என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- சிவலிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.
- இன்றைய தினத்தில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.
பிரதோஷங்கள் பல இருப்பினும் அவை அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் தான். இதற்கு மகா பிரதோஷம் என்ற பெயரும் உண்டு. சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் ஆகும்.
பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெறலாம். அன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் செல்லவேண்டும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து பிரதோஷ தரிசனம் கண்ட பின் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.
நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
பிரதோஷ தினத்தன்று செய்யக்கூடாத விஷயங்களை நாம் பார்ப்போம்:
பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது.
பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.
பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது.
சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது.
அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.
சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.
பிரதோஷ தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக் கூடாது. பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும்.
- வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
- இதனால் நாம் என்ன சாப்பிட்டாலும் விரைவில் செரிமானமாகி விடும்.
ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாகி விடும்.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமையான தாம்பூலமாக அமையும். எனவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி தாம்பூல பைகளில் கொடுப்பது வழக்கம்.
இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில், எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.
இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
இந்த ஆண்மைக்குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஓர் உண்மையாகும். எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும்.
வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம்.
முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பலவிதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை என்பர்.
இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகி வரும்.
ஒரு வெற்றிலையில் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகிற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் அடையும்போது ஜீரணம் எளிதாகிறது.
துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. சுண்ணாம்பின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொள்வதால் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.
வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும். வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு.
வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம் என்பது ஐதீகம்.
- பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
- பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.
இறைவனை தீபமேற்றி வணங்குவதுதான் நமது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றுவதும், தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்குகளில் ஒன்றாக உள்ளது.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்படுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவிதமான சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுனம் என அஞ்சப்படுகிறது.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
- மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.
- கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தூத்துக்குடி மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.
மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.
கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆடி, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை ஒன்று அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய்,-நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.
இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
வாழ்வில் மனத்துன்பம் போக்குவதுடன் எதிரிகளின் ஏவல்களை ஒழித்து, வேண்டும் வரத்துடன் நல்வாழ்வும் தரும் சித்தர் நகர் மகா பிரத்தியங்கிராதேவி மகா காலபைரவரை நாமும் வணங்கி நல்வாழ்வு பெற்றிட இன்றே ஆலயம் சென்று தரிசித்திடுவோம்.
- இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும்.
- முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும்.
தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரம்மாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர்.
சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.
இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும்.
இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும்.
புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.
ஏவல், பில்வி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும்.
அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதிகமாகும்.
இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும்.
முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும்.
ஞயிற்றுக்கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
- பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும்.
- புத்திர பாக்கியம் கிட்டும்
-"ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிக்வே
கராள தம்ஷ்டரே பிரத்யங்ரே
க்ஷம் க்ரீம் கூம் ப்பட்"
என்ற பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரத்தை நாள்தோறும் சொல்லி வந்தால் வாழ்வில் பில்லி, சூனியம் உள்ளிட்ட பிணிகள் எதுவும் நம்மை அண்டாது.
அகங்காரமும், ஆணவமும் கொண்ட இரண்யகசிபுவை அழிக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் பகவான் நாராயணன்.
கோர ரூபத்தில் வெளிப்பட்ட நரசிம்மர் இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, ரத்தத்தைக் குடித்து, அவனைக் கொன்று ஆணவத்தை அழித்தார்.
சம்ஹாரம் முடிந்த பின்பு நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க உருவாக்கப்பட்ட சரபேசுவரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக பிரத்தியங்கிரா தேவி பத்திரகாளியால் உருவாக்கப்பட்டாள்.
பிரத்தியங்கிராதேவி சிங்கமுகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும் சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீலநிற ஆடையும் அணிந்த விஸ்வரூபத்தினை உடையவள்.
கருணை உள்ளம் கொண்ட அன்னையான மகா பிரத்தியங்கிராதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை அருள் மழையாய் பொழிந்து காத்து வருபவள் ஆவாள்.
பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.
- மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.
- மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.
மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.
மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.
காப்புக் கடவுளாக விளங்குகிறாள் பிரத்தியங்கிரா தேவி.
வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்தே குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.
பயத்தை அகற்றுபவள், தைரியத்தை கொடுப்பவள், தெரிந்தும் தெரியாமலும் வரும் பகையை முறியடிப்பவள் பிரத்தியங்கிரா தேவி, சத்ருவிடம் ஜெயம் சேர்ப்பாள்.
