், வள்ளியம்மை குகைக்கோவிலும் உள்ளன. குகைக் கோவிலுக்கு அருகில் தினைப்புனம், வள்ளிச் சோலை, கிழவன் சோலை, வட்டச் சோலை முதலியன உள்ளன. வள்ளி நீராடிய சுனைக்கு அருகில் உள்ள பாறையில், விநாயகர், முருகன் மற்றும் வள்ளியின் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் 6–ம் நாள் விழா அன்று வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்கள் ஆலய ஊழியர்களால் வாசிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருப்பெருந்துறை பாகற்காய் சாதம் போல் இந்தக் குமாரக் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் கஞ்சி பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனை வாங்கிக் குடித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த கஞ்சி பிரசாதம் வெள்ளிக்கிழமை மட்டுமே வழங்கப்படும்.
ஆலய சிறப்பு நிகழ்வுகள் :
திருக்கார்த்திகை தினத்தில் மாலையில் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அந்த நிகழ்வின் போது கலந்துகொண்டால், நமது முன் ஜென்ம பாவ வினைகளும் எரிந்து போகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று, இரவில் இங்கு வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தேனும், தினை மாவும், குங்குமமும் பிரசாதமாக வழங்கு கிறார்கள்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நடை பெறும் தேரோட்டத்தின் போது, இத்தல குமாரசாமி பல்லக்கில் புறப்பட்டு, அன்று இரவு கிருஷ்ணன் கோவில் ஆலயத்தில் தங்குவார். மறு நாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுசீந்திரம் சென்று அங்குள்ள பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் குமாரகோவில் திரும்புகிறார்.
அதே போல் நவராத்திரி விழாவின் போதும், குமாரகோவில் முருகப்பெருமான் பல்லக்கில் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரத்தில் இருந்து வரும் முன்னுதித்த நங்கை அம்மன் சகிதம் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் அன்றிரவு குழித் துறையில் தங்கி, மறுநாள் புறப்பட்டு கரமனை என்னும் ஊரில் வெள்ளிக் குதிரையேறி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சியளிக் கிறார்.
குமாரகோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல சவுபாக்கியங் களும் கிடைக்கும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையில் இத்தல முருகப்பெருமானுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் பக்தர்களின் பூக்குவியலுக்கும் வள்ளியம்மையுடன், முருகப்பெருமான் வீற்றிருக்கும் அழகைக் காண இரண்டு கண்கள் போதாது.
குழந்தை வரம் அருளும் கொடுமுடிநாதர் :
கொங்கு நாட்டில் உள்ள 7 சிவ தலங்களில் ஒன்று, கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில். மலை சிகரமே மூலஸ்தானமாக உள்ளதால், இத்தல மூலவர் கொடுமுடிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். அகத்தியருக்கு ஈசன் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளியத் திருத்தலத்தில் இதுவும் ஒன்றாகும்.
இறைவனின் திருமணக் காட்சியைக் காண, பிரம்மதேவர், மகாவிஷ்ணு ஆகியோரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், கரூரில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேளிமலை. நாகர்கோவில்– திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் என்னும் ஊருக்கு முன்னதாக தக்கலை என்ற ஊர் வரும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம்.

ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம் தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயில்.
ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம் தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயில். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். சிவசன்னதி எதிரே நந்தி மட்டுமே இருப்பது வாடிக்கை. இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது. இதற்கு அகத்தியரே பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
மேற்கு நோக்கிய கோயில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதுவும் மேற்கு நோக்கிய கோயிலே ஆகும். 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. ராமலிங்க சுவாமி சன்னதிக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன.
அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றலாம். சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்வர். அன்று இரவில் பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.
இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் "ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது.
அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் "அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. இங்குள்ள அம்பிகைக்கும் பர்வதவர்த்தினி என்று பெயர். ராமபிரானின் பாவம் நீங்கப்பெற்றதால் இத்தலத்திற்கு "பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு.
கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பிதுர்தோஷம் நீங்க சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்யலாம். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பமும் இங்கு உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளன.
பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். மேலும், காசி விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் ஒரு சன்னதியிலும், காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவான் ஆகியோர் இணைந்து மற்றொரு சன்னதியிலும் உள்ளனர். எதிர்மறை கிரகங்களான சூரியனும், சனியும் இணைந்திருப்பதால் சனிதோஷம் உள்ளவர்கள் இந்த சன்னதியை வழிபட்டு பைரவர் அருளால் நலம் பெறலாம்.

இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, திங்கட்கிழமை தோறும் மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சுகம் கிடைக்கும் என்ற அனுபவத்தைச் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாச்சிலாச்சிராமம். நீர் வளமும், நில வளமும் மிக்க இந்த ஊர் தற்போது திருவாசி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ள பெருஞ்சாலை என்ற இடத்தில் இருந்து உள்ளே ஒரு பர்லாங்கு தூரம் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம்.
ஊரின் நடுவில் அமையப்பெற்றுள்ள பெரிய, பழமையான ஆலயம் இது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப் பணிகள் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அருகே திருவானைக்கா, திருப்பைஞ்ஞீலி போன்ற சிவ தலங்கள் இருக்கின்றன.
கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், கற்தூண்கள் நிறைந்த பழமை வாய்ந்த பெரிய மண்டபம் உள்ளது. அதைத்தாண்டி உள்ளே நுழைந்தால் மாடக் கோவிலாக சுற்றுப் பிரகாரத்துடன் கூடிய ஆலயத்தில் முக்கண்ணன் வீற்றிருக்கிறார். ருத்ராட்சப் பந்தலின் கீழ் சிவலிங்கமாக வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மாற்றுரை வரதீஸ்வரர் என்பதாகும்.
நோய் தீர்த்த வரலாறு :
ஒரு காலத்தில் இந்தப் பகுதியை கொல்லி மழவன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனது மகளுக்கு தீராத வலிப்பு, வாதம், வயிற்று வலி இருந்தது. இதனால் அவள் நாளும் அவதிப்பட்டு வந்தாள். மன்னன் தன்னுடைய மகளுக்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்தும், அவளது நோய் தீர்ந்த பாடில்லை. இறுதியில் இறைவன் ஒருவனே சரணம் என்ற முடிவுக்கு மன்னன் வந்தான். படுத்த படுக்கையாக இருந்த தன்னுடைய மகளை இந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று விட்டான்.
இந்த நிலையில் திருஞான சம்பந்தர், தல யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது மன்னனின் மகளுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அறிந்த அவர் வருத்தம் கொண்டார்.
பின்னர் ‘மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே’ என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார் திருஞான சம்பந்தர். இதையடுத்து அந்தப் பெண்ணின் நோய் தீர்க்க சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
இறைவன் நடராஜராக ஆனந்த நடனம் ஆடினார்.
மன்னன் மகளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த நோயை, முயலகன் வடிவமாகத் திரட்டி அழித்து, பாம்பின் மீது நடனமாடினார் சிவ பெருமான். இதையடுத்து வாதம், வலிப்பு, வயிற்று வலி ஆகிய நோய்கள் நீங்கிய மன்னனின் மகள், பூரண குணம்பெற்று எழுந்து நடந்தாள். மேற்கண்ட நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டு, அவற்றை ‘முயலகன் நோய்’ என்று கூறும் வழக்கு பின்னாளில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். இவரது திருவடியில் வழக்கமாக காணப்படும் முயலகன் இல்லை. விரிசடை இல்லாது, ஒன்றிணைந்த தலைமுடியுடன் நாகத்தை காலடியில் போட்டு, ‘சர்ப்ப நடராஜராக’ நடனமாடும் காட்சி இன்றும் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது.
வலிப்பு, வாதம், வயிற்றுவலி போன்றவை மருத்துவத்தால் குணமடையாத நிலையில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சிவனே தஞ்சம் என்று இங்கு வந்து ஒரு மண்டலம் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்து, திரு ஞானசம்பந்தரின் பதிகம் பாடினால் நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிவன் சன்னிதிக்கு வலது புறத்தில் மேற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை வீற்றிருக்கிறார். ‘பாலாம்பிகை’ என்பது அன்னையின் திருநாமம் ஆகும். அன்னை சன்னிதிக்கு எதிரே ‘அன்னமாம் பொய்கை’ என்ற தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன.
