என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
    • அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    தஞ்சையில் உள்ள பிரதாப வீர அனுமான் என்கிற மூலை அனுமாரை தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல உடல்நலமும், நீங்காத செல்வமும், குறையாத ஆயுளும் பெறலாம் என்கிறார்கள்.

    விபத்துக்கள், காரிய தடைகள் போன்றவை விலகி சந்தான பாக்கியம் கிட்டும் என்றும், தீய திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லை விலகும் என்றும் சொல்கிறார்கள்.

    இது தவிர மனவேதனைகள், கஷ்டங்கள் தீரும்.

    வாழ்வில் அமைதி உண்டாகும், நிலையான கல்விச் செல்வம் உண்டாகும், தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

    ஆத்ம பலம், மனோபலம், புத்தி பலம், தேக பலம், பிராண பலம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

    அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    56 எலுமிச்சம் பழங்கள் கொண்ட மாலையை 18 பக்தர்கள் ஆளுக்கு ஒன்றாக கொண்டு வந்து 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதை ஒவ்வொரு அமாவாசை அன்றும் இங்கு காணலாம்.

    அப்படி செய்தால் எப்பேற்பட்ட கிரக தோஷங்களும், உயிருக்கு ஆபத்தான நோய்களும் நீங்குவதாக சொல்கிறார்கள்.

    • இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.
    • அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    குடவாயில் என்னும் தலம் திருத்தலையாலங்காட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது.

    இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கோணேசுவரர். இறைவியின் பெயர் பெரிய நாயகி.

    திருணபிந்து என்னும் முனிவர் சிவபக்தி நிறைந்தவர்.

    இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.

    அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    அந்த அன்பரின் துன்பத்தினைப் போக்க திருவுளம் கொண்ட எம்பெருமான் அங்கிருந்த குடத்திலிருந்து வெளிப்பட்டு அவருடைய தொழு நோயை நீக்கி அருளினார்.

    இறைவனின் பெருங்கருணையைக் கொண்டு அம்முனிவர் இறைவனின் திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்.

    எத்தகைய கொடிய நோய்கள் பீடித்தவராக இருந்தாலும் இத்தலத்தில் அமைந்திருக்கும் அமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவன் கோணேஸ்வரரையும் இறைவி பெரிய நாயகியம்மையையும் மனம் உருகி பூரண நம்பிக்கையுடன் வழிபட்டால் அனைத்து நோய்களும் விலகும்.

    குறிப்பாக தொழு நோய் மற்றும் சரும வியாதிகள் அனைத்தும் விலகும்.

    • பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
    • உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும். உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.

    ஓம் கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா, ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய, ஜெய சாய் என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.

    இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம்.

    இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

    எந்த மந்திரம் உச்சரித்தாலும் ஓம் என்று முதலில் சொல்லி தொடங்குங்கள்.

    ஓம் என்று அடி வயிற்றில் இருந்து உச்சரிக்கும் போது உடலும், மனமும் வலு அடையும்.

    குறிப்பாக இதயத்துக்கு நல்லது.

    பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

    உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    வாழ்க வளமுடன் என்று சொல்வது கூடமிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

    திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.

    பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடப்பதை காணலாம்.

    • இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடிகொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.
    • அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    இப்படி 'ஓம்' மாதிரியான வேதமந்திரங்கள் நம் உடலுக்குள் மட்டும் தனது முழு சக்தியைப் பயன்படுத்தி நற்செயல்களை செய்வதில்லை.

    வெளியிலும் தன் ஆற்றலை பிரயோகிக்கிறது.

    இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடி, கொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.

    அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    நமது முன்னோர்கள் பலர் தங்களை வருத்தும் கொடிய நோய்கள் தீர விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி, துளசி அர்ச்சனை செய்து வந்திருக்கிறார்கள்.

    அவர்கள் நோயும் குணமாகி இருக்கிறது.

    ஓம் சக்தி பராசக்தி என்று சொன்னால் நமக்கு நல்ல துணிவும், உள்ளத்தில் நல்ல தெளிவும் கிடைக்கும்.

    கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் இந்த மந்திரங்களைச் சொல்லி வந்தால் அதன் பலன் அநேகம்.

    பொதுவாக மந்திரங்களை 108 முறை தொடர்ந்து சொல்ல வேண்டும்.

    அல்லது 1008 முறை சொல்ல வேண்டும்.

    • ‘உ’ என்பது நடுப்பகுதியிலும், ‘ம’ என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • எனவே ‘ஓம்’ என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    வேத மந்திரங்களின் ஒலிகளுக்கு நரம்புகளை மிருதுவாக்கி தூய்மைப்படுத்தும் சக்தி இருக்கிறது.

    பிராண வாயுவை ரத்தக் குழாய்களில் எந்தவிதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.

    ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பு, கசடு, அடைப்புகளை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    மந்திரம் என்று சொல்கிறபோது அதன் முதல் நிலையாக அமைந்திருப்பது 'ஓம்' என்னும் மந்திரச்சொல்.

    ஓம் என்பதில் அ, உ, ம என்ற மூன்று ஒலிகள் இருக்கின்றன.

