என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.
    • தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை காக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள்.

    பிறகு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள்.

    அவளது உயிர் மகா விஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.

    அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீ மகாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து காட்சி அளித்தார்.

    மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான்.

    அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.

    அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.

    ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.

    சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.

    ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை துளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.
    • வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.

    சங்கசூடனின் மனைவி துளசி மகாபதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது.

    துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்புக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

    பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.

    வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.

    நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப்பாடினாள்.

    ஆடினாள். கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.
    • அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.

    முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.

    அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.

    வரத்தின் மூலம் கிடைத்த பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான்.

    குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமைப்படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.

    அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர்.

    சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள்.

    கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள்.

    அதனால் கோபம் அடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது.

    ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடிய வில்லை.

    அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும்.

    அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர்.

    • அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.
    • இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

    பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு இரண்டே இரண்டு பொருட்களின் மீது தீராத காதல் என்று திருமால் அடியவர்கள் சொல்கிறார்கள்.

    அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.

    இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

    துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரில்லாத பெண் என்று பொருள்.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துளசியை திருத்துழாய் என்று அழைப்பார்கள்.

    ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாக துளசி கருதப்படுவது.

    அனுவரதமும் பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்.

    புனிதமிக்க ஆபரணம் ஆகவும் துளசி திகழ்கிறது.

    துளசியின் ஒவ்வொரு அங்கமும் புனிதமானது.

    அதன் இலை, கிளை, வேர் மட்டுமல்ல, துளசி செடியை தாங்கி புண்ணியம் பெற்ற மண்ணும் மகத்துவம் பெற்ற தாகவே கருதப்படுகிறது.

    துளசியின் வேர்களில் சகல தேவதைகளும் வாழ்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்பவருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

    • இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம்.
    • மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

    கிழக்கு: இத்திசை நோக்கி, தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாக்குவார்கள்.

    தென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

    தெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத்தரலாம்.

    தெற்மேற்கு:இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

    மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

    வடமேற்கு:இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்ப சண்டைகள் நீங்கும்.

    வடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

    வடகிழக்கு:இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர் தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

    • அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும்.
    • இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.

    தேங்காய் எண்ணை தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.

    இலுப்பை எண்ணை தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

    வேப்ப எண்ணை தீபம் ஏற்றினால் கணவன், மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

    வேப்பெண்ணை, இலுப்ப எண்ணை, நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும்.

    மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.

    நெய், விளக்கு எண்ணை, இலுப்பைஎண்ணை, தேங்காய் எண்ணை நல்லெண்ணை என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும்.

    அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும்.

    இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதை நம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். எனவேதான் வீடுகளில் தினமும் விளக்கேற்றுங்கள்.

    ஆலயங்களில் 108 தீபம், லட்சதீபம் ஏற்றுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

    • ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.
    • நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கை கூடும். செல்வம் பெருகும்.

    ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.

    இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும் மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.

    நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும்.

    ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.

    நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கை கூடும். செல்வம் பெருகும்.

    நல்லெண்ணை தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

    நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும், நவகிரக தோசம் நிவர்த்தி தரும்.

    எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணை ஏற்றது.

    விளக்கு எண்ணை தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.

    • நெய் அல்லது எண்ணை விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.
    • இரண்டு திரிகளை ஒன்றாகச்சேர்த்து முறுக்கி திரி இட வேண்டும்.

    தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும்.

    விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்ற வைக்கவும்).

    நெய் அல்லது எண்ணையை விளக்கில் ஊற்றும் போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும்.(அதாவது குளம் போல). அதன் பின் தான் திரி இட வேண்டும்.

    நெய் அல்லது எண்ணை விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.

    இரண்டு திரிகளை ஒன்றாகச்சேர்த்து முறுக்கி திரி இட வேண்டும்.

    இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

    திரியை நன்கு நெய்யிலோ, எண்ணையிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்றவேண்டும்.

    • தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக்கூடியது.
    • வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

    வீடுகளில் தினமும் தீபம் ஏற்றவேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள்.

    எனவே வீட்டில் தினமும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக்கூடியது.

    தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும், இருப்பதாகக் கருதப்படுகிறது.

    எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்சதீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

    அதே போல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

    கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த “துக்க நிவாரண அஷ்டகத்தை” கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த "துக்க நிவாரண அஷ்டகத்தை" கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    துக்க நிவாரண அஷ்டகம்

    மங்கள ரூபிணி மதியணி சூலினி

    மன்மத பாணியளே;

    சங்கடம் நீக்கிடச் சடுதியில்

    வந்திடும்

    சங்கரி சவுந்தரியே!

