என் மலர்
மற்றவை
- நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு பிராந்தியம் தான் உபாங்.
- இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார்.
ஒருகுடும்பத்தில் கணவனும் மனைவியும் பேசும் மொழிகள் வெவ்வேறானவை! என்னே ஒரு விசித்திரம்!!
நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு பிராந்தியம் தான் உபாங். இங்கு ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்!
எடுத்துக்காட்டாக, சேனைக்கிழங்கினைப் பெண்கள் மொழியில் '' இருய் '' என்கின்றனர். இதுவே ஆண்கள் மொழியில் '' இடொங் '' என்கின்றனர். இப்படி ஒவ்வொன்றையும் பெண்கள் ஒருவிதமாகவும் ஆண்கள் வேறுவிதமாகவும் கூறுகின்றனர்.
கடவுள் பூமியைப் படைத்தபோது, இரு இனத்தவருக்கும் இரண்டு மொழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தைக் கடவுள் உபாங்கில் இருந்து தொடங்கியதாக, மொழியை ஓர் ஆசீர்வாதமாகப் பார்க்கும் இந்த பழங்குடியினர் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் மொழியை குழந்தைகள் முதலில் கற்கின்றனர். 10 வயதில் சிறுவர்கள் ஆண்களின் மொழியை கற்பர். பத்துவயதைக் கடந்த ஒரு ஆண்குழந்தை பெண்கள் மொழியைப் பேசினால் அது குறையுள்ள குழந்தையாகவே கருதப்படும்; அதேபோல பத்துவயதைக் கடந்த பெண்குழந்தை, ஆண்கள் மொழி பேசினால் அதுவும் குறையுள்ள குழந்தையாகவே கருதப்படும்.''
-வீரமணி வீராசாமி
- மேற்கு அண்டார்டிக் எரிமலை மற்றும் பிளவு மண்டலம் என்பது பசிபிக் தீவளையத்தின் ஒரு பகுதியாகும்.
- அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியே திரவடிவில் நீர் இருக்கும் மிகப்பெரும் ஏரிகளும் உள்ளன.
அண்டார்டிகா என நீங்கள் மேப்பில் பார்ப்பது அண்டார்டிக் பனிப்பாறையைத்தான். இது சுமார் ஐந்து கிமி கிலோமீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். பனிப்பாறையை ஐந்து கிமி கீழே துளைத்து சென்று ஆராய்ந்தால் தான் அண்டர்டிகாவின் நிலப்பரப்பே கண்ணில் தென்படும். எந்த மனிதனும் அதை பார்த்தது கூட கிடையாது என்பது மட்டுமல்ல, அதன் நிலபரப்பில் 90% இன்னும் ஆராய்ச்சி செய்யபடவே இல்லை
காரணம் அண்டார்டிகா என்பது பரப்பளவில் ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட சற்று பெரிய கண்டம். அதன் மேலே பறந்தபடி விமானங்கள் ரேடாரை கீழே அனுப்பும். ரேடார் அலைகள் பனிக்கட்டியைத் துளைத்து, நிலத்தை அடைந்து எதிரொலிப்பதன் மூலம், அந்த பகுதியின் நில அமைப்பு பற்றிய தகவல்களைப் பெற முடியும். இப்படி 10% நிலபரப்பு மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 90% நிலபரப்பு ஆராயபடவே இல்லை அண்டார்டிகாவின் பனிக்கட்டியை முழுவதும் அகற்றினால், கீழே ஏராளமான எரிமலைகள், ஆறுகள், ஏரிகள் காணப்படும். அண்டார்டிகாவின் பனிக்கட்டியின் கீழே உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான டிரான்ஸ்டென்டிக் மலைகள் அமைந்துள்ளன. இவை ஹிமாலய மலைகளை விட உயரமானவை. அண்டார்டிகாவின் ஒரு பகுதியான மேற்கு அண்டார்டிக் எரிமலை மற்றும் பிளவு மண்டலம் என்பது பசிபிக் தீவளையத்தின் ஒரு பகுதியாகும். அதனால் அன்டார்டிகாவின் பனிக்கு கீழே எரிமலைகளின் சூட்டால், பனிக்கட்டி உருகி, ஆறுகள் உருவாகி, பனிப்பாறைக்கு கீழே ஆறுகள் ஓடி, கடலில் நீரை சேர்க்கின்றன என்பது வியப்பான தகவலாகும். இதேபோல அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியே திரவடிவில் நீர் இருக்கும் மிகப்பெரும் ஏரிகளும் உள்ளன.
அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியில் திரவ நிலையில் நீர் நிரம்பிய மிகப்பெரிய ஏரிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது லேக் வோஸ்டாக் (Lake Vostak). மதிப்பீடுகளின்படி, இது சுமார் 15,690 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இது ஒரு சிறிய நாட்டின் அளவுக்கு சமம். இது பல லட்சம் ஆண்டுகளாக பனிக்கட்டியின் கீழ் உள்ளது.
ஐந்து கிமி பனிப்பாறைக்கு கீழே பல லட்சம் ஆண்டுகளாக இருப்பதால், இங்கே உயிர்கள் ஏதேனும் இருக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அத்தனை கிமி ஆழத்துக்கு சூரிய வெளிச்சம் போகாது. சூரிய ஒளிச்செர்க்கை நடைபெறாது. ஆனால் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் அங்கே சில நுண்ணுயிரிகள் வசிப்பதை உறுதி செய்தனர்.
அதன்பின் பனியால் மூடப்பட்ட அண்டர்டிகாவின் எராபஸ் மலையில், குகைகள் இருப்பதும், அது எரிமலை என்பதால், குகைக்குள் நல்ல வெப்பம் இருப்பதும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், குகை ஜம் என உயிர்கள் வாழ தகுதியாக இருப்பதும், அங்கே திரவ வடிவில் நீர் இருப்பதும் தெரிய வந்தது. ஒளிசேர்க்கை தேவைப்படாத கெமோசிந்தசிஸ் மூலம் உயிர்கள் உருவாகலாம்
ஆக, நாம் வாழும் பூமிக்கு அடியிலேயே முற்றிலும் புதிய வகையிலான உயிர்கள் வாழகூடும் என்பதே வியப்பளிக்கிறது. அண்டார்டிகா போல பல கிரகங்கள், நிலவுகளில் பனியால் மூடப்ட்ட திரவநிலை சமுத்திரங்கள், ஏரிகள் உள்ளன. அங்கேயும் இதுபோல மிக புதிய வகை உயிர்கள் வாழலாம். பூமியும் வானமும் இடையே எத்தனை அதிசயங்கள், விந்தைகள்.
- நியாண்டர் செல்வன்
- ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது.
- யாரும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.
சீனத்துறவி லாவோட் சூ தன் சீடர்களோடு போய்க் கொண்டிருந்தபோது ஒரு காட்டு வழியாகப் போனார். ஒரு பெரிய அரண்மனை வேலை நடந்து கொண்டிருந்தது.
நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். காடு முழுக்க வெட்டியாகிவிட்டது. ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது. ஆயிரம் பேர் அதன் நிழலில் உட்காரலாம். அவ்வளவு பிரம்மாண்டமான மரம்.
தன் சீடர்களை அனுப்பி காடு முழுவதும் மொட்டையடித்த பின் அந்த ஒரு மரத்தை மட்டும் யாரும் வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தைத் தெரிந்துவரச் சொன்னார்.
அவர்களும் போய், "இந்த மரத்தை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அருமையான பதில் வந்தது. 'அதுவா? இது பிரயோசனமில்லாத மரம், ஒவ்வொரு கிளையிலும் ஏகப்பட்ட முண்டு முடிச்சு. என்ன செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராயிருந்தாலாவது தூண்கள் செய்யலாம். அதுவுமில்லை. தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம் என்றாலும் முடியாது. வெட்டி எரிக்கலாம் என்றாலோ கிளப்புகிற புகையின் விஷத்தில் கண்கெட்டுப் போகும். எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால்தான்" என்றார்கள்.
