என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று விரதம் அனுஷ்டிக்கும் முறையை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    காலையில் எழுந்த உடன் நீராடி பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கிருஷ்ணர் படத்தை சுத்தம் செய்ய வேண்டும். 

    கிருஷ்ண ஜெயந்திக்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும். வாசல் கோலத்திலிருந்து பூஜை அறையில் சுவாமி படம் வரை போட வேண்டும். பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலையில் தான் செய்ய வேண்டும். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் விரதம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் என நீர் ஆகாரம் சாப்பிடவும்.

    மாலையில் சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் + சர்க்கரை + தேங்காய் துருவல், உளுந்து வடை, பாயசம் போன்றவை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு தேங்காய், வித விதமான பழங்கள், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்களாக படைத்து தீப ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி காட்டிய பின்னர் நைவேத்திய பொருட்களை குழந்தைகளுக்கு தர வேண்டும்.

    அதன் பின்னரே உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
    இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி நாளை 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, ‘உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.

    தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், தங்கை மீதான பாசம் தரையில் வீழ்ந்து விட்டது. ‘தன் உயிர் போனால் என்ன? தங்கையின் நலனே முக்கியம்’ என்று நினைக்க கம்சன் ஒன்றும் அன்பை அடிநாதமாக கொண்டவன் அல்லவே, அரக்க குணம் படைத்தவன்தானே. தன் உயிரா? தங்கையின் உயிரா? என்று வரும்போது, அவனுக்கு தன் உயிரே பெரிதாகப்பட்டது. ஆகையால்தான், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு வந்திருந்தான்.

    ‘கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!’ என்று மனைவியின் மீதான பாசத்தால் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் வசுதேவர்.

    அவர் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்து, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன். ஆனால் அக்கணமே, வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன். ஆயிற்று... 7 குழந்தைகளின் உயிர் இதுவரை கம்சனின் வாளுக்கு பலியாகி விட்டது. 8-வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

    ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.

    அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது. ‘உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்’ என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.

    குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

    சிறை வாசல் அடைத்துக் கொண் டது; காவலர்கள் கண்விழித்தெழுந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மறந்து போயிற்று. வசுதேவருக்கும், தேவகிக்கும் கூடத்தான்.

    காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.

    ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.

    ‘ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்’ என்று கூறி மறைந்தது.

    காலம் கடந்தது. உரிய காலத்தில் கம்சனை அழித்து மக்களை காப்பாற்றினார் கண்ணன்.

    கிருஷ்ண பகவான் பிறந்தது ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் ஆகும். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து கிருஷ்ண பகவானை வேண்டி வணங்கினால் அனைத்து நன்மைகளையும் பெறலாம். இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி நாளை 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    வாழ்வை வளமாக்கும் சந்தோஷி மாதா விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் உள்ளது பரி பூரண விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் சந்தோஷிமாதாவிற்கு சிறு சந்நதி உள்ளது. விநாயகப்பெருமானின் புதல்வியாக சந்தோஷிமாதா வணங்கப்படுகிறாள். பத்மாசனத்தில் அமர்ந்து, மேல் இரு கரங்களில் கத்தியையும் சூலத்தையும் கீழ் இரு கரங்களில் அபய முத்திரையையும் பொற்கிண்ணத்தையும் ஏந்தி தரிசனம் அளிக்கிறாள்.

    இந்த அன்னையிடம் நேர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து புளி சேர்க்காமல் சமையல் செய்து எட்டு சிறுவர்களுக்கு உணவளித்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ரட்சாபந்தன் திருவிழா, லட்சார்ச்சனைப் பெருவிழா, விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில் விசேஷமாக இந்த சந்தோஷி மாதா வழிபடப்படுகிறாள்.

    பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரும் முக்கிய விரத நாட்கள் என்னவென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஆகஸ்டு - 2 (செவ்வாய்) ஆடி அமாவாசை:- இது அமாவாசைகளில் சிறந்தது. புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி பித்ரு தர்ப்பணம் செய்தால் குடும்ப பாரம்பரியத்துக்கு நல்லது.

