என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    தினசரி ஒவ்வொரு நாட்களிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விரதங்களை பற்றி பார்க்கலாம்.
    ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு.

    திங்கட்கிழமை விரதம் சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும்.

    செவ்வாயக்கிழமை விரதம் அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.

    புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

    வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். இந்நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும்.

    வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரவார விரதம். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் பண்ணலாம்.

    சனிக்கிழமை விரதம் - சனீஸ்வர பகவானைக் குறித்து இருப்பது என்றாலும் திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். தினமும் காக்கைக்கு அன்னமிட்ட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமை விரதமிருப்பது அவசியம்.

    இது எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விரதம் இருக்கிறது. அதுதான் மௌன விரதம்.
    விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.
    விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.

    1. வெள்ளி விரதம் : வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

    2. செவ்வாய் விரதம் - ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

    3. சதுர்த்தி விரதம் - பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

    4. குமாரசஷ்டி விரதம் - கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

    5. தூர்வா கணபதி விரதம் - கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

    6. சித்தி விநாயக விரதம் - புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

    7. தூர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

    8. விநாயக நவராத்திரி - ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

    9. வெள்ளிப்பிள்ளையார் விரதம் - ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

    10. செவ்வாய் பிள்ளையார் விரதம் - ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.

    11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை - பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
    கொன்னையூர் மாரியம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் மாரியம்மன் கோவில். இங்கு திருவிழாக்கள் ஆடி அமாவாசை பிரசித்தி பெற்றதாகும். மற்ற மாதங்களைவிட ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அபிஷேக பிரசாதம் வழங்கப்படும். மேலும் அன்றைய நாளில் பெண்கள் விரதமிருந்து நெல்லி மரத்தில் தொட்டில் கட்டியும் திருமணம் நடைபெற மஞ்சள் கயிறு கட்டியும் சுகப்பிரசவம் நிகழ தொட்டிலும், வளையலும் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

    பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண் மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர்.
    மாதம்தோறும் வரும் சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
    ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப் பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி நோன்பை கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.

    சித்திரை - விஷ்ணு லோகம்

    வைகாசி - சங்கர்ஷண லோகம்

    ஆனி - சொர்க்க லோகம்

    ஆடி - நினைத்தது கைகூடும்

    ஆவணி - விருப்பங்கள் நிறைவேறும்

    புரட்டாசி - சுகம் கிடைக்கும்

    ஐப்பசி - ஈசனுக்கு பூஜை செய்த பலன் கிடைக்கும்

    கார்த்திகை - பெண்களுக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

    மார்கழி - மகிழ்ச்சி வந்து சேரும்

    தை - தன லாபம் கிட்டும்

    மாசி - ஆரோக்கிய நலம்

    பங்குனி - செல்வ வளம் பெருகும்
    விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறையை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும்.

    நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.

    விநாயகருக்கு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை விநாயகருக்கு நிவேதித்து கணேச அஷ்டகம் கூறி பூஜைசெய்து வழிபடவேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

    மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, பிள்ளையாரைக்கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடையூறு வராது.

    ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.
    விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் ஏகாதசி அன்று விரதம் இருத்தல் மிகச் சிறந்ததாகும்.

    ஏகாதசியின் முழு நேரம் அறிந்து விரதம் இருந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும்.

    சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சுத்தம் ஆகும். இரத்தம் தூய்மை பெறும். ஏகாதசி விரதம் பாவங்களை அழிக்கின்ற விரதமாகும்.
    ஏகாதசி மாதம் இருமுறை வரும்.

    1 வளர்பிறை ஏகாதசி,
    2. தேய்பிறை ஏகாதசி

    ஆகும்.

    ஏகாதசி அன்று செடி, கொடி, மரம் இவைகள் அனைத்தும் தன் கழிவுகளை வெளியே அகற்றும். ஒரு மரத்தில் பறிக்கப்படும் கனியானது மற்ற நாளில் பறித்தால் ஒரு சுவையும், ஏகாதசி அன்று பறிக்கப்படும் போது ஒரு சுவையும் இருக்கும்.

