என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- நீங்கள் துளசி மாடத்தை வணங்குபவராக இருந்தால் கீழ்கண்ட பிரார்த்தனையை மனதில் பக்தியுடன் சொல்லுங்கள்
- புருஷோத்தமன் ஸ்ரீமன் நாராயணணுக்கு பிரியமானவளே, சகலமும் அறிந்தவளே. உன்னை வணங்குகின்றேன்.
நீங்கள் துளசி மாடத்தை வணங்குபவராக இருந்தால் கீழ்கண்ட பிரார்த்தனையை மனதில் பக்தியுடன் சொல்லுங்கள்:
விஷ்ணுவின் மனதில் இருப்பவளும், அமரர்களால் துதிக்கப்பட்டவளும், மனம், வாக்கு, சர்வ இந்திரியங்களால் பரிசுத்தமானவளுமான துளசி தேவியை வணங்குகிறேன்.
பத்மநாபனுக்கு பிரியமானவளும், பிரம்ம தேவனால் பூஜிக்கத் தகுந்தவளும், தாமரை மலர் போன்ற விசாலமான கண்களை உடையவளும் ஆன துளசி தேவியே!
எனக்கு வரத்தையும், அபயத்தையும் கொடுத்து அருள் செய்.
திவ்யமான ரூபத்தை தரித்தவரும், திவ்யமான ஆபரணங்களை கொண்டவளும், தாமரை போன்ற புன்சிரிப்புடன் கூடிய வதனத்தை உடையவளுமான துளசியே!
உன் நான்கு திருக்கரங்களாலும் அருள் தருவாயாக!
துளசி மாதாவாகிய உனக்குள் சகல தேவதைகளும், எப்போதும் வாசம் செய்வதால் உன்னை அர்ச்சிப்பதால் எல்லா தேவதைகளும் வழிபட்டவர்களாக ஆகிறார்கள்.
உன்னை பூஜிப்பது சகல தேவதைகளையும், பூஜிப்பதற்கு சமம் என்பது எனது கருத்து.
புருஷோத்தமன் ஸ்ரீமன் நாராயணணுக்கு பிரியமானவளே, சகலமும் அறிந்தவளே. உன்னை வணங்குகின்றேன்.
சகல செல்வங்களையும் அருளும் தேவியே என்னை எல்லா பாவங்களில் இருந்தும் காப்பாயாக!
- ஈஸ்வரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்.
- துளசி 400 விதமான நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது.
1. தெய்வ மூலிகையாம் துளசியின் மகிமை அளவு கடந்தது.
2. துளசி விஷ்ணுவுக்கு உகந்தது.
3. ஈஸ்வரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்.
4. துளசியை வணங்குவதால் நற்குணம், ஒழுக்கம், மக்கட் பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும்.
5. துளசி 400 விதமான நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது.
6. சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை துளசி வழங்குகிறது என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.
7. துளசி செடியை வளர்த்து நீர்பாய்ச்சி ஆண்களும் , பெண்களும் வழிபட வேண்டும்.
8. துளசி மாடத்தில் உள்ள வேர் மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
9. திருமணம் ஆகாத பெண்கள் தான் விரும்பிய கணவனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும்.
10. வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
- ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன்களை பெறுவர்.
- துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
1. அன்றாடம் பெண்களும், ஆண்களும் துளசியை வழிபடலாம்.
2. திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.
3. ஏகாதசியன்று விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
4. திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால் நன் மக்கட்பேறு அடைவார். கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சமும் நீங்கும்.
5. துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
6. துளசி விரதத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.
7. வேதவிற்பன்னர் மூலம் அஷ்டாக்ஜரம் புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு செய்தால் இஷ்டமான பலன் உடனே கிட்டும்.
8. பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சினிங்கி வைத்து வழிபட்டு வந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுளை பெறுவார்கள்.
9. வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.
10. ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன்களை பெறுவர்.
11. மகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீ துளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம்.
- மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே துளசியைப் பறிக்க வேண்டும்.
- துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும்.
துளசி செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும்.
துளசியைப் பூஜிப்பது கங்கா ஸ்நானத்திற்கு சமமானபலனைக் கொடுக்கும்.
