என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம் சிவ ராத்திரி.
    ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம் சிவ ராத்திரி. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதும், கண்ணப்ப நாயனார் தமது கண்ணை ஈசனுக்குப் பொருத்தி முக்தி அடைந்ததும், பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்ததும், மார்கண்டேயனுக்காக யமனையே சிவ பெருமான் எதிர்த்ததும், பார்வதி தேவி அருந்தவம் இயற்றி
    சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றதும் இப்புண்ணிய தினத்தில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
    விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். மாசி மகம், தேய்பிறை சதுர்த்தசி செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் நாளில் நோற்கப்படும் சிவராத்திரி விரதம் மூன்றரைக் கோடி பலன் தரும் என்பர். அன்று சிவ லிங்கம், விபூதிப்பை, ருத்ராட்சம், பொற்காசு, பசு, பூமி ஆகியவற்றைத் தானம் செய்தால் நல்லது என்று கூறுவர். குருவிடமிருந்து சிவ தீட்சை பெற்று சிவ பூஜை தொடங்கவும் உகந்த நாள் சிவராத்திரி.
    சிவராத்திரி விரதம் இருக்க முக்கிய நியமமே விழித்திருப்பதுதான். சிலர் சிவராத்திரியன்று இரவு மட்டும் விழித்திருந்து, மறுநாள் காலையிலேயே உறங்கி விடுவர். இது சரியான விரத முறை அல்ல. சிவராத்திரிக்கு முதல்நாள் மதியம் ஒருவேளை அன்னம் உட்கொள்வதுடன், சிவராத்திரியன்று உபவாசமாகவும் (உண்ணாமலும்), இரவில் உறங்காமலும் இருக்க
    வேண்டும். சிவராத்திரி அன்று விடியும் முன்பு நான்கு மணிக்கு துயிலெழுந்து சரீர சுத்தி ஸ்நானம், சந்தியா வந்தனம் செய்து, பிறகு காலையிலேயே சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
    சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் சிவ தரிசனமும், திருஷ்டியும், சகல பாவ நிவர்த்தியும், சகல துக்கம், தரித்திரம், சோகம், ரோகம் போன்ற சகல கஷ்ட நிவர்த்தியும், முடிவில் சிவ சாயுஜ்யம் என்ற முக்தியும் கிட்டும். விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின்,
    ஓம் ஸ்ரீ பவாய நம:
    ஓம் ஸ்ரீ சர்வாய நம:
    ஓம் ஸ்ரீ ருத்ராய நம:
    ஓம் ஸ்ரீ பசுபதயே நம:
    ஓம் ஸ்ரீ உக்ரயே நம:
    ஓம் ஸ்ரீ மகாதேவாய நம:
    ஓம் ஸ்ரீ பீமாய நம:
    ஓம் ஸ்ரீ ஈசாய நம:
    எனும் எட்டு நாமாக்களையாவது ஓயாமல் ஜபித்தல் வேண்டும்.
    எல்லா மனிதர்களுக்கும் இக்கட்டான சூழ் நிலை வருவதுண்டு. அந்நேரத்தில் நம்மால் சாப்பிடவோ, தூங்கவோ முடியாமல் போகலாம். இதுபோன்ற விரதப் பயிற்சிகள் அந்நேரத்தில் கை கொடுக்கும். அதுமட்டுமல்ல, அறிவியல் ரீதியாக, விரதம் இருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் விழித் திருப்பதும் உடல் நலனுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.
    மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.
    தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.
    பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. அது தான் கருட பஞ்சமி விரதம்.
    இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள்.

    பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது. அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது. அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது.

    பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

    1. கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    2. நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.
    அம்பிகையை, அம்மனை, அன்னையாய்ப் போற்றும் பராசக்தியை நம் இல்லங்களில் வழிபடவும் ஆராதிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.
    இல்லத்தில் சக்தி பூஜை
     
    குறைந்தபட்சம் காலை மாலை வேளைகளில் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி முதலிய செம்மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். குறிப்பாகச் செவ்வாய், வெள்ளி இரு தினங்களும் அம்பிகைக்குப் பூஜை செய்ய ஏற்ற தினங்கள்.

