என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். இந்த விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போட மாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடும் கேட்பர். இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப்படுத்தி விடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள். ஆடி – செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம்.
    செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம். நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நமக்கு வேண்டிய வரத்தை அருள்வாள் வரலட்சுமி. அத்தகைய லட்சுமி தேவியை எப்போதும் வழிபடுவதே சிறப்பு. ஆண்டு முழுவதும் பலவகையான லட்சுமி பூஜைகளை செய்து தங்கள் செல்வ வளத்தை பெருக்கிட செய்யும் பக்தர்கள் வரலட்சுமி விரதத்தை கூடுதல் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    பெண்கள் தங்கள் கணவன் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தின் செல்வ செழிப்பு உயரவும், சுபிட்சம் பெருகவும் வேண்டி மகாலட்சுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதே வரலட்சுமி விரதம்.

    சகல செளபாக்கியத்தையும் தரும் வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நன்னாளாகவும் கூறப்படுகிது. புராண கதைகளின்படி தேவர் உலகின் சித்ர நேமி என்ற கணதேதை, கரசந்திரிகா போன்ற பல பெண்கள் கடைபிடித்த வரலட்சுமி விரத்தை பூவுலகில் சுமங்களிகள் அனைவரும் மேற்கொண்டு மகாலட்சுமியின் அருளை பெறுவோம்.
    அக்டோபர் 1-ந்தேதி தசரா திருவிழா தொடங்குகிறது. குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர்.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது. 10-ம் திருநாளான 10-ந் தேதி (திங்கட்கிழமை) இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
    தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர்.

    விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட துளசி மாலையை கோவில் அர்ச்சகர், பக்தர்களுக்கு அணிவித்தார்.
    விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் வளாகத்தில் ஓலை குடிசையாலான பிறை அமைத்து தங்கியிருப்பார்கள். அங்கு தினமும் ஒருவேளை பச்சரிசி சாதம் மட்டும் சாப்பிட்டு அம்மன் பெயரை உச்சரித்தும், அம்மன் புகழ்பாடியும் வழிபடுவார்கள்.

    தசரா திருவிழா கொடியேற்றத்துக்கு முந்தின நாள் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றத்துக்கு பின்னர் பல்வேறு ஊர்களில் விரதம் இருந்து வரும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சென்று காப்பு அணிவார்கள்.

    பின்னர் பக்தர்கள் சிவன், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர், முருகபெருமான், அனுமார் உள்ளிட்ட சுவாமி வேடங்களையும், குறவன், குறத்தி, அரக்கன், போலீஸ், நர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, 10-ம் திருநாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.
    கேதார கெளரி விரதம் சர்வ மங்களங்களையும் தரும் விரதம் ஆகும்.
    திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமையம்மையாளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது. பிருங்கி முனிவர் அம்பாளை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கினார். எல்லாம் வல்ல ஆதிபராசக்தி நானே, என்னை ஏன் அவர் வணங்கவில்லை என அம்பிகை சிவனிடம் கேட்க அவர் மஹா முனிவர், மோட்சம் அவருக்குக் கிடைக்கும். எனவே “ஓம் நமசிவாய” எனக் கூறி என்னை வழிபட்டார் என சிவன் கூறினார்.

    இதனால் கோபமுற்ற தேவி பூவுலகிற்கு வந்தார். இங்கே கெளதம முனிவரின் ஆலோசனைப்படி சிவலிங்கஞ் செய்து தினமும் சிவபூஜையை வில்வம் இலையால் செய்து சிவதியானத்தில் 21 நாட்கள் இருந்தார். அம்பிகையின் சிவபக்தியைக் கண்டு மகிழ்வுற்ற சிவபெருமான் 21ஆம் நாள் பூவுலகிற்கு வந்து இறைவியைத் தமது இடதுபாகத்தில் இருத்திக் கொண்டார்.

    கேதார கெளரி விரதம் சர்வ மங்களங்களையும் தரும் விரதம் ஆகும். கல்வி, உத்தியோகம், வியாபாரம், திருமணம் முதலானவற்றை எமக்குத் தருவதோடு நோய் நொடி அற்ற வாழ்வையும் தரவல்லது.

    கேதார கெளரி விரதம் புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ தசமி முதல் ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் விரதம் ஆகும். இவ்விரதத்தை ஆரம்ப தினத்தன்று சங்கற்பித்து ஆரம்பிப்பது வழக்கம். தினமும் வீட்டில் பூஜை வழிபாடு செய்து மாலையில் விசேஷமாக தேவாலய தர்சனஞ் செய்வது வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர ஜபம், திருமுறைப்பாராயணஞ் செய்தல் வேண்டும். கேதார கெளரிக்கதையை படிக்கலாம். அல்லது கோவிலில் மாலைப் பூஜையின் பின்னர் கதை படிக்கும்போது கேட்டு வணங்கலாம்.

