என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- தஞ்சை வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபாலசாமி கோவில்.
- இந்த கோவில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.
மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.
சித்திரை நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் அன்று மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
- ராமரின் பிரம்மஹஸ்தி தோஷத்தை நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது.
- இத்தலத்தில் உள்ள சரஸ்வதி, வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற இந்த கோவில் சோழநாட்டு காவிரி, தென்கரை தலங்களில் 125-வது தலமாக உள்ளது.
மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் இங்கு அனைத்து கோள்களும் நேர்பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் அமைந்துள்ளன. அதனால் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
ராமபிரான், இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் ராமர், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புடையது.
சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் கடலூர், சிதம்பரம், வழியாக நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடையலாம். திருச்சி, தஞ்சை பகுதி பக்தர்கள் மன்னார்குடிக்கு வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.
- திருவாரூர் கோவிலில் விநாயகரை வணங்கினால் சகல கிரக தோஷங்கள் விலகும்.
- திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார்.
ஒரு தடவை சனிதோஷம் பிடித்த சத்யகுப்தன் என்ற அசுரன் நவகிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். இதனால் பயந்த நவகிரகங்கள் திருவாரூர் தியாகராசப் பெருமானிடம் முறையிட அவர்களை அவர் அசுரனிடமிருந்து காப்பாற்றினார். அதனால் இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் சிவபெருமானை நோக்கி அமைந்துள்ளன.
நவகிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க, விநாயகர் சிலையும் இந்த நவகிரக சன்னதியில் உள்ளது. அதனால் திருவாரூர் கோவிலில் விநாயகரை வணங்கினால் சகல கிரக தோஷங்கள் விலகும்.
108 திருப்பதிகளில் சென்னையை அடுத்த திருநீர்மலையும் ஒன்று. இங்குள்ள குளத்தின் பெயர் மணிகர்ணிகாதடாகம். இந்த மணிகர்ணிகா தடாகத்தின் கிழக்குக் கரையில் தூம கேது விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர். இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம். திருமணமாகாத பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் போது, அவர்களது ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடந்து விடுவதாக கூறுகிறார்கள்.
விநாயகர், சதுர்த்தியன்று இத்தலத்தில் சிறப்பு யாகம் நடைபெறும். குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு கணபதி யாகம் நடத்தப்படுகிறது. வலம்புரிச்சங்கு கொண்டு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மற்ற விசேஷ நாட்களிலும் வலம்புரிச்சங்கு தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதைப் போலவே திருச்சியிலிருந்துமேற்கு புறம் முப்பத்தைந்து கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பனேஸ்வரர் கோவிலிலும் ராகு கேது இருபுறம் இருக்க, நடுவில் இடஞ்சுழி விநாயகராக நின்ற கோலத்தில் வன்னிமரத்தடியில் மேடையில் வீற்றிருக்கிறார். தோஷம் நீங்க நெய்விளக்கேற்றி இவரை வழிபடலாம்.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்கள் கொற்கையிலிருந்து அரசாண்ட பொழுது, அரசன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட அந்தணர்களால், நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டார். எனவே இந்த விநாயகரே தமிழ்நாட்டில் முதலில் வந்த பிள்ளையார் என்கின்றனர். விநாயகரை மூலவராக கொண்ட கோவில்களில் கொடிமரம், திருத்தேர் கொண்டு திருநாள் காணும் கோவில் இது மட்டுமே. இத்திருத்கோவிலில் அபூர்வமான பஞ்சமுக விநாயகரும் வீற்றிருக்கிறார்.
காளஸ்தீஸ்வரரும் இக்கோவிலில் இருந்து அருள்பாலிப்பதால், கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் வன்னியூர் (காரையூர்) கிராமத்தில் உள்ள விநாயகரை வன்னி இலையாலும், மந்தாரைப் புஷ்பத்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல பாவங்களும் தீரும்.
தஞ்சாவூர் பில்லுக்காரத் தெருவில் ஸ்ரீ சக்தி முனியாண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலின் அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில், ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நாக அணி பூண்டு வீற்றிருக்கிறார் ஸ்ரீ நாகநாத விநாயகர். நாக தோஷம், ராகு-கேது தோஷங்களை நீக்குகிறார் என்பதால் தினமுமே இங்கு விழாக்கோலம் தான்.