திரும்பிப் போய்ச் சொன்னார்கள். லாவோட் சூ சிரித்தார்.
"இந்த மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். பிழைத்திருக்க வேண்டுமானால் இந்த மரத்தைப் போலத்தான் இருக்கவேண்டும். எந்தப் பிரயோசனமும் இல்லாமல் இருக்கவேண்டும். யாரும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்.நேராக இருந்தால் வெட்டி எடுத்துப்போய்த் தூணோ தட்டுமுட்டுச் சாமானோ செய்துவிடுவார்கள். அழகாக இருந்தால் சந்தையில் விற்கப்படும் பண்டமாகிப் போவாய். இந்த மரத்தைப்போல பிரயோசனம் இல்லாமல் இருந்து விடு. யாரும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார்கள். செளகரியத்துக்கு வளரலாம். ஆயிரக்கணக்கானோர் உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.
-ஓஷோ
- ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி.
- கொடைக்கானல் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலானோர் யாரும் மேல் மலைக்கு செல்வதில்லை.
அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..
1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்...
இதற்கு முன்பே இங்கு பல நூறு ஆண்டுகளாக பளியர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு மற்றும் காய்கறிகளை கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்கு வந்து விற்று விட்டு செல்வார்கள்...
அது ஒரு ஒத்தையடி பாதை. அந்தப் பாதையின் வழியாக 1821 ஆம் ஆண்டு தனது ஆய்வை தொடங்கினார் வார்ட். பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலே சென்றவுடன் வெல்லக்கவி என்ற கிராமம் வந்தது. அதுதான் ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி.
அங்கிருந்து டால்பின் நோஸ் என்கிற ஒரு பகுதி உள்ளது. அந்த வழியாக அவர் சென்ற இடம்தான் இன்றைய கொடைக்கானல். அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார். அவர் தங்கியது மட்டுமல்லாமல் இந்த சூழல் மிகவும் அழகாக இருக்கிறது என்று பிற ஆங்கிலேயர்களையும் அந்த பகுதிக்கு அழைத்தார்...
அவர் 1825 ஆம் ஆண்டுகளில் கட்டிய முதல் கட்டிடம் இன்றும் கொடைக்கானலில் உள்ளது. இந்த செய்தி பல ஆங்கிலேயர்களுக்கு தெரியவே அவர்களும் அங்கு வந்து தங்கத் தொடங்கினர். கொடைக்கானல் மலையின் பூர்வ குடிகளை தவிர்த்து சமவெளி பகுதியில் இருந்து மக்கள் முதல் முதலாக குடியேறிய ஆண்டு 1845 மே 26.
அப்போதைய மதுரை ஆட்சியர் லேவிங்ஸ் தன் நண்பர் ஜான் டேவ் உடன் இணைந்து உருவாக்கிய ஏரியே இன்றைய கொடைக்கானலின் நட்சத்திர ஏரி.
1860 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொடைக்கானல் என்ற பெயர் அரசிதழில் இடம்பெற்றது.
கொடைக்கானலை மூன்று வகையாகப் பிரிப்பார்கள் கீழ்மலை நடுமலை மேல்மலை கீழ்மலை என்பது இன்றைய பெருமாள் மலை என்பது தரையில் இருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது நடுமலை என்பது இன்றைய கொடைக்கானல் சுமார் 4500 முதல் 5000 அடி உயரம் கொண்டது மேல்மலை என்பது பூம்பாறை மன்னவனூரை அடுத்த கிளாவரை என்கிற பகுதி கிளாவரையை தாண்டியவுடன் மூனார் பகுதி வந்துவிடும் கிளாவரை தரையில் இருந்து சுமார் 6500 அடி உயரம் கொண்டது இது மிகவும் குளிர்ச்சியான பகுதி...
கொடைக்கானல் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலானோர் யாரும் மேல் மலைக்கு செல்வதில்லை
- சச்சின் கார்த்திக் பாண்டி
- முருங்கையில பல வகை இருக்கு.