கொடும்பாவங்கள் செய்தவன் ஆயினும் அந்திம காலத்தில் துளசி தீர்த்தம் அருந்தி துளசித் தளத்தை தலையில் தரித்து பின் உயிர் நீக்க நேர்ந்தால் கட்டாயம் முக்தி அடைகிறான்.
துளசித் தளம் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது. விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது.
விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள் ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.
மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி செடியை பறிக்கக் கூடாது.
திருவோண நட்சத்திரம் சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே துளசியைப் பறிக்க வேண்டும்.
துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
துளசி மணி மாலை அணிவதால் உடலை நோய்கள் அண்டாது காக்கும்.
துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜெபம், பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.
மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும் துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரண பலன்கள் நமக்கு கிடைக்கிறது.
தானங்கள் செய்யும் போது முழுமையான பலன் தானம் செய்யும் பொருளுடன் துளசித்தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.
சங்கு, துளசி, சாளக்கிராமம் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானி ஆகும் பாக்கியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி திதி பிருந்தாவன துவாதசி என கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள்.
அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.
நெல்லிமரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால் துளசி மாடத்தில் நெல்லி மரக்கொம்பையும், நட்டு வாழை மரதோரணங்களுடன் மாக்கோலமிடடு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.
நிறையதீபங்கள் ஏற்றி பெண்களுக்குதாம்பூலம் இனிப்பு அளிப்பது வழக்கம்.
எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து நாமும் வெற்றி பெறுவோம்.
- இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.
- எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.
இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.
துளசியின் மஞ்சரியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தவர் எல்லாவித பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.
துளசி இலை ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்த பூஜையின் பலன் முழுமையாக நமக்கு கிடைப்பதில்லை.
மேலும் நிவேதனத்தின் போதும் துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார்.
ஆகவே துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோருருத்திரர்களும், பன்னிரண்டு ஆதித்தியர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சனை செய்பவர் தம் முன்னோர்களையும் பிறவித்தளையிலிருந்து விடுவிக்கிறார்.
துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.
எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.
அதனால்தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாக்கியது.
மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு எம பயம் கிடையாது.
துளசியை வளர்த்து தரிசித்து பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
- மகப்பேறு இல்லாத தம்பதியினர் துளசி வழிபாடு செய்தால் நல்ல பலனை கைமேல் பெறுவார்கள்.
- நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.
ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசியின் மகாத்மியம் ஒன்று சொல்லப்பட்டு உள்ளது.
தசரத மகாராஜனுக்கு குழந்தைப்பேறு வேண்டி அவன் முதன்முதலில் பட்டத்து ராணிகளோடு துளசி பூஜை செய்ததாகவும்
துளசி தேவியே நேரில் தோன்றி துளசி காஷ்டம் என்ற துளசி குச்சிகளை கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்,
உனக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம் கொடுத்ததாகவும் இருக்கிறது.
எனவே துளசி வழிபாடு என்பது சகல பாவங்களையும் போக்குவது மட்டுமல்ல குழந்தை வரத்தையும் தருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.
மகப்பேறு இல்லாத தம்பதியினர் துளசி வழிபாடு செய்தால் நல்ல பலனை கைமேல் பெறுவார்கள்.
துளசி பூஜை செய்யும் போது மிகவும் கண்டிப்பாக ஸ்ரீகிருஷ்ணன் ஆக கருதப்படும் நெல்லி மரத்தின் கிளையை அருகில் வைத்து செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக பூஜை செய்யப்படும் போது நெல்லி மரக்கிளை வாடிவிடும் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவப்படமும் பிரதிமையோ வைத்து பூஜை செய்யலாம்.
நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.
மனதில் மகிழ்ச்சியும் இல்லத்தில் இன்பமும் வாழ்வில் ஒருவித தெம்பும் கிடைப்பதை கண் கூடாக காணலாம். துளசி மாதா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள்.
- தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.
- ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.
தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.
பிரம்மனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற துளசி பெண் வடிவத்தை விட்டு செடி வடிவம் தாங்கி திருமாலுக்கு பிரியமானவளாக விளங்குவதாக புராணங்கள் சொல்லுகின்றன.
