என் மலர்
முக்கிய விரதங்கள்
சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை.
அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை கிடைக்கின்றது. எனவே, பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபடுகின்றனர்.
சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் நமது வீட்டில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது முதல், விரதமிருந்து காவடி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது போன்றவை நடைபெறும்.
ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதனால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். துன்பம் விலகும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விரதமிருந்து எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.
இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பாவையினால் சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று பெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை:
உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டும் கடைபிடிக்கும், ‘அவ்வையார் நோன்பு’ பிரசித்தி பெற்றதாகும். கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணமான சுமங்கலி பெண்கள் இல்லறம் இனித்திருக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கணவனின் ஆயுள் பலம் கூடவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
அவ்வையார் நோன்பு இருக்கும் பெண்கள், ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல், மூத்த சுமங்கலி பெண் ஒருவரது வீட்டில் ஒன்றாக கூடுவார்கள். பச்சரிசி மாவு, வெல்லம் முதலியன கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்து பூஜை செய்வார்கள். அப்போது அவ்வையார் மற்றும் அம்மன் கதைகளை, மூத்த சுமங்கலிகள் கூற, நோன்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவரும் அதை பயபக்தியுடன் கேட்பார்கள். பின்பு கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து இறைவனை வழிபட்ட பின், அதை மீதமின்றி பெண்கள் அனைவரும் உண்பார்கள். இந்த நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. கொழுக்கட்டையுடன், கூழ் படைத்து வழிபடும் பெண்களும் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகில் உள்ள ஆதிச்சநல்லூர், அழகிய பாண்டியபுரம் அருகில் உள்ள குறத்திமலை, முப்பந்தல் ஆகிய இடங்களில் அவ்வையாருக்கு கோவில்கள் அமைந்துள்ளன. ஆரல்வாய்மொழி அருகில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்தில், அவ்வையாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. திருமண வரம், குழந்தை வரம், மங்கலமான மண வாழ்க்கை, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட, ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் அம்மன் கோவிலில் பொங்கலிட்டு, இரவு மூத்த சுமங்கலி வீட்டில் நடைபெறும் நோன்பில் கலந்து கொண்டு இரட்டிப்பு பலனை அடையலாம்.