    எனவே ஏகாதசி விரதத்தால் மனம் தூய்மையாகும். உடல் கழிவுகளை அகற்றும். செய்த பாவங்களையும் அகற்றி நல்ல வாழ்க்கை அமையும்.
    விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.
    விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.

    1. வெள்ளி விரதம் : வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

    2. செவ்வாய் விரதம் : ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

    3. சதுர்த்தி விரதம் : பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

    4. குமாரசஷ்டி விரதம் : கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழி வரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

    5. தூர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

    6. சித்தி விநாயக விரதம் : புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

    7. தூர்வாஷ்டமி விரதம் : புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

    8. விநாயக நவராத்திரி : ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

    9. வெள்ளிப்பிள்ளையார் விரதம் : ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

    10. செவ்வாய் பிள்ளையார் விரதம் : ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர்.

    கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.

    11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை : பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும்.
    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.

    அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்சை விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் விரதமிருந்து இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். தீபாராதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    முருகனுக்கு உகந்த இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறும்.
    விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

    வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

    வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

    முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறும்.
    சக்தி விரத வழிபாடுகள் எத்தனை. அவை என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    வருடத்துக்கு 4 நவராத்திரிகள் உண்டு.

    ஆஷாட நவராத்திரி :

    ஆனி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் ஆஷாட நவராத்திரி எனப்படும்.

    சாரதா நவராத்திரி :

    புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் சாரதா நவராத்திரி எனப்படும். வழக்கமாக சாதி சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் நவராத்திரியாக சுப ராத்திரியாகத் திகழ்கிறது. கலைமகள் வணக்கம் பெரிதும் பேசப்படும் ராத்தி இது.

    மகா ராத்திரி :

    தை மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் மகா நவராத்திரியாகும்.

    வசந்த ராத்திரி :

    இது பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் வசந்த நவராத்திரியாகும். நான்கு நவராத்திரியிலும் அம்மனை (சக்தியை) வழிபடுவது சிறப்பைத்தரும். மற்றவற்றைப் பின்பற்றாவிட்டாலும் கூட வசந்த நவராத்திரியையும், சாரதா நவராத்திரியையும் பின்பற்றி அம்பாள் அருளைப்பெறுக.

    வராத்திரி விரதம் :

    நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள். அதை அடுத்த விஜயதசமியைச் சேர்த்து ‘தசரா’ என்று கூறப்படுகிறது. இந்த நாட்களில், மூன்று தேவிகளான பார்வதி (துர்க்கை), லட்சுமி, சரசுவதியைப் பூஜை செய்வார்கள். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும் அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் ஆகும். இவற்றை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பார்கள்.

    புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் தொடங்கி, நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம்; அடுத்து தசமியில் விஜயதசமி, அதையே ஆயுத பூஜை என்று கூறுவர்.

    அமாவாசையன்றே பூஜைக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்துக் கொண்டு, அன்று உபவாசம் இருந்து, மறுநாள் பிரதமையில் பூஜை தொடங்க வேண்டும். அவரவர்களின் வசதிக்குத் தகுந்தவாறு, மேடை அலங்காரங்கள், பழவகைகள், சித்திரான்னங்கள் முதலியவற்றைச் செய்வார்கள்,

    ஒன்பது நாட்களும் பூஜை நடத்த இயலாதவர்கள், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களிலாவது பூஜையைச் செய்வார்களேயானால் ஒன்பது நாள் விரதப் பலனையும் அடைவார்கள். அதற்கும் இயலாதவர்கள் அஷ்டமி ஒரு நாளாவது அவசியம் செய்ய வேண்டும்.
    2016-ம் ஆண்டின் தமிழ்மாத பவுர்ணமி விரதங்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.
    விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகும். எனவேதான் ஒவ்வொரு மாத பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் விழாக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். மாத மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.

    மாசி-மாசிமகம் :

    மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோவில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோவில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்கு படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.

    பங்குனி-பங்குனி உத்திரம் :

    பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடவுள்களின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோவிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமன்-சீதை, ஆண்டாள்-ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி- சத்தியவான், மயிலை கற்பாகாம்பாள்- கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜூனனும் அவதரித்த திருநாளாகும்.

