என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரும் முக்கிய விரத நாட்கள்
    X

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரும் முக்கிய விரத நாட்கள்

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரும் முக்கிய விரத நாட்கள் என்னவென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஆகஸ்டு - 2 (செவ்வாய்) ஆடி அமாவாசை:- இது அமாவாசைகளில் சிறந்தது. புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி பித்ரு தர்ப்பணம் செய்தால் குடும்ப பாரம்பரியத்துக்கு நல்லது.

    ஆகஸ்டு - 2 (செவ்வாய்) ஆடிப்பெருக்கு:- இதை பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள். அன்று நதிக்கு சென்று அதை பெண்ணாக நினைத்து பூஜைகள் செய்து மங்கல பொருட்களை விடுவார்கள். இந்த விரதத்தால் பெண்கள் விருப்பம் நிறைவேறும்.

    ஆகஸ்டு - 5 (வெள்ளி) ஆடிப்பூரம்.

    ஆகஸ்டு - 12 (வெள்ளி) வரலட்சுமி விரதம்:- இது ஆடி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி கூடிய வெள்ளிக்கிழமைகளில் வருவது பெண்கள் உபவாசமிருந்து நோன்பு நோற்றால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உள்ளிட்ட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    ஆகஸ்டு - 16 (செவ்வாய்) சங்கரன்கோவில் ஆடித்தபசு:- இன்று விரதம் இருந்து தபசு காட்சி கண்டால் சிவா விஷ்ணு அருள் கிடைக்கும்.

    ஆகஸ்டு - 18 (வியாழன்) ஆவணி அவிட்டம்:- பூநூல் அணிந்திருப்பவர்கள் இன்று புத்தாடை அணிந்து புதிய பூநூல் அணிந்து காயத்ரி ஜபம் செய்தல் வேண்டும்.

    ஆகஸ்டு - 25 (வியாழன்) கிருஷ்ண ஜெயந்தி:- கண்ணன் பிறந்த நாள். இன்று கண்ணனின் படத்தை வைத்து, அதன் பின்னால் புன்னை இலைக் கொத்து வைக்க வேண்டும். கண்ணனுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணை ஆகியவைகளையும் முறுக்கு, சீடை ஆகிய தின்பண்டங்களையும் செய்து வைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
    Next Story
    ×