குரு பூர்ணிமா அல்லது குரு பவுர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) குரு பவுர்ணமி தினம்.
“குரு பூர்ணிமா அல்லது குரு பவுர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கூறுகிறது.
குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.
குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பவுர்ணமி நாளில் (ஆடிப் பவுர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோக ரகசியமாகும்.
குரு என்பவர் நம் மன இருளைப் போக்குபவர். நம் மனத்தை இருள் சூழ்ந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? நம்முடைய உண்மையான உருவத்தை, நிலையை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நம் உடலே நாம் என்று திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
“நீ உடல் அல்ல அதற்கும் அப்பாற்பட்டவன். சுத்தப் பேரானந்த பெருநிலையே நீ. எங்கும் நீக்கமற நிறைந்த, உருவமற்ற, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட, பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட சச்சிதானந்த பேரின்பப் பேருணர்வின் ஒரு துளி நீ” என்று நம்மை உணர வைக்கிறார் நம் குரு.
அவர் ஏற்கனவே அந்த உணர்வினைப் பெற்றவர். அந்த அனுபவத்தின் உதவியுடன் நீயும் அதைப் பெற வழிமுறைகளைக் காட்டுகிறார். அந்த உணர்வை நாம் பெற்ற உடன், நமக்கு ஆத்ம விழிப்பு உணர்வு நிலை ஏற்படுகிறது. அது நம்மை மீண்டும் இந்த உலகில் பிறவா நிலைக்கு இட்டுச் செல்கிறது. நாம் பிறவி எடுத்ததன் குறிக்கோள் இந்த ஆத்ம உணர்வை பெறுவது தான். அதைப் பெற நமக்கு நம் குரு உதவுகிறார். எனவே அந்த நன்றிக் கடனைச் செலுத்த ஆண்டிற்கு ஒரு முறை குரு பூர்ணிமா நாளன்று அவரை சிறப்பாக வழிபடுகிறோம்.
ஆகையால் குரு பூர்ணிமாவன்று நம் குருவை மட்டுமின்றி அவரது குரு பரம்பரையையே வணங்கிப் போற்ற வேண்டும். நம் குருவிற்கும் ஒரு குரு உண்டல்லவா? ஆக நம் குருவிற்கு ஒரு குரு, அவருக்கும் மேலே ஒரு குரு என்று நம் குரு பரம்பரை முழுவதையுமே போற்றி வழிபடும் நாள் குரு பூர்ணிமா. இதை “வியாச பூர்ணிமா” என்றும் கூறுவார்கள். வியாசர் விஷ்ணுவின் அவதாரம். குரு பூர்ணிமா அன்று தான் அவர் தோன்றினார் என்றும், அவர் பிரம்ம சூத்திரம் எழுத ஆரம்பித்த நாள் என்றும் கூறப்படுகிறது.
இறைவனின் மூச்சுக் காற்றாகிய வேதத்தை நமக்குக் கொடுத்தவர் வியாசர். மகாபாரதம், பதினெட்டு புராணங்களை இயற்றியவர். எனவே அவரில் ஆரம்பித்து நம்முடைய குரு வரை அனைவரையும் மனம், மொழி, மெய்யால் வணங்க வேண்டும்.
ஆன்மீகத்தில் ஒரு பழமொழி உள்ளது இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது என்பதாகும். இதனை கூர்ந்து நோக்கினால் குருவின் வலிமை தெரியும்.
சூரியனின் ஒளிக்கதிரை எப்படி சந்திரன் பிரதிபலித்து நமக்கு ஒளி தருகிறதோ அதே போல் குருவானவர் இறைவனின் அருள் ஒளியைப் பிரதிபலித்து நமக்கு தருபவர். குரு ஒரு பக்தனிற்கும் இறைவனிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரு கருவியாக ஒரு பாலமாக செயல்படுபவர்.
ஆன்மீக அன்பர்கள் குரு பௌர்ணமி நாளில் வியாச முனிவருக்கோ அல்லது தங்கள் ஆன்மீக குருவிற்கோ சிறப்பு பூசைகள் செய்வது வழக்கமாகும். ஆன்மீக தேடல் உள்ளவர்கள் இந்நாளில் தங்கள் பயிற்சியை தொடங்குவது சிறப்பைத் தரும். குரு பவுர்ணமி தினத்தன்று அனைவரும் மனதளவில் தங்களுடைய ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டவருக்கு பூஜைகள் செய்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட வித்தைகளை முழுமையாக உள்வாங்கும் பாக்கியத்தை பெற முடியும்.
எனவே குரு பவுர்ணமி தினமான நாளை, நீங்கள் யாரையெல்லாம் உங்களது குரு என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு உரிய மரியாதை செய்து போற்றி வழிபடுங்கள். இந்த வழிபாடு உங்களுக்கு இந்த பிறவியில் தேவையானதை தந்து உங்களை நிச்சயம் முக்தி பாதைக்கு அழைத்து செல்லும்.
சாய் சத்சரிதம் படியுங்கள் :
குரு பூர்ணிமா தினத்தன்று ஸ்ரீ சாய் சத்சரிதத்தை முழுமையாகவோ அல்லது ஓரிரு அத்யாயங்களோ படிக்கலாம். குறிப்பாக பிரம்ம ஞானத்தைப் பற்றி பாபா கூறும் ஸ்ரீ சாய் சத்சரிதாவின் 16, 17 அத்யாயங்களை படிக்க லாம். பாபாவிற்கு பிடித்தமான ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்யலாம். முடியாவிட்டால் பாராயணம் செய்யப்படுவதை செவிமடுத்து கேட்க வேண்டும்.

அம்பிகையைக் குறித்து மேற்கொள்ளும் விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம்.