மரண பயம், விஷ ஜந்துக்கள் பயம் நீக்குவதுடன், திருமணத் தடையை அகற்றி மழலை பாக்கியமும் தந்தருள்கிறார் இந்த விநாயகர். வேதாரண்யத்தில் உள்ள கோயிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கி வீரஹத்தி விநாயகர் வீற்றிருக்கிறார். ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமபிரான் ராமேசுவரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனினும் அவரை விடாமல் தொடர்ந்து வந்த வீரஹத்தியைத் தீர்த்தருளிய காரணத்தால் இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்கிறது தலப் புராணம். நாமும் இவரை வழிபட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார். இவரை பிள்ளையார் வடிவில் காண முடியவில்லை. கோவிலின் முன்புறம் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. கோவிலின் பின்புறம் மண்டியிட்டுப் படுத்து சர்க்கசில் இரும்பு வளையத்தில் நுழைவது போல, நுழைந்து முன்புறமாக வெளிவருவது தான் இக்கோவிலில் செய்யும் பிரார்த்தனை, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உடல் வலி, பில்லி சூனியம் போன்றவை அகலுதல் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
- தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
- இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அம்மன், புற்று ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அம்மனுக்கு நாள் தோறும் பூஜையும் வழிபாடுகளும் நடந்து வருவதால் இந்த புற்றும் நாள்தோறும் வளர்ந்து வந்தது. இதனால் அம்மனின் புற்று சிறிய மலைபோல பிரமிக்க வைக்கும் வகையில் பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறது. இது தேவியின் தெய்வீக ரூபத்தை மேலும் அதிகரித்து காட்சி தருவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.
அம்மனை தரிசிக்க வருவோருக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் வேண்டிய வரத்தை அருளுவார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாய் போல கருனை மழை பொழிவார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால் தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
அம்மனை தரிசிக்க பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், ஏன் வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனின் ஆசியை பெற்றுச் செல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. புற்று வடிவில் அம்மன் உள்ளதால் அதன் முன்பு வெள்ளியால் செய்யப்பட்ட பிரபையில் அம்மனின் உருவமும் அதன் முன்பு பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட பகவதி அம்மனின் உருவ சிலையும் இடம் பெற்று உள்ளது.
இந்த பஞ்சலோக அம்மன் சிலை உற்சவர் சிலை ஆகும். இதனால் வெள்ளி பல்லக்கில் இந்த அம்மன் சிலையை வைத்து பவனியாக கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் திருவிழா காலத்தில் 3-ம் திருவிழாவில் இருந்து தினசரியும் இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி நடக்கிறது.
இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. சில பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு காசுகளை கடலில் வீசி வழிபடுகிறார்கள். சில பக்தர்கள் நேர்ச்சை பொருட்களையும் கடலில் போட்டு வேண்டுதல் நடத்துகிறார்கள். இதனால் கடற்கரையில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
- வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
- பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
- இன்று சிரார்த்தம் செய்வதால் திருமண தடை அகலும்.
- இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.
மறைந்த முன்னோர்களுக்காக இன்று பித்ரு சிரார்த்தம் செய்ய வேண்டிய தினமாகும். இன்றைய சிரார்த்தத்துக்கு வியதீபாத சிரார்த்தம் என்று பெயர். நட்சத்திரங்கள் 27 இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் வ்யதீபாத யோகமும் ஒன்று.
சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனை கோபத்துடன் நோக்கினான்.
அப்போது அவர்களுடைய கோபப் பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதையாகும். இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.
ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் 13 வியதீபாதங்களும் அடங்கும. இன்று செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் இந்த வ்யதீபாத யோக தினத்தில் செய்யும் பித்ரு வழிபாட்டால் இந்த யோகத்தின் தோஷம் குறையும்.
இன்று சிரார்த்தம் செய்வதால் திருமண தடை அகலும். வேலை கிடைக்கும். கடன் அடையும். குழந்தைகள் பேசாத பேச்சு குறைபாடுகள் நீங்கும்.
- எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும். நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரம் ஏதாவது ஒரு கிழமையில் (ஆறு வாரமும், முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வரவேண்டும். வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலே வர வேண்டும். மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலே வரவேண்டும்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறுவாரமும், வாரம் ஒரு நாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட திருமணம் விரைவில் அமையப்பெறும். திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும்.
ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, ஆதி மூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். வள்ளி மணவாளப் பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வரவேண்டும்.
பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடைபெறும்வரை பாதுகாத்து வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சன்னதிகளுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பழைய மாலையை கோவிலில் உள்ள தல மரத்தில் கட்ட வேண்டும். இவ்வாறு இந்த ஆலயத்தில் தொடங்கப்பட்ட மணவாழ்வு உலகப்பயன்கள் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் தொடர இவ்வாலயம் வந்து அடிக்கடி முருகனின் அருள்வேண்டி வணங்கி செல்ல எல்லாம் சுபமாய் நடக்கும்.
திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு கட்டுவது அல்லது வாங்குவது, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரம் மூலவர் சன்னிதியில் அர்ச்சனை செய்து வரவேண்டும். ஆறாவது வாரம் மூலவர் சன்னிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.
இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும். எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் போது இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம் பழம் கொண்டு வணங்க வேண்டும். ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூவைத்து பூஜித்து வரவேண்டும்.
முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வாரம் எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஒர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும். இவ்வாறு ஐந்து வாரம் செய்துவிட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்தபழத்தை ஈரம்படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும். இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.
நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும். இங்கு உள்ள இரண்டு முருகப்பெருமான் சன்னதிகளில், ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.
இத்தலத்தில் பிரார்த்தனை செய்து வருவோர்கள் முதல் வாரத்திலேயோ அல்லது தொடர்ந்து வரும் வாரங்களிலோ பலன் பெறுவது உண்டு. ஒருவருடைய நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனை, அவரின் காரியத்தை மிக விரைவில் முடித்து வைக்கிறது.
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே போதும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதுகுறித்து கோவிலுக்கு வந்த பக்தர் சரவணன் என்பவர் கூறியதாவது:-
எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகும். தற்போது சென்னை பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தொடர்ந்து 6-வது வாரமாக கோவிலுக்கு வந்துள்ளேன். இன்று மொட்டையும் போட்டு உள்ளேன். இந்த முருகன் சக்தி வாய்ந்தவராக இங்கு விளங்குகிறார். குழந்தை பாக்கியம், சொந்த வீடு கட்டுதல் போன்ற அனைத்து பிரார்த்தனைகளையும் இவர் நிறைவேற்றி தருகிறார்.
சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்து பூசாரி மூலம் பூஜைகள் செய்தால் அது உடனடியாக நிறைவேறும் என பக்தர்கள் வெகுவாக நம்புகிறார்கள்.
நான் முதுகுளத்தூரில் இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்று வருவேன். இப்போது சென்னை வந்ததும் இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். இதனால் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது.
- இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது.
ராஜ ராஜசோழனின் முப்பாட்டனால் கட்டப்பட்ட இந்த கோவில் சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலின் இணைக் கோவிலாக உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை மகாவிஷ்ணு பூஜித்து சக்கராயுதம் பெற்றதாலும், மேலும் இத்தல இறைவனை பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி பூஜை செய்து சாபம் நீங்க பெற்றதால் இந்த கோவில் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
சப்த மாதர்களில் பிரம்மனின் சக்தியாகிய பிராம்மி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்துள்ளார். இத்தல இறைவன் எமனை சாடியதால் இவர் எமபயம் போக்க வல்லவர் என்றும் அதற்கு சாட்சியாக தேவநாயகி சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் அருள்வதும் எம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. இத்தல இறைவி தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு அருள்வதற்காக ஒரு காலை முன்பு எடுத்து வைத்த நிலையில் அருள் புரிகிறாள்.