    நிவேதனம்
     
    `பாயஸான்னப் பிரியை,‘‘ என்று அன்புடன் அழைக்கப்படும் அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசத்துடன் வடையும் நிவேதனமாக அளிக்கப்படுகிறது.
     
    குத்து விளக்குப் பூஜை
     
    ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறுகின்றன. திருமணமான பெண்களும், இளம் பெண்களும் குத்து விளக்கேற்றி வைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து குங்குமம், மற்றும் மலர்களால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பூஜிப்பது நன்மை தரும் என்பது நம்பிக்கை. அஞ்ஞான இருளை அகற்றி வாழ்வில் ஒளிபரப்பும் திருவிளக்கைப் பராசக்தி ஸ்வரூபமாகப் பார்க்கிறோம்.
     
    ஸ்ரீவித்யா உபாசனை
     
    இன்னும் ஒருபடி மேலே போய் அம்பிகையை ஸ்ரீசக்ரவடிவில் அமைத்து, ஸ்ரீவித்யா உபாசகர்களாகத் தினம் நியமங்களின்படி ஆராதிப்பவர்களும் உண்டு. இதற்குத் தேர்ந்த பக்தியும், தினசரி நியமங்களும் மிகவும் தேவை. நன்கு கற்றுத் தேர்ந்த குருவிடம் பயின்ற பின்னரே இவ்வகை ஆராதனை (உபாசனை) செய்ய முடியும்.
    ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
    வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.

    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

    இந்த விரத வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
    சனி பகவானுக்கு உகந்த விரதங்களை எப்படிகடைப்பிடிப்பது என்று பார்க்கலாம்.
    * சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.

    * சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

    * சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.

    * சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணை விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம். அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

    * சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

    * சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.

    * எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

    * ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    * அவரவர்களது பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களை தரும்.
    ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், தடைப்படும் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும்.
    பூஜை முறை பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும்.

    ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்க வேண்டும்.

    அத்துடன் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். கும்பத்திற்கு சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜை முடிந்தவுடன் அன்னதானம் செய்ய வேண்டும்.

    நடுவராகப் பொறுப்பேற்பவர்கள், அச்சமின்றி, நடுநிலை தவறாமல், நேர்மையுடனும் நீதியுடனும் தங்கள் தீர்ப்பைச் சொல்ல வேண்டும். அதை தவிர்த்த ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் அவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதையே சித்ரநேமி பெற்ற சாபமும், விமோசனமும் உணர்த்துகிறது.
    கயிலாயத்தில் ஒரு நாள் சிவபெருமானும், பார்வதியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடுவதைமுனிவர்கள், சிவகணங்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டிற்கு சிவகணங்களில் ஒருவனான சித்ரநேமி என்பவன் நடுவராக இருந்தான்.

    சொக்கட்டான் விளையாட்டில் சிவபெருமான், பார்வதி இருவரும் நீண்ட நேரமாகச் சமநிலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு, அங்கிருந்த அனைவருக்கும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

    இந்த நிலையில் பார்வதி, சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாகக் காய்களை நகர்த்துவதற்குச் சிறிது நேரம் கணக்கிட்டுப் பார்த்து காலதாமதம் செய்தார். அதனைக் கண்ட சித்ரநேமி, அந்தவிளையாட்டில் சிவபெருமான் வெற்றி பெற்றதாக அறிவித்தான்.

    அதனைக் கேட்டுக் கோபமடைந்த பார்வதி, ‘சித்ரநேமி! விளையாட்டு முடிவடையாமல் இருக்கும் போது, இறைவன் வெற்றிபெற்றதாக நீ எப்படிச் சொன்னாய்?’ என்று கேட்டார்.

