என் மலர்
கதம்பம்

'பர்ஸ்ட் டைம்'
- 50 வருட வாழ்க்கையில் அவர்களுக்கு இடையில் சண்டை வந்ததே இல்லையாம்.
- நான் அவளை கோபத்தில் அறைந்து திட்டினேன்.
திருமணம் முடிந்து 50 வருடங்கள் ஆன ஒரு தம்பதிகளுக்கு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டதாம். அந்த 50 வருட வாழ்க்கையில் அவர்களுக்கு இடையில் சண்டை வந்ததே இல்லையாம். அது எப்படி சாத்தியமானது என்று ஒருவர் கேட்டாராம்
அதற்கு அந்த கணவன் சொன்னார்..
"கல்யாணம் முடிந்த மறு வாரம் தேனிலவு கொண்டாட சிம்லா சென்றோம். அங்கே குதிரை சவாரி போனோம். முதலில் நான் போய் வந்தேன்.
அடுத்து என் மனைவி குதிரையில் ஏறினாள். குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவள் எழுந்து நிதானமாக குதிரையை பார்த்து "First time" என்றாள். மீண்டும் அதே குதிரையில் ஏறினாள், மீண்டும் குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. மீண்டும் எழுந்து குதிரையை பார்த்து மிக நிதானமாக "2'nd time" என்றவள் மீண்டும் குதிரையில் ஏறினாள்.
இம்முறையும் குதிரை அவளை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு கொன்று விட்டாள்.
ஆத்திரப்பட்ட நான் அவளை கோபத்தில் அறைந்து திட்டினேன். அடி வாங்கிய அவள் மிக,மிக அமைதியாக என்னைப் பார்த்து ஒரே ஒரு வார்த்தை கூறினாள். அன்றிலிருந்து இதுவரை எங்களுக்குள் எந்த சண்டையும் வந்தது இல்லை" என்று.
அவர் மனைவி கூறிய வார்த்தை " 1'st time "
-சந்திரன் வீராசாமி