இத்தல இறைவனை சக்கரவாக பறவை வழிபடும் புடைப்பு சிற்பமும், சோழ அரசி செம்பியன் மாதவி வழிபடுவது போன்ற கருங்கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இந்த கோவிலில் உள்ளது. பங்குனி உத்திரம் பின்வரும் சித்திரை நட்சத்திர தினத்தன்று இறைவன், இறைவி மங்கள வாத்தியம் முழங்க கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பாடு நடைபெறும் அதிகாலை நேரத்தில் கோபுர தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு கூடுகின்றனர். இதன்படி வழிபாடு செய்தால் பக்தர்களுக்கு வற்றாத செல்வமும், திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரரை வழிபட்டால் எமபயம் நீ்ங்கி மாங்கல்ய பலன், குழந்தை பேறு கிடைக்கும்.
இக்கோவிலில் நடக்கும் சப்தஸ்தான விழா தொடக்க நாளில் அதிகாலை கோபுர தரிசனம் செய்தால் நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து வழக்குகளில் வெற்றி, அரசு வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், அய்யம்பேட்டையிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலை பஸ் அல்லது ஆட்டோ மூலம் அடையலாம்.
- ஜாதகம் இல்லாத பலர் தொடர் மன வேதனையை சந்தித்து வருகிறார்கள்.
- நம்பிக்கையுடன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் முன்னேற்றம் தரும்.
மனிதனுக்கு பொருள் தேடும் விஷயத்திற்கு உதவியாகவும் ஆபத்து காலத்தை அறிய உதவும் கலங்கரை விளக்கமாகவும் சத்ருகளிடம் இருந்து வெற்றியடைய விரும்பும் சமயங்களில் ஒரு நல்ல மதிநுட்ப மந்திரியாகவும் ஜோதிடம் திகழ்கிறது. அதற்கு ஜாதகம் மிகவும் அவசியம். சுய ஜாதகம் இருப்பவர்கள் ஜாதகத்தின் மூலம் தீர்வை அடைகிறார்கள். ஆனால் ஜாதகம் இல்லாத பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை ஜோதிடத்தின் மூலம் தங்கள் வினைகளில் இருந்து விடுபட விரும்புகிறார்கள்.
ஒருவருக்கு பிறந்த நேரம் மற்றும் பிறந்த நாள் போன்றவற்றை சரியாக குறித்து வைக்காமல் விட்டுவிடுவார்கள் அல்லது தவற விடுவார்கள். இது போல் குறிப்புகள் எதுவும் சரியாக இல்லை என்றால் அவர்களுக்கு ஜாதகம் கணிப்பது கடினம்.
ஜாதகம் துல்லியமாக கணிக்க முடியாவிட்டால் பலன்களும் சரியாக வராது என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு சிலருக்கு பிறந்தநாள் தெளிவாக தெரியும் பிறந்த இடம் எளிமையாக தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் பிறந்த நேரத்தை துல்லியமாக சொல்ல தெரியாது. தோராயமாக சொன்னால் அதனுடைய ஜாதக கணிதம் தவறாகப் போவதற்கும் வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு ஜோதிடம் சொல்வதற்கும் சுபிட்சம் பெறுவதற்கும் பல்வேறு ஜோதிட முறைகள் இருந்தால் கூட நஷ்ட ஜாதகம் கணித்தல் அல்லது பிரசன்னத்தின் மூலம் நல்ல மாற்றம் மற்றும் திருப்புமுனையை வழங்க முடியும்.
பிரசன்னத்தை அடிப்படையாக கொண்ட நஷ்ட ஜாதக முறை பழமையானது. தற்போது வெகு சிலரே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒருவர் ஜோதிடரை சந்திக்க வந்த நேரத்தை கொண்டு கணக்கிடப்படும் பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் ஒருவருடைய பிறந்த குறிப்புகள் துல்லியமாக இல்லாத பட்சத்தில் பலன்களை தெளிவாக கணித்துவிடலாம்.
இதில் பல பிரசன்ன ஜோதிட முறைகள் இருந்தாலும் ஜாமக்கோள் பிரசன்னம், தாம்பூல பிரசன்னம் மற்றும் சோழி பிரசன்னத்தின் மூலம் நிகழ்வில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியும். பிறந்த ஜாதகம் இல்லாமல் குறிக்கப்படும் இந்த பிரசன்ன குறிப்புகள் மிகத் தெளிவான பதிலைச் சொல்லும்.