இவளை உபாசிக்க நமக்கு மன உறுதி, தனித்தகுதி அவசியம். நல்லெண்ணம், நற்செய்கைகள், தேவியின் மீது உயர்ந்த பக்தி, இருப்பின் எண்ணம் யாவும், வெற்றி உண்டாகும். லட்சியம் நிறைவேறும்.
- திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.
- புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.
திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.
புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.
ஜிப்மரில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். மொட்டாண்டியில் நவாப் ராஜமாணிக்கம் வீதியில் கோவில் இருக்கிறது.
காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்து இருக்கும்.
நாள் தோறும் 108 நாமாவளி அர்ச்சனை, 1008 நாமாவளி அர்ச்சனைகள் நடக்கின்றன.
- கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.
- கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.
புதுவை பிரத்தியங்கிரா தேவிக்கு அருகில் லிங்கம், பைரவர், பிரளய விநாயகர், நரசிம்மர் சிலைகள் இருக்கின்றன.
கோவில் உள்ளே 'பாதாள பரமேஸ்வரி' சன்னதி இருக்கிறது. படிகளில் இறங்கிச்சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.
கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.
புளியோதரை, தயிர்சோறு, எள்ளுருண்டை செய்து எடுத்து வரலாம்.
எலுமிச்சை, திராட்சை பழம் கொண்டு வரலாம். செவ்வரளி, சிவப்பு ரோஜா, செந்தாமரை இதழ்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
- திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
- குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
புதுவை பிரத்தியங்கரா தேவி கோவிலில் அஷ்டமி யாகம் மிகச்சிறப்பானது.
பவுர்ணமியை அடுத்து வரும் 8 வது நாள் தேய்பிறை அஷ்டமியில் இரவு 10.30 மணிக்கு யாகம் தொடங்கும்.
நள்ளிரவு 3 மணிக்கு முடியும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இந்த யாகம் நடக்கிறது.
'அஷ்டமி தரிசனம் அஷ்ட ஐஸ்வரியம் தரும்' என்பது சிரபசித்தர் வாக்கு.
இந்த யாகத்தில் கலந்துகொண்டால் ஏவல், செய்வினை விலகிச் செல்லும்.
நோய்கள் தீரும். குடும்ப கவலைகள் மாறும்.
வியாபாரம், தொழில் தடைகள் நீங்கி வளர்ச்சி அடையும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீளும்.
திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.
இந்த பூஜைகளில் கலந்து கொள்கிறவர்களும் பல நன்மைகள் அடைவார்கள் என்கிறார்கள்.
- நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.
- பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.
இந்த பிரத்தியங்கிரா தேவியின் விஸ்வரூப சிலை புதுவையில் இருக்கிறது. 72 அடி உயரம்.
உலகிலேயே மிகப்பெரிய அம்மன் சிலை இதுதான்.
குகை போன்ற பெரிய வாய், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்குகள், விரிந்த கூந்தல், காலில் மிதிபடும் மண்டை ஓடு, கனல் கக்கும் கண்கள், கைகளில் திரிசூலம், நாகபாசம், கழுத்தில் ராகு, கபாலத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.
நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.
பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.
இதனால் 'அபராஜிதா' என்று பெயர் பெற்றாள். நடுநிசி பூஜைதான் பிரத்தியங்கிரா தேவிக்கு உகந்தது.
மகாபைரவர் நாள்தோறும் நள்ளிரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
- சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.
- ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.
இரணியனை வதைக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை கொன்றபின்பும் உக்கிரம் அடங்கவில்லை.
அவரது உக்கிரத்தால் மூவுலகும் அழிந்துவிடும் போல இருந்தது.
அப்போது தோன்றி, அவரது உக்கிரத்தை கிரகித்து சாந்தப்படுத்தி உலகத்தை அழிவில் இருந்து காத்தாள் பிரத்தியங்கிரா தேவி.
சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.
ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.
அவள் பார்வதியின் அம்சம். அவளே காளி, துர்க்கை.
பில்லி சூனியம், மந்திரம் தந்திரம், எந்திரம் ஏவல் எல்லாவற்றையும் முறியடித்து காக்கக்கூடியவள் பிரத்தியங்கிரா தேவி.
இவளையே அதர்வண வேதம் 'அதர்வண பத்ரகாளி' என்று கூறுகிறது. நோய்கள், பேய்களை ஓட்டக்கூடிய ஆற்றல் படைத்தவள்.
தன்னைத்தேடி வரும் பக்தர்களின் கவலைகளை போக்கி நலம், வளம் தருவதில் ஈடு இணையற்றவள் பிரத்தியங்கிரா தேவி.