அருள் வழங்கும் அன்னை :
அருள் வழங்குவதில் சுவாமிக்கு சளைத்தவள் அல்ல.. இந்த பாலாம்பிகை. பால தோஷம் உள்ள குழந்தைகளின் நோய் நீங்க மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து வந்து, பாலாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், குழந்தைகள் நலம் பெறுவார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அன்னைக்கு பாலாபிஷேகமும் செய்து பலன் பெறலாம்.
திருமணம் ஆகாத கன்னியரும், காளையரும் 5 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வந்து, இங்குள்ள திருக் குளத்தில் நீராடி அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந் தேறும். ஏனென்றால் அம்பிகையும் ஒரு வணிகன் மகளாகப் பிறந்து, இத்தல வன்னி மரத்தடியில் தவமிருந்து, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாகத் தலபுராணம் சொல்கிறது.
பொன் பெற்ற சுந்தரர் :
சிவபெருமானின் கயிலாய நண்பர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் பூலோகத்தில் சுந்தரராக அவதரித்ததில் இருந்து அவரிடம் விளையாட்டுக் காட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார் ஈசன். அப்படி ஒரு விளையாட்டு, சோதனை நடந்த தலம் இதுவாகும்.
ஆம்! சுந்தரர் ஒரு முறை, சிவபெருமானிடம் பொன் கேட்டுப் பதிகம் பாடினார். பதிகப் பாடல்களைக் கேட்ட சிவபெருமான், சுந்தரருக்கு பொன் வழங்காமல் மவுனம் காத்துக் கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட சுந்தரர், ‘இங்கு சிவன் இருக்கிறாரா? இல்லையா?’ என்று கேட்கும் விதத்தில் ஒரு பதிகப் பாடலைப் பாடினார். இதையடுத்து சிவபெருமான் ஒரு பொற்கிழியை, சுந்தரர் முன்பாக பரிசாக வைத்தார்.
ஆனால் அந்தப் பொன் உண்மையானதுதானா? என்ற சந்தேகம் சுந்தரருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக இரண்டு பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்த தங்கத்தை உரசிப் பார்த்து, அது தரமான தங்கம் தான் என்று சொன்னார். உடன் வந்தவரும் அதை உறுதிப்படுத்தினார். அவர்கள் யார் என்று சுந்தரர் அறியும் முன்பாக, இருவரும் மறைந்து விட்டனர்.
பின்னர்தான் தங்கத்தை உரசிப் பார்த்தவர் சிவபெருமான் என்பதும், அவருக்கு துணையாக வந்தவர் விஷ்ணு பகவான் என்பதும் சுந்தரருக்கு தெரியவந்தது. இதையடுத்து தன் தவறை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானை புகழ்ந்து சில பதிகங்களைப் பாடினார். எனவே இத்தல இறைவனுக்கு ‘மாற்றுரை வரதீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, திங்கட்கிழமை தோறும் மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சுகம் கிடைக்கும் என்ற அனுபவத்தைச் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் புராதனப் பெருமையும், நோய் தீர்க்கும் சிறப்பும் கொண்ட இந்தத் திருக்கோவில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

ஆடி மாத விசேஷ நாட்களில் எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.
சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள். முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது.
இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம். இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர்.
இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.
கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன். `இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.

மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதை என்ற சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்பது கடந்த வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.
வைணவ, சைவ ஆலயங்கள், புகழ்பெற்ற அம்மன் கோயில்கள் கர்நாடகாவில் புராண காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மைசூரில் குடி கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு தனி இடம் உள்ளது.
மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதை என்ற சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்பது கடந்த வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது. மாநிலத்தில் அரண்மனை நகரம் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் மைசூரு மாநகரை காண கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், பலவெளி நாடுகளில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
மைசூரு மாநகரில் கால்பதிக்கும் ஒவ்வொருவரும் முதலில் கைகூப்பி வணங்குவது சாமுண்டீஸ்வரிதேவி குடி கொண்டிருக்கும் சாமுண்டிமலையை நோக்கிதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 486 அடி உயரத்தில் செங்குத்தாக காணப்படும் சாமுண்டிமலை தேவி குடி கொண்டிருக்கும் கோயிலாகவுள்ளது.