நேரமின்மை, பயண தூரம், பொருளாதார குற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் ஜாதகம் இல்லாத பலர் தொடர் மன வேதனையை சந்தித்து வருகிறார்கள். இது போன்ற நடை முறை சிக்கல்களை தீர்க்க சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார குற்றம் நீங்கும்.
பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற்றதால் மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.
கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நல்ல மாற்றம் தெரியும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டு பூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
சகல கிரக பாதிப்பு நீங்க பிரதோஷ வழிபாடு சிறப்பானது. குறிப்பாக சனி பிரதோஷம் சிறப்பு. சொத்து அமையாதவர்கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாதவர்கள், வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாக இருப்பது , மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தால் சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.
வீண் விரயத்தை குறைத்து சேமிப்பை உயர்த்த தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரதோச காலத்தில் குத்து விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
பலதலைமுறையாக தொடரும் வம்பு வழக்குகளால் அவதிப்படுபவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தீர்ப்பு சாதகமாகும்.
திருமணத்தடை இருப்பவர்கள், திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் குழப்பங்கள் மிகுதியாக இருப்பவர்கள், 9 ஏழை பிராமணர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தானம் தந்தால் காரிய சித்தி கிடைக்கும்.
நிரந்தர வேலை இல்லாதவர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள் , தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.
ஒரு ஆண்டுகளுக்குள் காணாமல் போனவர்கள், ஒரு ஆண்டுகளுக்குள் காதல் திருமணம் செய்து வீட்டிற்கு வராமல் இருக்கும் மகன், மகள் இருப்பவர்கள் , காணாமல் போன சொத்து பத்திரம் கிடைக்காதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சொத்து பத்திரம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் குறைவுபடுபவர்கள் தினமும் கருப்பு நாய்க்கு பிஸ்கட் தானம் தர வேண்டும். மேலும் சிவப்பு நிறக்கயிற்றில் செம்பில் ஸ்ரீ சக்ர டாலர் அணிய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் உங்களை அரவணைக்கும். தொழில் சிறப்பாக நடந்தும் லாபம் குறைவாக இருப்பவர்கள்,மூத்த சகோதரத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள்,மறுமணத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள் பவுர்ணமி திதியில் மகாலட்சுமி அஷ்டோத்திரம்,லலிதா சஹஸ்ர நாமப் பாராயணம் செய்ய சுக வாழ்வு உண்டாகும்.
பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட வழக்கில் இருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும். நோய் தீரும். சாதுக்கள் உடல் ஊனமுற்றவர்கள் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, சிறப்பு தந்தை-மகன் பிரிவினை, கருத்து வேறுபாடு இருப்பவர்கள் ஆன்மீக குருமார்கள், பள்ளி கல்லுரி ஆசிரியர்கள், வயதான கோவில் அர்ச்சகர்களுக்கு உணவு, ஆடை தானம் வழங்கி நல்லாசி பெற வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் மீள முடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட்டால் பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.
முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வருடம் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி இறைவனை வழிபட்டு வரவேண்டும். பலவருடங்களாக திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சுவாசினிகளிடம் (மாதவிடாய் நின்ற சுமங்கலிகள்) நல்லாசி பெற திருமணத்தடை அகலும்.
வருடம் ஒருமுறை கோ பூஜைசெய்து வந்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். பல வருடங்களாக விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் தம்பதிகள் அல்லது விவாகரத்து வழக்கு முடிவடையாமல் மன சஞ்சலத்தை அனுபவிப்பவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராகி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்.
நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சினையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் தீராத நோய்,கடன்,பகை உள்ளவர்கள் சனிக்கிழமை நவதானிய அடை தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.
பொருளாதார வளர்ச்சி பெற ஏகாதசி விரதம் அல்லது ஏகாதசி அன்று பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குல தெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.
தொழில் கூட்டாளி மற்றும் நண்பர்களால் பிரச்சனையை அனுபவிப்பவர்கள் தினமும் சிவபுராணம் படிக்க சாதகமான செய்தி வரும்.