    கங்கண பாணியன் கனிமுகங்

    கண்டநல்

    கற்பகக் காமினியே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    கானுறு மலரெனக் கதிர்

    ஒளி காட்டிக்

    காத்திட வந்திடுவாள்;

    தானுற தவஒளி தாரொளி மதி

    யொளி தாங்கியே வீசிடுவாள்;

    மானுறு விழியாள் மாதவர்

    மொழியாள்

    மாலைகள் சூடிடுவாள்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    சங்கரி சவுந்தரி சதுர்முகன்

    போற்றிடச்

    சபையினில் வந்தவளே;

    பொங்கரி மாவினில் பொன்னடி

    வைத்துப்

    பொருந்திட வந்தவளே;

    எங்குலந் தழைத்தட எழில்வடிவுடனே

    எடுத்தநல் துர்க்கையளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரண காமாட்சி!

    கொடுத்தநல் குமரியளே;

    சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற்

    சக்தியெனும் மாயே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    எண்ணிய படி நீ அருளிட வருவாய்

    எங்குல தேவியளே;

    பண்ணிய செயலின்

    பலனது நலமாய்ப்

    பல்கிட அருளிடுவாய்;

    கண்ணொளியதனால்

    கருணையைக் காட்டிக்

    கவலைகள் தீர்ப்பவளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    தணதண தந்தன தவிலொலி

    முழங்கிட

    தண்மணி நீ வருவாய்;

    கணகண கங்கண

    கதிர்ஒளி வீசிடக்

    கண்மணி நீ வருவாய்;

    பணபண பம்பண பறையொலி

    கூவிடப்

    பண்மணி நீ வருவாய்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

    பஞ்சநல் பாணியளே;

    • இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.
    • எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது.
    • இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    வீட்டில் பூஜைகள் செய்வதை முதலில் நாம் ஒரு பயிற்சி மாதிரி கூட தொடங்கலாம்.

    பிறகு அதுவே பழக்கமாகி விடும். அந்த பழக்கம் நீடித்தால் அது வழக்கமாகி ஒரு புதிய மரபை ஏற்படுத்தி விடும்.

    தினசரி வாழ்க்கையில் நாம் தினமும் எப்போது சாப்பிட்டு பழகுகிறோமோ, அந்த நேரம் வந்ததும் பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி விடும்.

    தூங்கும் நேரம் வந்ததும் கண்கள் சொக்கத்தொடங்கி விடும்.

    அது போலவே அதிகாலையில் இறைவனுக்கு பூ போட்டு பூஜை செய்து பழகி விட்டால், அது உங்களை தினம், தினம் இறைவன் பக்கம் கொண்டு வந்து விடும்.

    இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.

    எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது. இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    அதுமட்டுமா குடும்பத்தில் மகிழ்ச்சி, உள்ளத்தில் ஒருவித சந்தோஷம், கடவுளுடன் நெருங்கி விட்டோம் என்ற நெகிழ்ச்சி போன்ற எல்லாம் கிடைத்து விடும்.

    கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இவையெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

    ஒருநாள்..... ஒரே ஒருநாள் வீட்டில் முழுமையான பூஜையை கேட்டு தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்.

    இறை அனுபவத்தை உணர்வீர்கள்.

    • நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.
    • இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

    பல புதுப்புது வியாதிகள் மனிதர்களை தாக்கி வரும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் தெய்வ வழிபாடிலும் மக்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளது.

    திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை என்று சொல்வார்கள்.

    ஆம்.... நம் ஒவ்வொருவருக்கும் தெய்வம்தான் துணை.

    நோய் பயம் நீங்கவும், புத்துணர்ச்சியுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவழிபாடு முக்கியமானது.

    இறைவழிபாடு செய்து வந்தால்தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

    புதிய தன்னம்பிக்கை வரும். எனவே வீட்டிலேயே வழிபாட்டை உற்சாகத்துடன் தொடங்குவோம்.

    விரைவில் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.

    எனவே, தினசரி பூஜைகளில் நம்மை ஈடுபடுத்த வேண்டும்.

    பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலை மோதும்.

    மாலை வந்ததும், பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்.

    மனதுக்கும் அமைதி கிடைக்கும்.

    அந்த சந்தர்ப்பத்தில் பகவானிடம் "பகவானே... நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்" என்று பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.

    பிறருக்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், குடும்பத்தை கவனிக்கிறோம்.

    இதெல்லாம் ஒரு கடமை. அதே போல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும் சுலபமான வழி பகவானை வழிபடுவதுதான்.

    மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய கால அளவு கொண்டது. இந்த குறுகிய காலத்துக்குள் நாம் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் ஆனந்தமாக செலவிடுவதே நம்மை உயர்நிலைக்கு அழைத்து செல்லும்.

    இந்த பிறவியில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.

    அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பைக் கொண்டது. ஆனால் எல்லாவற்றிலும் நம் ஆத்மா மகிழ்ச்சி அடையாது.

    நமது ஆத்மா திருப்தி அடைய வேண்டுமானால், இந்த பிறவியில் நமக்கு உயிரையும், அழகான உடம்பையும் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    நமக்கு கிடைத்த எல்லா பொருட்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் வேண்டும்.

    இதற்காகதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை கட்டினார்கள்.

    ஆனால் கடந்த சில மாத வாழ்க்கை சூழலில் தினமும் ஆலயத்துக்கு செல்ல இயல்வதில்லை.

    எனவே வீட்டில் பூஜை செய்து இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்கலாம். 

    ×