    ‘அன்னையே! இறைவன் விளையாட்டில் சொக்கட்டானை உடனுக்குடன் உருட்டி விடு கிறார். ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் சொக்கட்டானை உருட்டுவதற்கு கால தாமதம் செய்து கொண்டிருந்தீர்கள். இந்த முறை சொக்கட்டான் உருட்டுவதற்கு, அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள். அதனால்தான் இறைவன் வெற்றி பெற்றதாகச் சொல்ல வேண்டியதாகி விட்டது’ என்றான் சித்ரநேமி.

    அவனது பதிலை பார்வதியால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. ‘சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாக, காய்களைநகர்த்துவதற்குக் கணக்கிட்டு பார்ப்பது வழக்கம்தானே? இதனைக் காலதாமதம் என்று நீ எப்படி முடிவு செய்தாய்?’ என்றுகேட்டார்.

    சித்ரநேமி, ‘தாயே! சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பு சிறிது நேரம் சிந்தித்து, பின் விளையாடுவது தவறில்லை. ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள். இந்த முறை மிக அதிகமாகக் காலதாமதம் செய்தீர்கள், அதனால்தான் நான் இறைவன் வெற்றி பெற்றதாகச் சொன்னேன்’ என்றான்.

    அதைக் கேட்டு கோபமடைந்த பார்வதி, ‘இந்த விளையாட்டில் நான் சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பு, ஒவ்வொரு முறையும் அதிக நேரம் எடுத்துக் கொண்ட தாகச் சொல்லும் நீ, அதைப் பற்றி எனக்கு ஒரு முறை கூட எச்சரிக்கை எதுவும் செய்யவில்லை, அப்படியிருக்கும் போது, நீயாகவே இறைவன் வெற்றி பெற்றதாக ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு சொல்லித் தவறு செய்து விட்டாய். நடுநிலை தவறிய நீ கயிலாயத்தில் இருக்க தகுதியற்றவனாக ஆகிவிட்டாய். எனவே நீ பூலோகம் செல்வாய். நீ செய்த தவறுக்காக உன் உடல் தொழு நோயால் பாதிக்கப்படும். அனைவரும் உன்னை வெறுத்து ஒதுக்குவர்’ என்று சாபம் கொடுத்தார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சித்ரநேமி, ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்.

    நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், ‘தேவி! நீசித்ர நேமிக்கு அவசரப்பட்டு சாபம் கொடுத்து விட்டாய். விளையாட்டில் நீ சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாக பலமுறை காலதாமதம் செய்த போதும், அவன் உன்னுடைய தவறைச் சொல்லாமல் மறைத்து, உனக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். கடைசியில், நீ சொக்கட்டான் உருட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட போதுதான், அவன் வேறு வழியில்லாமல் நான் வெற்றி பெற்றதாகச் சொன்னான். உனக்கு ஆதரவாகச் செயல்பட்டவனுக்கு நீயே சாபம் கொடுக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

    அதைக் கேட்ட பார்வதி, சிறிது நேரம் கண்களை மூடித் தியானித்தார். அவருக்கு விளையாட்டின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலான காட்சிகள் அனைத்தும் நினைவுகளாக வந்து சென்றன. அவருக்குத் தனது தவறும் தெரிந்தது, கோபமும் குறைந்தது.

    பரிதாபத்துடன் அமர்ந்திருந்த சித்ரநேமியைப் பார்த்து, ‘இந்த விளையாட்டில் நீ எனக்கு ஆதரவாகச் செயல்பட்டு, நடுநிலைதவறியதால் உனக்கு என் வழியாகவே இறைவன் சாபம் கொடுக்கச் செய்து விட்டார். அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். நீ பூலோகத்தில் இருக்கும் காலத்தில், ஒருநாள் நீர் நிறைந்த அழகிய குளம் ஒன்றின் முன்பாகத் தேவலோகப் பெண்கள் புனிதமான விரதம் ஒன்றை மேற்கொள்வார்கள். அதனைப் பார்வையிடும் போது, உனக்கு நான் அளித்த சாபம் நீங்கிவிடும். அதன் பின்பு, நீ மீண்டும் கயிலாயம் வந்து சேரலாம்’ என்று விமோசனத்திற்கு வழி கூறினார்.