அதே போல் ஒருவர் எந்த லக்ன ராசியாக இருந்தாலும் ஜாதகம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இரண்டு வகையாக மட்டுமே அமையும். ஒன்று சுகமான அமைப்பு மற்றொன்று இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று தடுமாற்றம் நிறைந்த வாழ்க்கை. சுகமான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கும்.
எதுவும் இல்லாதவனுக்கும் துன்பம் உண்டு. இது போன்று மன அழுத்தத்துடன் உலகில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு அவரின் பிரச்சினை பெரிதாக தோன்றும். அதனால் ஜாதகம் இன்மையால் தான் துன்பம் தொடர்கிறது என்ற மன வருத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். நம்பிக்கையுடன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் முன்னேற்றம் தரும். உங்களின் சுய பிரச்சினைக்கு ஏற்ற மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது.
- அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
இன்று (புதன்கிழமை) ஆவணி மாதம் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர். இன்று அதிகாலையில் புனிதநீராடி விட்டு பாராயணம் செய்வது மிகுந்த பலன்கள் தரும். இன்று நடத்தப்படும் ஹோமங்களுக்கு சிறப்பான பலன் உண்டு.
இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக நெய், ஒருசெம்பு பசும்பால், பழ வகைகள் ஆகியவற்றை தானமாக கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இந்த பரிகார தானங்களை இன்று காலையிலேயே கொடுக்க வேண்டும்.
தானம் செய்ய இயலாதவர்கள் சிறிது வாழைப்பழத்தை ஆலயங்களில் வைத்து வழிபட்டு விட்டு பிறகு அவற்றை ஆலய வாசலில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து விடலாம். இவ்வாறு பரிகாரங்கள், தானங்கள் செய்வதால் ஆவணி மாதம் முழுவதும் மனதில் நிம்மதி நிலவும். பண வரவும் அதிகரிக்கும். ஆவணி மாத தானத்துக்கு நீண்ட ஆயுள், நல்லவர்களுடன் சேருவது போன்ற பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் பெரியதொரு பிரார்த்தனைத் தலமாக கரூர் விளங்குகிறது.
- தன்னை நினைத்து வணங்குபவரின் கவலைகளையும் கரைக்கக்கூடியவள்.
சமயபுரத்தில் மகமாயியாகவும், திருவேற்காட்டிலே கருமாரியாகவும், புன்னை நல்லூரிலே மாரியம்மனாகவும் அருளும் பராசக்தி கரூர் நகரிலே மாரியம்மனாய் தண்ணருள் பொழிகின்றாள். வேண்டுவோர் வேண்டும் வரம் தந்து அவர்தம் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள் இந்த அம்மன் என அனைவருமே அவளைப் போற்றுகின்றனர்.
இத்திருக்கோயிலில் நடைபெறும் கம்பம் விழா மிகச் சிறப்பானது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியான காப்பு கட்டுதல், ஒரு திருவிழா போல் நடைபெறும். அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற பிரார்த்தனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவின்போது நிறைவேற்றுகின்றனர். கம்பத்திற்கு தயிர்சாதம் படைப்பது விசேஷமானது.
இந்தப் படையலுக்குப் பின் கரூர் மாரியம்மனுக்கும், கம்பத்திற்கும் மாலை மாற்றும் வைபவம் நடக்கும். பின் உரிய வழிபாட்டுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு வழிபாடுகள் செய்து முடித்ததும் கம்பம் ஆற்றில் விடப்படும். அப்போது நடைபெறும் வாணவேடிக்கையைக் காண இருகண்கள் போதாது.
22 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், திருத்தேர் பவனியும். இவ்விழா காலங்களில் கிராமிய நடனங்கள், கூத்து, கரகாட்டம், பக்தி சொற்பொழிவுகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மன் திருவீதியுலா வரும் போதெல்லாம் மாவடி ராமசுவாமி என போற்றப்படும் கரூரின் காவல் தெய்வமாய் வழிபடப்படும் ராமர் கூடவே எழுந்தருள்கிறார். இவர் மாரியம்மனின் சகோதரராகவும் பாவிக்கப்படுகிறார்.
