search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டத்தில் இருந்து பிரசார வேனில் ஏறி  எம்.ஜி.ஆர். பாடலை பாடி அசத்திய மூதாட்டி
    X

    கூட்டத்தில் இருந்து பிரசார வேனில் ஏறி எம்.ஜி.ஆர். பாடலை பாடி அசத்திய மூதாட்டி

    • அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
    • மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மங்கலம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

    திருக்காஞ்சி அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது கீழே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் தான் மேலே வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    உடனடியாக அந்த மூதாட்டியை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிரசார வாகனத்திற்கு வர செய்து மைக்கை கொடுத்தார். மைக்கில் மூதாட்டி எம்.ஜி.ஆரின் பாடலை பாடினார். "நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க" என்ற பாடலை அவர் பாட கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.

    மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.

    Next Story
    ×