    விமோசனம்

    கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சேர்ந்த சித்ரநேமிக்கு, பார்வதி கொடுத்த சாபத்தின்படி உடல் முழுவதும் தொழுநோய்உண்டானது. அவனுடைய உருவம் முழுவதும் அருவருப்பான தோற்றத்துக்கு மாற்றமடைந்தது. அதனால் ஏற்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் அவன் சத்தமிட்டு அழுதான். அவனைக் கண்ட பலரும், அந்த நோய் தங்களுக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற பயத்தில், அவனை விரட்டி அடித்தனர். இதனால் அவன் ஒரு இடத்தில் இருக்க முடியாமல் ஊர், ஊராக சுற்றிக்கொண்டிருந்தான்.

    இப்படியே பல ஆண்டுகள் சுற்றித் திரிந்த அவன், ஒருகாட்டுப்பகுதியில் அழகிய நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான். அந்தக் குளத்தைச் சுற்றிலும் அழகிய பூக்களைக் கொண்ட தோட்டம் இருந்தது. அந்த இடத்திலிருந்து வீசிய நறுமணக் காற்று, அவனுடைய தொழுநோய்க்கு இதமாக இருந்ததால், அங்கேயே தங்கிவிட முடிவு செய்தான்.

    அந்த இடத்தில், மண்ணால் ஒரு லிங்கத்தைச் செய்து, தோட்டத்திலிருந்து அழகிய நறுமணம் மிகுந்த மலர்களைப் பறித்து வந்து, லிங்கத்தை அலங்கரித்து வழிபடத் தொடங்கினான்.

    அப்போது ஒருநாள் தேவலோகப் பெண்கள் சிலர் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த குளத்தில் நீராடி, பின்னர், குளத்தின் கரையில் சந்தனத்தைக் கொண்டு மகாலட்சுமியின் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.

    அதனைக் கண்ட சித்ரநேமி, தானும் போய் அந்த வழிபாட்டில் கலந்து கொண்டான். தேவலோகப் பெண்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்திய பொருட்களிலிருந்து வந்த நறுமணம், வேள்வியில் இருந்து வந்த புகை போன்றவை அவனுடைய உடலுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் இருந்தது. அத்துடன் அவனது உடலில் இருந்து தொழுநோய் புண்கள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கின.

    இதனால் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான். தேவலோகப் பெண்களுடன் சேர்ந்து, அவர்கள் உச்சரித்த மந்திரத்தை சொல்லியபடி தானும் அந்த வழிபாட்டில் உற்சாகமாக பங்கேற்றான். தேவலோகப் பெண்கள் அந்த வழிபாட்டை முடிக்கும் வரை மந்திரத்தைச் சொல்லியபடி அமர்ந்திருந்தான். வழிபாட்டின் முடிவில் தொழுநோய் முழுவதுமாக குணமாகியிருந்தது.

    தங்கள் வழிபாட்டை முடித்த தேவலோகப் பெண்கள், சித்ரநேமியைப் பற்றி விசாரித்தனர். அவர் பார்வதிதேவி அளித்த சாபம் பற்றியும், விமோசனத்திற்கான வழி பற்றியும் சொல்லி முடித்தான்.

    பின்னர் அவன், தேவலோகப் பெண்களிடம், ‘நீங்கள் எதற்காக இங்கு வழிபாடு செய்தீர்கள்?’ என்று கேட்டான்.