இத்திருவிழாவைப் பொறுத்தவரை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது எனில், பல்லக்கு மஞ்சள் நீராட்டு விழா மங்களகரமான நிறைவு நிகழ்ச்சியாகும். மற்ற நாட்களில் அம்மனை அமர்ந்த நிலையில் அலங்கரிக்கும் அர்ச்சகர்கள் பல்லக்கு அன்று அம்மன் ஓய்வெடுப்பதை உணர்த்தும் வண்ணம் சற்று சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் அலங்கரிப்பர். பக்தர்கள் அனைவரும் அன்னைக்கு தாம்பூலம் தருவார்கள். நீர்மோர், பானகம், வடைபருப்பு வைத்து நிவேதனம் நடக்கும்.
பக்தர்களுக்கு மஞ்சள் நீர் கொடுக்கப்படும். சில கிராம மக்கள் பல்லக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேரும் வரை பல்லக்கின் கூடவே சென்று திரும்ப வந்து அதனை விட்டு விட்டுச் செல்வதை வழிபாடாக கொண்டிருக்கிறார்கள். கருவறையில் மாரியம்மன் நான்கு திருக்கரங்களுடன் சற்றே ஈசான்ய மூலையை (வடகிழக்கு) பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.
இக்கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. பக்கத்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து கரூர் நகரின் மையப் பகுதியான மார்க்கெட்டின் நடுவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனைத் தலமாக கரூர் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து பல திருவிழாக்களைக் காணும் கரூர் மாரியம்மன், தன்னை வந்து தரிசிக்காவிட்டாலும், தன்னை நினைத்து வணங்குபவரின் கவலைகளையும் கரைக்கக்கூடியவள்.
- நிம்மதியான உறக்கத்தை பெற வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும்.
- மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
உடல் நன்றாக இயங்க நம்க்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி நேரம் தான் அந்த 6 மணி நேர உறக்கம். ஒரு நாளில் விரையமாகும் நம் உடல், மன ஆற்றலை மீட்க இந்த 6 மணி நேர உறக்கம் மட்டுமே உதவும். மற்ற 6 மணி நேர உறக்கம் உதவாது. அது எவ்வாறு என்று பார்ப்போம்.
நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேர உறக்கம் அன்றைய நாளில் விரயமான ஆற்றலை மீட்க்கிறது;பின் 3 மணி நேர உறக்கம் அடுத்த நாளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது. இப்படி உறங்கினால் உடல் உறுப்புகளும், மனமும் புத்துணர்வு பெருகிறது. தூங்கி எழுந்ததும் தலைவலி வராது. ஒவ்வொரு நாளும் பல் கசப்பான அனுபவங்களை மனம் எதிர் கொள்கிறது. அம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நம் கடமை இல்லையா? மனம் நன்றாக இயங்க வேண்டுமானால் நல்ல உறக்கம் வேண்டும். அத்தகைய உறக்கத்தை நாம் பெற வேண்டுமானால் வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.
வாஸ்து படி படுக்கை அறையை தென்மேற்கு கன்னி மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு வழியாக நல்ல அதிர்வு அலைகள் வீட்டிற்குள் நிழையும்; அந்த அதிர்வலைகள் தென்மேற்கில் மின்காந்த சக்தியாக மாறி வீட்டில் உள்ளவர்களுக்கு உயிர் ஆற்றலை (ஜீவ சக்தி) கொடுக்கும். எனவே படுக்கை அறையை தென்மேற்கு முலையில் அமைக்க வேண்டும்.தெற்கு மற்றும் மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
கன்னி மூலையில் பழைய துணிகள் வைப்பதை தவிர்க்கவும், காரணம் அவை தீய ஆற்றலை உருவாக்கும்.நல்ல உறக்கம் அமையாது. தூங்கி எழுந்ததும் புத்துணர்வு இருக்காது. இவற்றை தவிர்க்க கன்னி மூலை தூய்மையாக இருப்பது அவசியம். படுக்கை அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும். பொழுது போக்கு கருவிகளை கிழக்கு-வடக்கு பகுதில் வைக்க வேண்டும். இந்த போட்டிகள் நிறைந்த உலகில் நீங்கள் வெற்றி பெற உற்சாகமான உடலும் மனமும் வேண்டும். அதை உறக்கம் தான் தரும். உறங்கும் இடமான படுக்கை அறையை வாஸ்து படி அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்..!!!






