என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மராட்டியர்கள் கடைபிடிக்கும் விரதம்
    X

    மராட்டியர்கள் கடைபிடிக்கும் விரதம்

    மராட்டியர்கள் ஸ்ராவன் மாதத்தில் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
    மராட்டியர்கள் ஸ்ராவன் மாதத்தில் விரதம் கடைபிடிப்பது வழக்கம். வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களை முழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள்.

    அன்று இரவு முழுவதும் அங்கு வந்து விரதமிருந்து பூஜைகளை செய்து பக்தர்கள் ஆராதிப்பார்கள். இந்த ஐஸ் லிங்கங்கள் மால்வா எனும் பகுதிகளான இந்தூர், தேவாஸ், உஜ்ஜயினி, போபால் போன்ற நகரங்களில் பெருமளவில் நடைபெறும். சிவபெருமான் ஆலயங்களில் ஐந்து முதல் பத்தடி உயரங்களில் கூட இப்படிப்பட்ட சிவலிங்கங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறார்கள்.

    இப்போது குஜராத்திலும் இந்த பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதற்கான விசேஷ காரணங்களோ இல்லை பரம்பரைப் பழக்கமோ இல்லை என்றாலும் இது பரவலாக ஸ்ராவன் சோம வாரங்களில் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ராவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று ஏராளமானவர்கள் சிவன் கோவில்களில் சென்று விரதமிருந்து வழிபாடு செய்தனர். இதற்காக அம்பர்நாத் சிவன் கோவிலில் பக்தர்கள் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    Next Story
    ×