    நோயாளிகள் மதிய போசனஞ் செய்து இரவு தேவ தர்சனத்தின் பின் பால்பழம் அருந்தலாம். ஏனையோர் மாலைப் பூஜையின் பின் தானியம், பழம் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். முடிவற்று உபவாசம் இருந்து பாறனை செய்து தானதர்மங்களையும் செய்து கேதார கெளரி விரதத்தை மங்களமாக நிறைவு செய்து கொள்ளலாம்.
    புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும், இறைவியையும் விரதமிருந்து வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழி வகுக்கும்.
    திருக்கோவில்களில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது என்பதை கேள்விப்பட்டிருப்போம். இதே போல் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அங்குள்ள இறைவனுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை தினத்தன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த வகையில் தேவர்களின் வைகறைப் பொழுதானது மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும். அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.

    உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும். அந்த மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம், உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனிமாதம் உத்ரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.

    அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்த ஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு ஆறுமுறை நடை பெறும் இந்த சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிமாத உத்ரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டைப் போல இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், ஈழத்துச் சிதம்பரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவன் தலங்களிலும் ஆனி உத்ர விழா எனப்படும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகின்றன.

    சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடைபெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

    புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும், இறைவியையும் விரதமிருந்து வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழி வகுக்கும். அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்தை ஆரம்பித்து இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறைவனை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவனது நாமத்தை போற்றியும் பாடலாம்.
    முறைப்படி விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும்.
    ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று பெண்கள் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

    அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பிற்பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும்.
    நாளை ஆடி அமாவாசை வருவதால் இந்நாளில் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க சிறந்த நாளாகும்.
    ஆடி அமாவாசையானது தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை ஆகும். நமது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். மனிதனுக்கு 30 நாட்கள் ஒரு மாதம் ஆகும். ஆனால் பித்ருக்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாகும். நாம் மாதந்தோறும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்வது, தினமும் தர்ப்பணம் செய்வதாக அமைகிறது. பித்ருக்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, தானம் கொடுப்பது ஆகியவை நம் ஆயுளில் மட்டும் அல்லாது நமது சந்ததியினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும்.

    தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம். அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பர். ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பர்.

    ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் சிவாலய தரிசனம் செய்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம்.
    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

    அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்கள் என்ன என்று பார்போம்.
    அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்கள் என்ன என்று பார்போம்....

    ஞாயிறு பிரதோஷம்:

    சூரிய திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

    திங்கள் பிரதோஷம்:

    பிரதோஷத்தில் சோமவாரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

    செவ்வாய் பிரதோஷம்:

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

    பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும், ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

    புதன் பிரதோஷம்:

    புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

    வியாழன் பிரதோஷம்:

    குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

    வெள்ளி பிரதோஷம்:

    சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    சனி மஹா பிரதோஷம்:

    சனி பிரதோஷம் என்று கூறமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

    பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

    கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

    வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

    தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :  மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :
    கவலை தீரும்.
    வேண்டுதல்கள் நிறைவேற இன்று விரதமிருந்து முருகப்பெருமான வழிபாடு செய்வதன் மூலம் நிறைவேறும்.
    இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகையில்தான். பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள்.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
    ஆகஸ்டு மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளும் பராசக்தி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
    உலகநாயகியான அம்பிகையை ஆடி மாதம் வழிபடுவது சிறப்பு. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆகஸ்டு மாதத்தின் கடைசி செவ்வாயன்று மேற்கொள்வது பராசக்தி விரதம்.

    பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் எண்ணியதுநிறைவேறும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும்.

    பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது அவசியம்.
    மராட்டியர்கள் ஸ்ராவன் மாதத்தில் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
    மராட்டியர்கள் ஸ்ராவன் மாதத்தில் விரதம் கடைபிடிப்பது வழக்கம். வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களை முழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள்.

    அன்று இரவு முழுவதும் அங்கு வந்து விரதமிருந்து பூஜைகளை செய்து பக்தர்கள் ஆராதிப்பார்கள். இந்த ஐஸ் லிங்கங்கள் மால்வா எனும் பகுதிகளான இந்தூர், தேவாஸ், உஜ்ஜயினி, போபால் போன்ற நகரங்களில் பெருமளவில் நடைபெறும். சிவபெருமான் ஆலயங்களில் ஐந்து முதல் பத்தடி உயரங்களில் கூட இப்படிப்பட்ட சிவலிங்கங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறார்கள்.

    இப்போது குஜராத்திலும் இந்த பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதற்கான விசேஷ காரணங்களோ இல்லை பரம்பரைப் பழக்கமோ இல்லை என்றாலும் இது பரவலாக ஸ்ராவன் சோம வாரங்களில் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ராவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று ஏராளமானவர்கள் சிவன் கோவில்களில் சென்று விரதமிருந்து வழிபாடு செய்தனர். இதற்காக அம்பர்நாத் சிவன் கோவிலில் பக்தர்கள் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    ×