    சித்திரை-சித்ரா பவுர்ணமி :

    சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வருவதால் அன்றைய தினம் சித்ரா பவுர்ணமி தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தன்று தான் எமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான் சிவாலயங்களில் இன்று சிவனுக்கு மருக்கொழுத்தால் அபிஷேகம் செய்வார்கள்.

    வைகாசி-வைகாசி விசாகம் :

    வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப்பெருமான் பொய்கையில் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாளாகும். எனவே முருகன் கோவில்களில் இந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.

    ஆனி-ஆனித் திருமஞ்சனம் :

    ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும் சிவன் கோவில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப்பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனத் திருவிழா ஜூலை 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்.

    ஆடி-ஆடி குரு பூர்ணிமா :

    ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோவில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

    ஆவணி-ஆவணி அவிட்டம் :

    ஆவணி-மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு வெல்லசர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். ஆவணி மாத பவுர்ணமி அன்று வடநாட்டில் ரக்ஷாபந்தன் என்ற பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது தென் இந்தியாவிலும் இந்த பண்டிகை பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    புரட்டாசி-புரட்டாசி பூரட்டாதி :


    புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஐப்பசி-ஐப்பசி அன்னாபிஷேகம் :


    ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். அன்று எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறும். உலகில் உள்ள ஜீவாராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிக்கப்பார்கள். கேதர்நாத்தில் உள்ள சிவனுக்கு தேவபூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை-கார்த்திகை தீபம் :

    கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்ல சிவாலயங்களிலும் சிவனுக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் (டிசம்பர் 12-ந் தேதி) உலக புகழ் பெற்றது. அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரர் ஆனார் என்பர்.

    மார்கழி-மார்கழி திருவாதிரை :

    மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்கு பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோவில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்று தான் கொண்டாடப்படும்.

    நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    சோமவார விரதம்:

    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
    சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

    பிரதோஷம்:

    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

    சித்ரா பவுர்ணமி விரதம்:

    நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
    தெய்வம் : சித்திரகுப்தர்
    விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

    தை அமாவாசை விரதம்:

    நாள் : தை அமாவாசை
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
    பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
    சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    கந்தசஷ்டி விரதம்:

    நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
    பலன் : குழந்தைப்பேறு

    மங்களவார விரதம்:

    நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
    தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
    விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
    பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

    உமா மகேஸ்வர விரதம்:

    நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
    தெய்வம் : பார்வதி, பரமசிவன்
    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
    பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    விநாயக சுக்ரவார விரதம்:

    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
    தெய்வம் : விநாயகர்
    விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
    பலன் : கல்வி அபிவிருத்தி

    கல்யாணசுந்தர விரதம்:

    நாள் : பங்குனி உத்திரம்
    தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
    விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
    பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

    சூல விரதம்:

    நாள் : தை அமாவாசை
    தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
    விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
    பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

    இடப விரதம்:

    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
    தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
    விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
    பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

    சுக்ரவார விரதம்:

    நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
    தெய்வம் : பார்வதி தேவி
    விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
    பலன் : மாங்கல்ய பாக்கியம்

    தைப்பூச விரதம்:

    நாள் : தை மாத பூச நட்சத்திரம்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
    பலன் : திருமண யோகம்

    சிவராத்திரி விரதம்:

    நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
    தெய்வம் : சிவன்
    விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
    பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

    திருவாதிரை விரதம்:

    நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
    தெய்வம் : நடராஜர்
    விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
    பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
    சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    கேதார விரதம்:

    நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
    தெய்வம் : கேதாரநாதர்
    விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
    பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

    விநாயகர் சஷ்டி விரதம்:

    நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
    தெய்வம் : விநாயகர்
    விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
    பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

    முருகன் சுக்ரவார விரதம்:

    நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்ரமணியர்
    விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
    பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

    கிருத்திகை விரதம்:

    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

    நவராத்திரி விரதம்:

    நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
    தெய்வம் : பார்வதிதேவி
    விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
    பலன்  : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்

    ×