மைசூரை காண வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாராக இருந்தாலும், முதலில் சாமுண்டீஸ்வரி தேவியின் தரிசனம் பெற்றபின்தான் பிற சுற்றுலாதலங்களை கண்டு ரசிப்பார்கள். மைசூர் மாநகரம் ஆதி, மத்திய, அந்தியா என்ற முப்பெயரில் அழைக்கப்படுகிறது. கண்நோக்கி பார்க்கும் போது முதலில் தெரிவது சாமுண்டிமலை மட்டுமே.
அதன் எழிலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மேலே சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க தோன்றும். மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறார். கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்திசிலையும், எதிர் வரிசையில் மஹிசாசுரன் சிலையும் வரவேற்கும். கஷ்டத்தோடு வரும் பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறார். மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை கர்நாடக மண்ணை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை.
ஸ்தல புராணம் :
தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்ற பெயரில் இருந்தது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனின் தவத்திற்குமெச்சிய சிவன், நேரில் வந்து காட்சி கொடுத்ததுடன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். சிவனை அடிபணிந்த மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அவனின் வேண்டுதலை ஏற்று சாகாவரத்தை சிவன் வழங்கினார்.
சிவனிடம் வரம் பெற்றம ஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையை தாங்க முடியாமல், மக்கள் தேவர்களிடம் முறையிட்டனர். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சிவனிடம் சென்ற தேவர்கள், நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். அவனுக்கு கொடுத்த வரத்தை திரும்ப பெறுங்கள் அல்லது அவனை அழிக்க மாற்று வழி சொல்லுங்கள் என்று முறையிட்டனர்.
தேவர்களிடம் பேசிய சிவபெருமான், நான் வரம் கொடுக்க மட்டுமே பிறந்தவன். கொடுத்தவரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதே சமயம் என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.
அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும் என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண்பக்தர்கள் பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்க தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரனின் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் பிறந்தாள்.
மஹிஷாசூரன் வதம் :
சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார்.
அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள். சாமுண்டீஸ்வரி தேவியை யதுகுலத்தை சேர்ந்த உடையார் பேரரசர்கள் தங்கள் குலதெய்வமாக போன்றி வணங்கி வருகிறார்கள். சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலம் வரை மன்னர் குடும்பத்தின் குல தெய்வமாக தேவி திகழ்கிறார். அந்த குடும்பத்தை மட்டுமில்லாமல், மாநிலத்தையும் ஆசீர்வதித்து வருகிறாள்.
உடையார் பேரரசர்கள் கடந்த 1823ம் ஆண்டு திராவிட கலையில் கோயில் அமைத்தனர். பின் 16 அடி உயரம், 26 அடி நீளத்தில் நந்திசிலை அமைக்கப்பட்டது. கோயிலுக்கு வரமலையின் நான்கு திசையிலும் பாதை அமைத்துள்ளனர். கடந்த 1827ம்ஆண்டு கிருஷ்ணராஜ உடையார் கோயில் கோபுரத்தில் 7 தங்ககலசங்கள் பொருத்தி கும்பாபிஷேகம் நடத்தினார்.
ஆடிமாதம் வரும் 3வது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி தேவி பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டுகள் ஆடிமாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மூன்றாவது வெள்ளிக்கிழமை தேவிபிறந்தநாள் என்பதால் மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது.
இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.
ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. ‘இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டின.
அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்’ என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன.
மார்கண்டேய சங்கு தீர்த்தம் :
மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார்.
இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.
ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான்.
பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.

1-9-2011 அன்று உருவான சங்கு
அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.
இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள்.
சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ வாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது. அந்த சங்கைக் கொண்டுதான், சங்கு தீர்த்த புஷ்கர மேளாவின் போது இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
இந்த ஆண்டு 2.8.2016 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் குரு கன்னி ராசியில் பிரவேசமாகிறார். இதை உத்தேசித்து 31.7.2016 மாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட உள்ளன. 2.8. 2016 அன்று காலை 9 மணிக்கு முடியும் இந்த பூஜையை அடுத்து, சங்கு தீர்த்தக் குளத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 6 மணிக்கு லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெறும். அன்று இரவு திருக்கல்யாணம் நடந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா வருவார்கள்.