    'அ' என்கிற ஒலியானது நுரையீரல் பகுதியின் கீழ் பகுதியில் உள்ளது.

    'உ' என்பது நடுப்பகுதியிலும், 'ம' என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.

    எனவே 'ஓம்' என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    நுரையீரல் இப்படிச் செயல்படுவதால் அதோடு இணைந்து செயல்படும் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

    • ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.
    • சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    பிரணவ மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

    ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

    சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    சில மந்திரங்களை திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

    ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.

    இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

    தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.

    வீட்டில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.

    • சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.
    • பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    மனம் + திரம் = மந்திரம். மனதுக்கு திடம் கொடுப்பதுதான் மந்திரம்.

    சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.

    பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டனர்.

    சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.

    மந்திரங்கள் பல கோடி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம் இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.

    • யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.
    • அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.

    அவளிவணல்லூர் என்னும் தலம் சாலியமங்கலத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கும் புனிதத்தலமாக இத்தலம் விளங்குகிறது.

    இத்தலத்தினில் பணி செய்து வந்த பூஜை குருக்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்.

    அவர்களில் மூத்தவளை ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

    அந்த கால கட்டத்தில் அவர் தீர்த்த யாத்திரை போக வேண்டியிருந்ததால் தன் மனைவியை தன் மாமனாரான பூஜை குருக்களின் இல்லத்தில் தங்கும்படி விட்டுச் சென்றார்.

    அவர் தீர்த்தயாத்திரையில் இருந்த போது அவருடைய மனைவிக்கு வைசூரி கண்டு கண்கள் குருடாகி விட்டன.

    அவருடைய தோற்றமும் மாறிப்போயிருந்தது.

    தீர்த்த யாத்திரையையெல்லாம் முடித்துக் கொண்டு தன் மனைவியை அழைத்துப் போக அவர் வந்தபோது தன்னுடைய மனைவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அவளுடைய தங்கையை மனைவி என்று நினைத்து அழைத்து போக எண்ணினார்.

    மாமனார் அவள் உன் மனைவி அல்ல.

    இவளே உன் மனைவி என்று குருடியாக இருந்தவளைக் காட்டினார்.

    அதனை நம்ப மறுத்த அவர் மனைவியின் தங்கையே தன்னுடைய மனைவி என்றும்,

    தான் தீர்த்த யாத்திரை முடிந்து வந்து கேட்கும்போது யாரோ ஒருத்தியை என் தலையில் கட்டப் பாார்க்கிறார் என்றும் அவர் ஊர் நடுவே சென்று புகார் செய்தார்.

    பூஜை குருக்கள் வருந்தியபடி இறைவனை வேண்ட இறைவன் இடபாாரூடராக அங்கு தோன்றி உன் மனைவியாகிய அவளே இவள் என்று பாார்வையற்ற பெண்ணை அடையாளம் காட்டியருளினார்.

    மேலும் அந்த பெண்ணை அங்கிருந்த தீர்த்தத்தில் மூழ்கச் செய்து கண்ணைக் கொடுத்து அருள் புரிந்தார்.

    வைசூரியால் ஏற்பட்ட வடுக்கள் எல்லாம் மாறி அவள் முன்பு போலவே திகழ்ந்தாள்.

    யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.

    அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.

    இந்த வரலாற்றினை மனதில் நிறுத்தி எம்பெருமானை மனம் உருகி வேண்டினால் வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும் என்பது இங்கு பிரசித்தமாக விளங்கி வருகிறது.

    மேலும் வராக அவதாரம் எடுத்து பூமியினை அசுரனிடமிருந்து மீட்ட திருமால் அந்தப் பணி முடிந்த பிறகும் ஆவேசம் அடங்காமல் ஆர்ப்பாாட்டம் செய்தார்.

    அதன் காரணமாக உயிர்களுக்கு நாசம் ஏற்பட்டது.

    அப்போது எம்பெருமான் தோன்றி அந்த வராகத்தினை எம்பெருமானுக்கு வாகனமாக்கி கொண்டார்.

    இந்த ரிஷபாாருடராக எம்பெருமான் காட்சி தருவது தருமத்திற்கு வெற்றி தருவதற்காக என்கிற தத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகும்.

    நோய்கள் விலகுவதோடு மனதிலே ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்த்தருளும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

    • மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.
    • பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    வேப்ப மரமும் வேப்பிலையும் பராசக்தியின் மறு அம்சமாக கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எல்லா அம்மன் கோவில்களிலும் வேம்பு நிச்சயம் இருக்கும்.

    வேப்பமரத்தை அம்மனாக கருதி வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

    இதனால் தான் வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டிருந்தால் வாசலில் சிறிது வேப்ப இலையை சொருகி வைத்திருப்பார்கள்.

    பெரும்பாலான அம்மன் தலங்களில் வேப்ப மரம் தல விருட்சமாக இல்லாவிட்டாலும் கூட வேப்ப இலையை பக்தர்கள் நிறைய பயன்படுத்துகிறார்கள்.

    பக்திக்கு மட்டுமல்ல. தினசரி வாழ்வுக்கு வேப்ப இலை பெரிதும் பயன்படுகிறது.

    வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து, உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணையில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும்.