- முருங்கைக்காயை வயாகரானுகூட சொல்வாங்க.
வெந்து கெட்டது அகத்திக்கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரைனு ஒரு பழமொழி இருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா முருங்கைக்கீரையை நல்லா வேக வச்சிதான் சாப்பிடணும். ஆனா அகத்திக்கீரையை ரொம்பவும் வேக விடக்கூடாது. வேகவிட்டா அதோட மருத்துவத்தன்மை மாறிப்போயிரும்.
முருங்கையில பல வகை இருக்கு. பொதுவா எடுத்துக்கிட்டா முருங்கையில வேர்ல இருந்து பூ வரைக்கும் எல்லாமே மருத்துவக்குணம் நிறைஞ்சது. வைட்டமின் ஏ, டி, ஈ, கே மட்டுமில்லாம பி 1, பி 2, பி 6&னு அடுக்கிக்கிட்டே போகலாம்.
முருங்கைக்கீரையில இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்தெல்லாம் இருக்கு. பொதுவா முருங்கைக்கீரையை பிரட்டல், பொரியல் செஞ்சி சாப்பிடுவாங்க. பொரியல் செய்யும்போது முட்டையை உடைச்சிவிட்டு நல்லா கிளறி சூட்டோடு சூடா சாப்பிட்டா அதோட பலன் அதிகம்தான்.
முருங்கைக்கீரையைப் பொடியாக அரிஞ்சி, கேரட்டை துருவிப்போட்டு, பசு நெய்யை விட்டு பொரிச்சி, கடைசியாக முட்டையை ஊத்தி கிளறி சாப்பிட்டா தாம்பத்ய உறவுல ஈடுபாடில்லாத ஆம்பிளைங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைப் பூவை அரைச்சி பால்ல கொதிக்க வச்சி பனங்கல்கண்டு சேர்த்து 48 நாள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தா தாம்பத்ய உறவுல விருப்பம் உண்டாகும்.
முருங்கைப் பூவை காய வச்சி பொடியாக்கி அதுல தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டாலும் ஆண்மை கூடும். அதுமட்டுமில்லாம நீர்த்துப்போன விந்து கட்டியாகும். இந்த மாதிரி பொண்ணுங்க சாப்பிட்டா அவங்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் சரியாகுறதோட கர்ப்பப்பை ஸ்ட்ராங்காகும்.
முத்திப்போன முருங்கை விதையை எடுத்து காய வச்சி லேசா நெய்யில வதக்கி பொடியாக்கி பால்ல கலந்து சாப்பிட்டா ஆண்மை கூடுறதோட விந்து எண்ணிக்கையும் அதிகமாகும். அதோட நரம்பெல்லாம் முறுக்கேறி உடம்பு கும்முன்னு ஆகிடுமாம்.
முருங்கைக்காய்ல பிஞ்சுக்காயை எடுத்தீங்கன்னா பச்சப்பாம்பு மாதிரி இருக்கும். அதை பால்ல வேக வச்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா ஆண்மைக்குறை உள்ளவங்களுக்கு நிச்சயமா பலன் கிடைக்கும். இதனால முருங்கைக்காயை வயாகரானுகூட சொல்வாங்க.
-மரிய பெல்சின்
- இதய நோய் வராமல் தடுக்கிறது .
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கொத்தவரங்காய், நுரையீரலுக் கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும்.
கொத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.
இது உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது.
இது மூட்டு வலியை சரி செய்கிறது.
இது அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.
சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது .
இதய நோய் வராமல் தடுக்கிறது.
ஆஸ்துமா விற்கு நல்ல மாமருந்து.
இது நல்ல வலி நிவாரணி.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இரத்த சோகைக்கு நல்ல மருந்து.
கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தையின் எலும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது .
உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து.
மன அழுத்தத்தை குறைக்கிறது.
நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.
சரும பிரச்சனையை தீர்க்கிறது.
மலச்சிக்கலை போக்குகிறது .
ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
சூட்டை குறைக்கிறது.
இதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதன்சாற்றை குடிக்க வேண்டும். வேக வைத்த காயையும் சாப்பிட வேண்டும்.
-சித்த மருத்துவர் எஸ்.சிவபெருமாள்.
- மரியாதை என்பது உண்மையில் பயமே, அது மரியாதையே அல்ல, அது அர்த்தமற்றது.
- ஆசிரியர், உங்கள் வேலைக்காரர் மற்றும் கிராமத்துவாசி எல்லோருமே ஒன்றுதான்.
மரியாதைக்கும் அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு முக்கியத்துவம் கொண்ட மனிதர் வருகைதரும்போது, ஒரு மந்திரியோ அல்லது கவர்னரோ வரும்போது எப்படி எல்லோரும் அவரை வணங்குகிறார்கள் என்பதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?
நீங்கள் அதை மரியாதை என்கிறீர்கள், இல்லையா? ஆனால் அப்படிப்பட்ட மரியாதை போலித்தனமானது. ஏனெனில் அதன் பின்னணியில் பயம், பேராசை உள்ளது.
நீங்கள் அவரிடமிருந்து எதையோ பெற விரும்புகிறீர்கள், ஆகவே நீங்கள் அவர் கழுத்தில் மாலை அணிவிக்கிறீர்கள்.
அது மரியாதை ஆகாது, அது வெறுமனே நீங்கள் மார்க்கெட்டில் வாங்க விற்க பயன்படுத்தும் நாணயம் ஆகும்.
நீங்கள் உங்கள் வேலைக்காரரிடம் அல்லது கிராமவாசியிடம் மரியாதைக் காட்டுவதில்லை, ஆனால் அவர்களிடமிருந்து நமக்கு ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கைத் தருபவர்களுக்கு மரியாதைச் செய்கிறீர்கள்.
அப்படிப்பட்ட மரியாதை என்பது உண்மையில் பயமே, அது மரியாதையே அல்ல, அது அர்த்தமற்றது.
ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே அன்பு இருக்கும் என்றால், அப்போது உங்களுக்கு மந்திரி, ஆசிரியர், உங்கள் வேலைக்காரர் மற்றும் கிராமத்துவாசி எல்லோருமே ஒன்றுதான்.
அப்போது நீங்கள் அவர்கள் எல்லோரிடமும் மரியாதை காட்டுவீர்கள், அவர்கள் எல்லோருடனும் உணர்வுடன் இருப்பீர்கள், ஏனெனில் அன்பு பதிலுக்கு எதையுமே கேட்பதில்லை.
-தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி.
- செஞ்சி பார்த்துட்டு உண்மையிலேயே ஆம்லெட் டேஸ்ட்ல இருந்துச்சான்னு சொல்லுங்க...
- சுவையான ‘சைவ ஆம்லெட்’ ரெடி.
ஆம்லெட்னாவே அசைவம்தான. அதென்ன சைவ ஆம்லெட்னு கேட்க தோணுதா..? அந்த கதையை ஏன் கேட்கறீங்க... அசைவத்துல நாம வித விதமா செஞ்சி சாப்பிடறத பார்த்து பொறாமைல பொங்கி எழுந்த குரூப் ஒன்னு உருவாக்குனதுதான் இந்த சைவ ஆம்லெட்...
உங்களுக்கு இந்த சைவ ஆம்லெட் எப்படி செய்யறதுன்னு சொல்றேன். செஞ்சி பார்த்துட்டு உண்மையிலேயே ஆம்லெட் டேஸ்ட்ல இருந்துச்சான்னு சொல்லுங்க...
தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
மக்காச்சோளம் - 50 கிராம்
முழு கோதுமை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கோங்க..
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியா வறுத்து கொரகொரப்பா அரைச்சுக்கோங்க..தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நல்லா கரைச்சுக்கோங்க..