நால்வர் கோவில் :
சைவ சமயக் குரவர்கள் திருக்கழுக்குன்றம் அடைந்து வேதகிரி மலையில் ஏற நிதானித்து, கீழேயே நின்று பாடல் பாடினர். இந்த இடம் நால்வர் கோவில் என்று வழங்கப்படுகிறது. மலைமீது சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் என்ற ஆலயமும், ஊருக்குள் திருபுரசுந்தரி உடனுறை பக்தவசலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. இவை முறையே மலைக்கோவில், தாழக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

மலைக்கோவிலுக்குச் செல்ல 565 படிகள் உள்ளன. இறைவன் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். கருவறை, கருங்கற்பாறைகளால் ஆனது. உட்சுவரில் சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால் உள்ளனர். வடக்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உள்ளார். முதல் பிரகாரத்தில் விநாயகரும், சொக்கநாயகி அம்மனும் அருள்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
நதிகளின் நீராடல் :
இத்திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா நடைபெறுவதற்கு இன்னொரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது.
அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்திரா, தென் குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை, பாலி பிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை, வேத்தராவதி, கைதாரிணி, வைகை முதலிய நதிகளுக்குள், யார் உயர்ந்தவர்கள் என்ற சண்டை உருவானது. ஒவ்வொருவரும் தாங்களே உயர்ந்தவர்கள் என்று இறுமாப்பு கொண்டனர்.
அனைத்து நதிகளும் இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி வேதகிரீஸ்வரரை வழிபட முடிவு செய்தன. அதன்படி இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டன. அப்போது இறைவன் அவர்கள் முன்பாக தோன்றி, ‘இத்தலத்தில் தேங்கி நிற்கும் சங்கு தீர்த்தம், இறைவனான எனக்கு அபிஷேகம் செய்ய சங்கை உற்பத்தி செய்கிறது.
அதைக் காட்டிலும் நீண்ட நெடிய நதிகளாகிய நீங்கள் உயர்ந்தவர்களா? என்பதை முடிவு செய்யுங்கள்’ என்று கூறி மறைந்தார். நதிகள் அனைத்தும் வெட்கி தலைகுனிந்தன. பின்னர் தாங்கள் இறுமாப்பால் செய்த பாவங்கள் விலக இந்த தீர்த்த குளத்தில் நீராடின. அந்த தினம் குரு பகவான் கன்னி ராசியில் புகுந்த நாளாகும். எனவே இந்த நாளில் அனைத்து நதிகளும், இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடுவதாக ஐதீகம்.

செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.
தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்றுதான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம். இத்தலம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு "பொன்பதர் கூடம்' என்று பெயர் வந்த காரணமே அலாதியானது.
ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.
மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.
பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் "பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் "பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே "பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.
ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாய் தான் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்று சில தருணங்களில் காட்சியளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக ராமாயண காவியம் இயம்பும். அப்படி புராணக் கதாபாத்திரங்களுக்கு மஹாவிஷ்ணுவாக காட்சி தந்த ராமர், தேவராஜ முனிவர் என்ற அடியாரின் வேண்டுகோள்படி பூலோகத்தில் மக்களுக்கும் காட்சி தந்தருளினார். பகவான் இத்தலத்தில் ராமபிரானாக நான்கு திருக்கரங்களுடன் கோயில் கொண்டுள்ளார் என்பது தலவரலாறு.
இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு அருள்பாலித்து வருகிறார். உற்சவமூர்த்தியும் அதே திருக்கோலத்துடன் ராமகாவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.
ஸ்ரீ சதுர்புஜ கோதண்டராமர் கைங்கர்ய சபா உபய திருப்பணிக் கமிட்டி என்ற அமைப்பின் மூலம் இத்திருக்கோயிலுக்கு புதியதாக கொடிமரமும் அதற்குண்டான செப்புக் கவசமும் செய்யப்பட்டுள்ளது.
நூதன துவஜஸ்தம்ப பிரதிஷ்டை மற்றும் மஹாசம்ப்ரோக்ஷணம் 26.10.2015 அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. அன்று பிற்பகல் வைதீக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
இத்திருத்தலத்திற்கு செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.
இந்த கோவில் பற்றிய தகவல்கள் அறிய இந்த எண்ணில் 94445 18810 தொடர்பு கொள்ளலாம்.