என் மலர்
செய்திகள்

ராமநாதசுவாமி சன்னதி முன்பு தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
15 நாட்களுக்கு பிறகு கோவில் திறப்பு: ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையுடன் சென்றனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியதை அடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த 1-ந்தேதி முதல் தடை விதித்தனர்.
கோவிலில் குருக்கள் மட்டும் அன்றாட பூஜைகள் செய்து வந்தனர். கோவிலில் நடந்த 17 நாட்கள் திருவிழா நிகழ்ச்சிகள் வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் தவிர வருகிற 23-ந் தேதி வரை மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதனையடுத்து 15 தினங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதை தொடர்ந்து இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர்
பின்னர் ராமேசுவரம் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையுடன் சென்றனர்.

Next Story