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு எல்லாத்தையும் கரைச்ச மாவுடன் சேர்த்து ஆம்லெட் மாதிரி தோசைக்கல்லில் ஊத்தி , வேக வைத்து எடுத்தா சுவையான 'சைவ ஆம்லெட்' ரெடி.
-ராஜேஷ் குமார்
- மூன்று நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கின
- மூவரும் லண்டன் சிறையில் ஒரே நேரத்தில் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் மூன்று நகரங்களில் மூன்று தனித்தனி கொலை வழக்குகள் நடைபெற்றன.
மூன்று நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கின
ஒருவர் மதகுரு,
இரண்டாமவர் ஒரு வழக்கறிஞர்,
மூன்றாவது நபர்மெக்கானிக்கல் இஞ்சினீயர்.
மூவரும் லண்டன் சிறையில் ஒரே நேரத்தில் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
முதலில் மதகுரு கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.
மேடையில் இருந்த விசைப்பலகை இழுக்கப்பட்டது,
ஆனால் மதகுருவின் கழுத்தை இறுக்காமல் முடிச்சு நின்றுவிட்டது.
"எப்படி முடிச்சு இறுகாமல் நின்றது?" என்று ஆச்சரியத்துடன் சிறை அதிகாரி மதகுருவைக் கேட்டார்.
"ஆண்டவன்! அந்த ஆண்டவன்தான் என்னைக் காப்பாற்றினான்" என்றார் மதகுரு.
சட்டப்படி ஒரு முறைதான் தூக்கில் போட முடியும். அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்ததாக வழக்கறிஞர், அழைத்துவரப்பட்டார்.
அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.
விசைப்பலகை இழுக்கப்பட்டது,
ஆனால், என்ன ஆச்சரியம், வழக்கறிஞர் கழுத்தையும் இறுக்காமல் முடிச்சு பாதியில் நின்றுவிட்டது.
அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது, "நீதி! நீதி தேவதைதான் என்னைக் காப்பாற்றியது" என்றார் வக்கீல்.
சட்டப்படி அவரும் விடுவிக்கப்பட்டார்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இஞ்சினீயர் சொன்னார்: "சரியான முட்டாப்பசங்க நீங்க. அந்த கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதுதான் சுறுக்கு இறுகாமல் தடுக்கிறது. அதை கவனிக்காமல் ஆண்டவன் காப்பாற்றினான், நீதி தேவதை காப்பாற்றினாள் என்று அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்…" என்று சொன்னார்,
சிறை அதிகாரி "யோவ்.. அந்த கயிற்றை பிரிச்சி செக் பண்ணுங்கையா.. சார் ஒரு இஞ்சினீயர். அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார்.
உடனே அந்த தூக்குக் கயிற்றை பரிசீலித்தனர்.
அங்கே அவர் சொன்ன மாதிரி முடிச்சு இருந்தது.
அதனை சரி செய்தனர்.
அப்புறம் என்ன?
இஞ்சினீயர் எந்த பிரச்சனையும் இல்லாமல் தூக்கில் போடப்பட்டார்….
நீதி:- "வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கும்போது, வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருப்பது சாலச் சிறந்தது…"
-பி.சுந்தர்
- தெய்வப்புலவர் கூற்றில் தவறு இருக்க நியாயம் இல்லை.
- பல நாட்கள் என்னுள் இருந்த சுமையை இன்று போக்கினீர்கள்” என்று அகமகிழ்ந்து கூறுகிறார்.
ஒருமுறை பதின்கவனகர் திருக்குறள் பெ.இராமையா அவர்களை மகரிஷி அவர்கள் சந்திக்க நேர்ந்தது.
புலால் மறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறளில் ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்கிறாா் இராமையா.
சொல்லுங்கள் எனக்குத் தெரிந்தால் சொல்கிறேன் என்கிறாா் மகரிஷி.
சுவாமி "கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பி தொழும்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
விலங்குகளுக்குக் கைகள் கிடையாது. அவ்வாறு இருக்கையில் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்கிறாரே. இது எவ்வாறு சாத்தியம்?