துளசி செடியின் அடியில் தேங்கி நிற்கும் தீர்த்தத்தில் பாவங்களை போக்கும் புண்ணியங்களை தரும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.
ஹரி வம்சம் என்ற நூல் மகாவிஷ்ணு ஒரு முறை தன்னை மகிழ்விக்கும் துளசியை தான் மகிழ்விக்கும் பொருட்டு துளசி பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.
கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் திருமால் அந்த பூஜையை செய்ததாகவும் அன்றையதினம் நாமும் செய்தால் துளசி மனம் மகிழ்ந்து வரங்களை கேட்காமலேயே தருவாள் என்று பயன் பெற்றவர்கள் நெஞ்சம் நெகிழ சொல்கிறார்கள்.
நமது முன்னோர்கள் நெருப்பு வடிவான சிவபெருமானுக்கு குளிர்ச்சி தருகின்ற வில்வ பத்திரத்தையும், குளிர் மேகம் போன்ற விஷ்ணுவுக்கு, வெப்பத்தை தரும் துளசி பத்திரத்தையும் பூஜை பொருளாக வைத்திருக்கிறார்கள்.
ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.
தைமாத வெள்ளிக்கிழமையும், மாசி மாத சுக்லபட்ச துவாதசியும், பங்குனி மாத அம்மாவாசை மற்றும் பவுர்ணமி சித்திரை மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்ல பட்ச தசமி மார்கழி மாத விடியற்காலை நேரம் துளசி தேவியை பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் என்று முன்னோர்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார்கள்.
- சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.
- துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.
எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்து இருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.
சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.
துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.
எவரது இல்லத்தில் துளசி செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலமாகும்.
அங்கு அகால மரணம் வியாதி முதலியன ஏற்படாது.
துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்.
துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
துளசியை பூஜை செய்ததன் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.
விஷ்ணு பூஜைக்கு பிறகு சந்தன தீர்த்தத்துடன், துளசி தளத்தை பிரசாதமாக பெறுவது பக்தர்களுக்கு ஒப்பானதாகும்.
இதை சரணா அமிர்தம், தீர்த்தப் பிரசாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்து கூறுவார்கள்.
இதைப்பற்றி ஆகம நூல் துளசி தளம் கலந்த ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகி வருபவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.
அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது.
- துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.
- துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.
துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.
பெண்கள் மாத விடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திரபாக்கியம் கிட்டும்.
பாவம் போக்கும் துளசி மாலை
துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள் அசுவினிதேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர்.
இலையின் நுனியில் பிரம்மன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி, சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.
துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.
துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.
துளசி காஸ்ட (கட்டை) மாலையை கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும் துளசி தீர்த்தத்தை பருகினால் பரமபதம் செல்வர்.
துளசிக்கு வேறு பல பெயர்களும் உள்ளன.
1. திருத்துழாய் (ஆண்டா ளுக்கு முதலில் இந்த பெயரே இருந்தது)
2. துளபம்
3. துளவம்
4. சுகந்தா
5. பிருந்தா
6. வைஷ்ணவி
7. லட்சுமி
8. கவுரி
9. மாதவி
10. ஹரிபிரியா
11. அம்ருதா
12. சுரபி
- கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
- விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன்.
ஐந்து தலைநாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன்.
எனவே தான் கண்ணன் துளசி மாலை அணிந்து இருப்பான்.
வீடுகளின் பின் பக்கத்தில் துளசி மாடம் அமைப்பதும், இதனால் தான்.
பூச்சிகள் நுழையாமல் தடுக்க வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழி பட்டார்கள்.
தற்போதும் இந்த முறை பல வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள்.
விஷ்ணுவின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும்.
வீட்டின் தென் மேற்கு பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும்.
துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றிகோல மிட்டு வழிபட்டு வந்தால், நல்லது.
துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
- கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.
- சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்
ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.
துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை.
திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே.
துளசி உள்ள இடத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார்.
துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.
கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும்.
துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம்.
கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.
சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்