    ஆகஸ்டு - 2 (செவ்வாய்) ஆடிப்பெருக்கு:- இதை பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள். அன்று நதிக்கு சென்று அதை பெண்ணாக நினைத்து பூஜைகள் செய்து மங்கல பொருட்களை விடுவார்கள். இந்த விரதத்தால் பெண்கள் விருப்பம் நிறைவேறும்.

    ஆகஸ்டு - 5 (வெள்ளி) ஆடிப்பூரம்.

    ஆகஸ்டு - 12 (வெள்ளி) வரலட்சுமி விரதம்:- இது ஆடி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி கூடிய வெள்ளிக்கிழமைகளில் வருவது பெண்கள் உபவாசமிருந்து நோன்பு நோற்றால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உள்ளிட்ட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    ஆகஸ்டு - 16 (செவ்வாய்) சங்கரன்கோவில் ஆடித்தபசு:- இன்று விரதம் இருந்து தபசு காட்சி கண்டால் சிவா விஷ்ணு அருள் கிடைக்கும்.

    ஆகஸ்டு - 18 (வியாழன்) ஆவணி அவிட்டம்:- பூநூல் அணிந்திருப்பவர்கள் இன்று புத்தாடை அணிந்து புதிய பூநூல் அணிந்து காயத்ரி ஜபம் செய்தல் வேண்டும்.

    ஆகஸ்டு - 25 (வியாழன்) கிருஷ்ண ஜெயந்தி:- கண்ணன் பிறந்த நாள். இன்று கண்ணனின் படத்தை வைத்து, அதன் பின்னால் புன்னை இலைக் கொத்து வைக்க வேண்டும். கண்ணனுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணை ஆகியவைகளையும் முறுக்கு, சீடை ஆகிய தின்பண்டங்களையும் செய்து வைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
    பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.
    பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.

    அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் இவ்விரதத்தில் அன்னையை சௌபாக்கிய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும். தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

    இவ்விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

    விரத நாள் :

    இவ்விரதம் பங்குனி மாதம் வளர்பிறை திருதியை அன்று அனுசரிக்கப்படுகிறது.

    விரதமுறை :

    விரத தினத்தில் அதிகாலை நீராடி முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

    பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.

    மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண் மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

    பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

    முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும்.

    பின்னர் சிவபார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன், தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பின்னர் யாரேனும் மூவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.
    ஆடி மாதக் கொண்டாட்டங்கள் ஆவணியிலும் தொடரும். ஆவணி என்றால் ‘மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்று பொருள்.
    ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் இந்த சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில்தான் மகாவிஷ்ணு, வாமனராக வந்து மகாபலி மன்னனுக்கு மோட்சம் கொடுத்தருளினார். இந்நாளில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதக் கொண்டாட்டங்கள் ஆவணியிலும் தொடரும். ஆவணி என்றால் ‘மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்று பொருள். ‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’என்கிறார் அகத்திய மாமுனி. ஆவணி மாதத்தில்தான் இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    ஆவணி மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. முக்கியமாக ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. அந்தணர் என்பவர் வேதம் ஓதுவோர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் ஓதுமுன், பவித்ரமாக இருக்க வேண்டும் என்பதால் மனசும், தேகமும் சுத்தப்படுத்த இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. நல்ல காரியங்கள் செய்யும் போதும், அதேபோல் அசுத்தம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அந்த தோஷத்தைப் போக்கவும் பூணூல் மாற்றிக் கொள்வது வழக்கம். அதுபோல் வேத ஆரம்பத்திலும் போட்டுக் கொள்வதும் வழக்கம். ஸ்ராவண மாதத்தில் ‘வேதாரம்பம்’ தொடங்குகிறது.