    அம்மை கண்டவர்களை சுற்றி வேப்பிலை கொத்துக்களை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும், கிருமியும் அண்டாது.

    தென்னிந்திய சமையலில் வேப்பம் பூக்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பு அன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம் பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்வார்கள்.

    மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.

    பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமப்படும்.

    வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு மற்றும் குழம்பு, மிளகு ரசம் தயார் செய்யும் போது சிறிது வேப்பம்பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிற்று உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

    கல்லீரல் பாதுகாக்கப்படும்.

    வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் நீங்கும்.

    உலர்ந்த வேப்பம் பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.

    • அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
    • குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    வீட்டில் தினமும் சாமி கும்பிட்டு முடித்ததும் குங்குமத்தை பெண்கள் நெற்றியிலும், தலை வகிட்டிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

    நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதில் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.

    நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

    நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.

    இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.

    யோகப் பயிற்சியில் கழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும்.

    தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

    யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.

    ஞானக்கண் என்றும் அழைக்கப்படும்.

    அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

    குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

    நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஷ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.

    ஹிப்னாட்டிசம் முதலிய மனோவசியங்கள் புருவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

    சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டில் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.

    அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

    சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

    குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

    பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

    தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

    திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

    ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

    கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

    குரு விரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

    சனிவிரலால் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும்.

    குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுப்பாட்டிற்கு நல்லது.

    • துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.
    • அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.

    பழங்களில் எலுமிச்சை பழம் தான் வழிபாடுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

    பூஜைக்கு வாழைப் பழங்கள் வைக்கப்படுவது உண்டு.

    ஆனாலும் இறைவன் சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களுக்கும் எலுமிச்சை பழம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

    அம்மனுக்கு மலர் மாலைகள் அணிவிப்பர். தங்க மாலைகள் போடுவர்.

    எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பதும் உண்டு.

    திருஷ்டி சுற்றிப் போடுவது என்றால் எலுமிச்சம் பழம்தான்.

    புதிய வாகனம் வாங்கும்போது பூஜை எல்லாம் செய்துவிட்டு அதன் சக்கரத்தின் அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதும் உண்டு.

    ஆலயங்களில் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இப்போதும் உண்டு.

    மேல் மலையனூரில் எலுமிச்சம் பழ வழிபாடு மிக அதிக அளவில் உள்ளது.

    பதினொன்று, ஐம்பத்தொன்று, நூற்றியொன்று, ஆயிரத்தொன்று என்று எலுமிச்சை விளக்கேற்றிப் பலரும் வழிபடுவர்.

    துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.

    அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் அற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.

    கொரோனா பாதித்தவர்களுக்கு வைட்டமின் சி, டி சத்து கொண்ட உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள சொல்கிறார்கள்.

    எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

    எனவே வீட்டில் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தி பூஜை செய்துவிட்டு அதை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தற்போதைய வைரஸ் பரவல் காலத்தில் எலுமிச்சம் பழம் அதிகம் தேவை.


    • உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும்.
    • நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும்.

    நமது புராதன மந்திரங்களில் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம்தான்.

    விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது.

    நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக சக்தியைத் தட்டி எழுப்பக்கூடிய மந்திரமே காயத்ரி மந்திரம்.

    காயத்ரி மந்திர பொருள்:

    நம்முடைய புத்திகளை நல்லனவற்றைப் பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற (சூரிய மண்டலத்தில் உள்ள) ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன்.

    ஜபம் செய்யும் போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

    அவரவர்களுடைய சக்தி நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008, 108, 28 முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை.

    முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை.

    பிறர் காதில்படும்படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை.

    உயர்ந்த குரலில் ஜபிப்பதைவிட முணு முணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது.

    முணு முணுப்பைவிட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது.

    காயத்ரி ஜபம் செய்யும்போது இரண்டு உள்ளங்கைகளையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும்.

    விரல்கள் சேர்ந்திருக்கக் கூடாது.

    ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பிரதக்சினமாக மோதிரவிரலின் அடிப்பாகத்திலுள்ள கணுவரை எண்ண வேண்டும்.

    இப்படி எண்ணினால் பத்து எண்களாகும்.

    அக்சமாலை முதலியவற்றைக் கொண்டு எண்ணக்கூடாது.

    ஓம், பூர் புவஸ்ஸூவ

    தத்ஸவி துர்வ ரேணியம்,

    பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோயோ ந பிரசோதயாத்

    என்று ஐந்து பகுதிகளாக நிறுத்தி ஜபிக்க வேண்டும்.

    தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக உட்காந்து ஜபிக்க வேண்டும்.

    இரண்டு கைகளையும் வஸ்திரத்தினால் மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும்.

    பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது.

    இந்த மத்திரத்தை சொல்வதால், உயிர் வலிமை பெறும்.

    உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

    உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும்.

    நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும்.

    காயத்ரி மந்திரம் உலகத்துக்கே பொதுவானது.

    இது பரம்பொருளை தியானிக்கச் சொல்கிறது. எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

    எனவே நாடு, மொழி, இனம் மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இதனை ஜபிக்கலாம்.   

    ×