புரட்டாசி மாதத்தின் வளர்பிறை (சுக்ர பட்சம்) பிரதமை முதற்கொண்டு நவமி முடிய அனுசரிக்கப்படுவது நவராத்திரி விரதம்.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் - பிரதமை தொடங்கி பகலில் உணவு இன்றி - மாலையில் பூஜை முடித்தபின் நிவேத்ய பிரசாதம் உண்டு பால் பழம் அருந்துவர்.
ஓன்பதாம் நாளாகிய நவமியன்று உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று காலையில் வழிபாடு செய்து மங்களகரமாக விரதத்தினை நிறைவு செய்வர்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் - நவராத்திரி நாட்களில் - ஒரு நேரம் உணவு உண்டு பக்தி சிரத்தையுடன் அம்பிகையை இதயக்கமலத்தில் இருத்தி, தியானிக்க - பரிபூரண அருளைப்பெற்று நல்வாழ்வினை எய்தலாம்.
மகிஷனை வென்று நல்லோரைக் காத்தருளி அம்பிகையை போற்றும் பக்தியின் வெளிப்பாடு தான் - நவராத்திரி கொண்டாட்டங்கள்.
உண்மையான அன்புடன் எளிமையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளை பெறலாம் என்பது வெளிப்படை.
மனிதனின் அத்யாவசியங்களான கல்வி, செல்வம், வீரம் இந்த மூன்றனையும் அருளும்படி அன்னை ஆதிபராசக்தியை அவற்றுக்கு அதிபதிகளான ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீதுர்கை என்னும் அம்சங்களாக பாவித்து வழிபடுதலே நவராத்திரியின் நோக்கம்.

எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும். ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
சிற்றுண்டிகளை சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது
அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவு உண்பது, நீர், பால், பழம், ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி விரதம் இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். எந்த முறையை பின்பற்றினாலும், பலன் கிடைப்பது நிச்சயம்.
* ஞாயிற்று கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.
* திங்கள் கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
* செவ்வாய் கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
* புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
* வியாழன் கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
* வெள்ளி கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
* சனி கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர்.
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது. மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.
சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம். மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.
அப்போது,
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு. துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர். துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்...
சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.
பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.
இவ்வுலகத்தில் பணம் மட்டுமே வாழ போதும் என பலர் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் வேண்டும். எனவே தான் முப்பலன் எனப்படும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய சனிக்கிழமை விரதம் தருகின்றது.
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே.
எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.
தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

நோயின்றி வாழ விரும்பும் குறிப்பாக மருத்துவத்துறையில் இருக்கும் அனைவரும் ஸ்ரீதன்வந்தரியை பூஜித்து நமஸ்கரித்து நன்மைகளை அடையலாம்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பல அவதாரங்களுள் தன்வந்தரியின் அவதாரமும் ஒன்று. ஸ்ரீமகாவிஷ்ணுவின் விருப்பப்படி கஸ்யபரின் புதல்வர்களான தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிருதத்தை எடுப்பதற்காக பாற்டலைக் கடைந்தனர்.
அப்போது ஆலாஹலம் என்னும் விஷம் காமதேனு பசு, குதிரை, நான்கு தந்தமுள்ள வெள்ளை யானை, பாரிஜாதம் என்னும் வருஷம், அப்ஸரஸ் ஸ்த்ரீகள், ஸ்ரீமகாலட்சுமி முதலான பலவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. இறுதியாக கையில் அமிர்தம் நிரம்பிய கலசத்துடன் சங்கு சக்ரத்துடன் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாக ஓர் மகாபுருஷன் தோன்றினார்.
அனைவரும் நமஸ்கரித்து அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டனர். இவரே ஸ்ரீதன்வந்தரி. இவரே ஆயுர்வேத சாஸ்திர ஸ்தாபகர், ஆவார். தன்வந்திரி ஜெயந்தி தினத்தன்று விரதமிருந்து அவரை வழிபட்டால், நல்ல உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை அமையும்.
அன்று விரதமிருந்து ஸ்ரீதன்வந்தரி பகவானின் படத்தை வைத்து, பூஜை செய்து அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத அனைத்து நோய்களும் உடனே விலகும். நமக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பவர் மருத்துவர்தான் என்றாலும், தன்வந்தரியே மருத்துவர் வடிவில் வந்து நோயை குணப்படுத்துகிறார்.
ஆகவே நோயின்றி வாழ விரும்பும் குறிப்பாக மருத்துவத்துறையில் இருக்கும் அனைவரும் ஸ்ரீதன்வந்தரியை பூஜித்து நமஸ்கரித்து நன்மைகளை அடையலாம்.