    இந்த ஸ்ராவண மாதம், வேத ஆரம்பத்துக்காக ஏற்பட்டது ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றிக் கொள்ளுதலும். இன்றைக்கு வேத ஆரம்பமோ, சாஸ்திர அறிவோ இரண்டாம் பட்சமாய்ப் போய் பூணூல் மாற்றிக் கொள்வது மட்டுமே பிரதானமாக நிற்கிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் போட்டுக் கொள்வது ஒரு அங்கம். அவ்வளவுதான். அதுவே பிரதானமல்ல. உபாகர்மா தான் பிரதானம். மந்திரங்கள் தான் முக்கியம். இன்றைக்கு ஆவணி அவிட்டத்தன்று நம் மக்கள், அலுவலகம் போகிற அவசரத்தில் பூணூலை மட்டும் போட்டுக் கொண்டு மந்திரம் ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்கள்.

    இது மிகத் தவறு. அன்று ஒரு நாளாவது மந்திரங்களை முழுமையாகச் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக காயத்ரி ஜபம் செய்து அன்று காயத்ரி தேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும். இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதம் வருகிறது. சன்யாசிகள் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஓரிடத்தில் முகாமிடுவார்கள். அது நதிதீரமாகவோ, புண்ணியத் தலமாகவோ இருக்கலாம். சில கிரஹஸ்தர்கள் கூட இவ்விரதம் இருப்பார்கள். இச்சமயத்தில் தான் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அர்த்த ராத்திரியிலே பிறந்தாலும் அஞ்ஞான இருளை அகற்றும் கீதையை உலகுக்கு வழங்கியவர் அவர்.

    கிருஷ்ண பரமாத்மாதான் முதல் ஜகத்குரு. அர்ஜுனனை ஒரு கருவியாகக் கொண்டு அகிலத்துக்கு அவர் அளித்த உபதேசங்கள் அத்தனையும் ரத்தினங்கள். அகிலம் முழுதும் தானேவாகவும், தன் சின்ன வாயினுள் உலகம் முழுதையுமாகவும் காட்டியவர் கிருஷ்ண பரமாத்மா. உலகில் நல்லவனவற்றைக் காத்து தீய சக்திகளை அழிக்க யுகம் தோறும் தான் பிறப்பதாக கீதையில் அவர் சொல்லியிருக்கிறார். அவரே படைப்புக் கடவுளாகவும், காக்கும் கருணாமூர்த்தியாகவும் சம்ஹரிக்கும் சர்வேஸ்வரனாகவும் விளங்குபவர். பகவானின் பல திருவிளையாடல்களை, ஸ்வரூபங்களையெல்லாம் பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தில் தான் காணமுடியும்.

    பரிபூரணமான அருள்பாலிப்பு நிகழ்த்துபவர் கிருஷ்ண பரமாத்மா. அவரது பிறந்த புண்ணிய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அடுத்தது விநாயக சதுர்த்தி. மிக அதிகமான மக்களின் ஆதர்ச தெய்வம் விநாயகர். மிக எளிமையானவர். தனிக் கோயிலிலும் இருப்பார். தெரு முக்கிலும் உட்கார்ந்திருப்பார் கூரையே இல்லாத அரசமரத்தடியிலும் இருப்பார். வேண்டுவோரின் துயர் துடைப்பது மட்டுமே முக்கிய பணியாய்க் கொண்டு அருள்பாலிப்பவர். பள்ளிக்கூட சிறுவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது முதற்கொண்டு அனைத்துக்கும் அவரைத்தான் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

    இம்மையில் மட்டுமின்றி மோட்சம் அளிப்பது வரை அனைத்துக்குமான மூலகாரணம் அவர். நாம் எத்தொழிலைச் செய்தாலும் முதலில் விநாயகரைத் துதித்துப் பின்தான் தொடங்குவோம். நம் விக்னங்களைக் களைவதால் அவர் விக்னேஸ்வரர் ஆகிறார். சர்வகாரியத்திற்கு மூலாதாரமாக விளங்குபவர். அத்தகைய விநாயகரின் அவதார தினமான விநாயக சதுர்த்தியும்  இம்மாதம்தான் வருகிறது. ‘இந்தக் காரணத்துக்காக நான் இவ்வளவு ஆண்டுகள் விரதம் இருக்கப் போகிறேன்...’ என்று சங்கல்பம் செய்துகொண்டு, அத்தனை வருடங்களும் சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு.