    ‘செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, நம்முடைய பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், விதிப்பலன்களுக்கேற்பவும் செல்வத்தை வழங்கி வருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் நாங்கள் ‘வரலட்சுமிவிரதம்’ எனும் வழிபாடு செய்தோம். இந்த வழிபாட்டைப் பெண்கள் அனைவரும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், அவர்களும், குடும்பத்தினரும் உடல்நலத்துடனும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள்’ என்றனர்.

    அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சித்ரநேமி, ‘உங்களோடு சேர்ந்து வழிபட்டதில் என்னுடைய நோய் குணமாகிவிட்டது. இதற்காக நானும் மகாலட்சுமி தேவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்று கயிலாயம் சென்றான்.

    நடுவராகப் பொறுப்பேற்பவர்கள், அச்சமின்றி, நடுநிலை தவறாமல், நேர்மையுடனும் நீதியுடனும் தங்கள் தீர்ப்பைச் சொல்ல வேண்டும். அதை தவிர்த்த ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் அவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதையே சித்ரநேமி பெற்ற சாபமும், விமோசனமும் உணர்த்துகிறது.
    ‘முழு நிலவு நாள்’ திருவிழாவை திருமணமான பெண்கள் விரதமிருந்து வெகு உற்சாகமாக கொண்டாடினர்.
    வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் இந்து காலண்டரின் படி ஜெஸ்தா மாதத்தின் 15-ம் நாளில் வட் பூர்ணிமா என்ற திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள். இந்த ‘முழு நிலவு நாள்’ அன்று பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டியும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டியும் இறைவனை வழிபடுகின்றனர். இந்த நாளே வட் பூர்ணிமா விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    மேலும் மகாபாரதத்தில் சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மராட்டியம் முழுவதும் வட் பூர்ணிமா விரதம் எனப்படும் ‘முழுநிலவு நாள்’ திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு திருமணமான பெண்கள் அனைவரும் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டி நேற்று முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்று இறைவனை வேண்டினர்.

    பின்னர் அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். இவ்வாறு பெண்கள் நோன்பு இருந்து ஆலமரத்தில் நூல் சுற்றினால் அவர்களின் கணவன்மார்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    மும்பையை பொருத்தமட்டில் தாராவி, தாதர், அந்தேரி, பாந்திரா, கொலபா ஆகிய அனைத்து பகுதிகளிலும் வட் பூர்ணிமா திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் ‘முழு நிலவு நாள்’ திருவிழாவை திருமணமான பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
    செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.

    செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும்.

    இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
     
    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;

    இன்று சிவாலயங்களில் பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!
    இந்து மதத்தில் காணப்படும் பல்வேறான கடவுளுக்கும் பல விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன
    இந்து மதத்தில் காணப்படும் பல்வேறான கடவுளுக்கும் பல விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்த கடவுளின் வழிபாடுகளுக்கேற்ற மாறுபாடுகளை கொண்டதாக அமையும். அதற்கமைய விரதங்களும் கடவுளுக்கேற்ப வகுக்கப்படுகின்றன.

    (1) சிவனுடைய விரதங்கள்.

    ஆனி உத்தரம்
    திருவாதிரை
    சிவராத்திரி
    பிரதோஷ விரதம்

    (2) சக்தி விரதங்கள்.

    நவராத்திரி
    வரலட்சுமி நோன்பு
    கேதாரகௌரி விரதம்
    ஆடிப்பூரம்
    ஆடிச்செவ்வாய்
    பங்குனித் திங்கள்
    மாசிமகம்

    (3) விநாயக விரதங்கள்.

    விநாயக சதுர்த்தி
    ஆவணி சதுர்த்தி
    சங்கடஹர சதுர்த்தி விரதம்
    விநாயக சட்டி

    (4) முருகன் விரதங்கள்.

    கந்த சஷ்டி
    ஆடிக்கிருத்திகை
    வைகாசி விசாகம்
    தைப்பூசம்

    (5) விஷ்ணு விரதங்கள்.

    ஏகாதசி விரதம்
    ×