தெய்வப்புலவர் கூற்றில் தவறு இருக்க நியாயம் இல்லை. இதுதான் எனக்கு சந்தேகம் என்கிறார்.
அய்யா, இதை ஏற்கனவே நான் சிந்தித்துள்ளேன். வள்ளுவரின் கூற்றில் தவறில்லை.
தாங்கள் கைகூப்பி, என்ற வார்த்தையை புலால் மறுத்தானை என்ற வார்த்தைக்கு முன் போட்டுப் பொருள் கொண்டு பாருங்கள்..
"கொல்லான் கைக்கூப்பி புலால் மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்"
ஒருவர் மற்றவரைப் புலால் உண்ண வற்புறுத்தி அழைக்கிறார்.
அதை மறுப்பவர் தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த இரு கரங்களையும் குவித்து, "ஐயா நான் புலால் உண்ண மாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்" என வேண்டுகிறார்.
இவ்வாறு செய்பவரை இதற்கு மேல் யாரும் வற்புறுத்த முடியாதல்லவா?
புலால் மறுத்தலில் இத்தகைய உறுதிப்பாட்டை உடையவர்களுக்கு உயிர்கள் மீது இயற்கையில் அன்பு செலுத்தும் தன்மையும் வந்துவிடும்.
அவ்வாறு உயிர்கள் மீது அன்பு செலுத்துபவரை எல்லா உயிர்களும் நேசிக்கும் அல்லவா?
இவ்விளக்கத்தைக் கேட்ட இராமையா அவர்கள்"ஆமாம் சுவாமி.. இது தான் அக்குறளுக்கு மிகச்சரியான பொருளாக இருக்க வேண்டும். பல நாட்கள் என்னுள் இருந்த சுமையை இன்று போக்கினீர்கள்" என்று அகமகிழ்ந்து கூறுகிறார்.
-எச்.கே. சாம்
- ஆலமரத்தடியில் தான் வியாபாரங்கள் நிகழ்ந்து வந்தன.
- கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு.
இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாறிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் 'பனியாவே' – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே 'பானியன் ட்ரீ' என்று பெயர் வந்த வரலாறு.
கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.
-கவுரி சங்கரி
- 50 வருட வாழ்க்கையில் அவர்களுக்கு இடையில் சண்டை வந்ததே இல்லையாம்.
- நான் அவளை கோபத்தில் அறைந்து திட்டினேன்.
திருமணம் முடிந்து 50 வருடங்கள் ஆன ஒரு தம்பதிகளுக்கு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டதாம். அந்த 50 வருட வாழ்க்கையில் அவர்களுக்கு இடையில் சண்டை வந்ததே இல்லையாம். அது எப்படி சாத்தியமானது என்று ஒருவர் கேட்டாராம்
அதற்கு அந்த கணவன் சொன்னார்..
"கல்யாணம் முடிந்த மறு வாரம் தேனிலவு கொண்டாட சிம்லா சென்றோம். அங்கே குதிரை சவாரி போனோம். முதலில் நான் போய் வந்தேன்.
அடுத்து என் மனைவி குதிரையில் ஏறினாள். குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவள் எழுந்து நிதானமாக குதிரையை பார்த்து "First time" என்றாள். மீண்டும் அதே குதிரையில் ஏறினாள், மீண்டும் குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. மீண்டும் எழுந்து குதிரையை பார்த்து மிக நிதானமாக "2'nd time" என்றவள் மீண்டும் குதிரையில் ஏறினாள்.
இம்முறையும் குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு கொன்று விட்டாள்.
ஆத்திரப்பட்ட நான் அவளை கோபத்தில் அறைந்து திட்டினேன். அடி வாங்கிய அவள் மிக,மிக அமைதியாக என்னைப் பார்த்து ஒரே ஒரு வார்த்தை கூறினாள். அன்றிலிருந்து இதுவரை எங்களுக்குள் எந்த சண்டையும் வந்தது இல்லை" என்று.
அவர் மனைவி கூறிய வார்த்தை " 1'st time "
-சந்திரன் வீராசாமி