    அவர்கள், ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி அன்றுதான் தங்களது விரதத்தைத் தொடங்குவார்கள். தொடர்ந்து 21 ஆண்டுகள் வரை சதுர்த்தி விரதம் மேற்கொள்வோரும் உண்டு. அவ்வளவு காலம் விரதத்தைத் தொடர முடியாதவர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், 21 சதுர்த்திகளில் விரதம் இருந்து, அதற்கு அடுத்தாக வரும் ஆவணி சதுர்த்தியில் விரதத்தை நிறைவு செய்யலாம். ஆவணி மாதம் வரும் மூல நட்சத்திரமும் சிறப்பு பெற்றதுதான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

    கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும். கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் பெற்ற திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம்தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

    மலையாள தேசத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி கதைதான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்குக் காரணம். ‘அசுர குரு சுக்கிராச்சார்யர் சொல்லும் வழிப்படி ஆட்சி செய்கிறார் மகாபலி’என்கிற தேவர்களின் முறையீட்டை அடுத்து, அவரை வாமனனாக வந்து ஆட்கொண்ட மகாவிஷ்ணு, மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கவும் அருள்பாலித்தார். அதன்படி, ஒவ்வொரு ஓணம் பண்டிகை அன்றும் அவரது தியாகத்தை, வள்ளல் தன்மையை கேரள மக்கள் நினைவுகூர்கிறார்கள். அந்த நாளில் மகாபலி தங்களது இல்லங்களுக்கும் வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

    மகாபலியின் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாக தங்களது வீட்டின் முன் அத்தப்பூ கோலம் போடுகிறார்கள், வீடு முழுக்கத் தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். தங்களது மகிழ்ச்சியைப் பார்த்து, மகாபலியும் மகிழ்வதாக நம்புகிறார்கள்.

    தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது.

    பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது. ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும்.

    எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.

    ஆடி செவ்வாய் கிழமை இன்று மங்கல கௌரி விரதம் இருந்து அம்மனை வேண்டிக்கொண்டால் விசேஷ பலன்கள் கைகூடும்.
    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போட மாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடும் கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப்படுத்தி விடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள். ஆடி – செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
    நினைத்தவை நிறைவேற முருகனுக்கு விரதமிருந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் நிறைவேறும்.
    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்’ என்று அருள் புரிந்தார்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
    வரலட்சுமி விரத வழிபாட்டிடை நெறிதவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
    வரலட்சுமி விரத வழிபாட்டிடை நெறிதவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

    லட்சுமி பூஜை செய்யும்போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    லட்சுமியை வழிபட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலம் உண்டாகும்.

    வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

    எட்டுவிதச் செல்வங்களை தருவதுடன் தாலி பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக் காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடு தான். எனவே இதை மறக்கக் கூடாது.

    பூஜை செய்யும்போது மகாலட்சுமி சூரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். வரலட்சுமி நோன்பை கடைபித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    இது ஒரு மங்களகரமா விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.
    வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
    வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக் கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும், மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

    வரலட்சுமி விரத பூஜையை நாளை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருபவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.

    விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். அரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

    அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாகனம் செய்ய வேண்டும்.

    இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம்.

    ‘‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’’ என்று மனம் உருக வணங்க வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
    ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சித்தர்களும், முனிவர் களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

    ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம்.

    உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில்தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

    உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக் கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும்.

    வைணவக் கோவில்களில்..

    ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங் களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர்.

    இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும். எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

    அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
    ×