search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து நாளை காவடி ஊர்வலம்
    X

    திருச்செந்தூர் கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து நாளை காவடி ஊர்வலம்

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து காவடி ஊர்வலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவில் இரணியல், திங்கள்நகர், குளச்சல், புதுக்கடை, மணவாளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கலந்து கொள்வார்கள்.

    இதைத்தொடர்ந்து இரணியல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் புஷ்பக்காவடி, தேர் காவடி, எண்ணைக்காவடி, பறவைக்காவடி உள்பட பல்வேறு காவடிகளை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் காவடி எடுத்த படி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக பயணமாவார்கள். பல பக்தர்கள் வாகனங்கள் மூல மும் சென்று திருச்செந்தூர் கோவிலில் வழிபடுவார்கள்.

    இதைத்தொடர்ந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் தங்கள் காவடிகளை பூஜையில் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இந்த காவடி பூஜைகள் நடந்து வருகிறது. இன்றும் காவடி பூஜை நடைபெற்றது. இன்று இரவு காவடி அலங்காரமும் நடைபெறும்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்படும். அதன் பிறகு தெருக்களில் காவடி ஊர் மாறான் பரம்பு, காட்டுவிளை ஆகிய பகுதிகளில் இருந்தும் பறக்கும் காவடி, அக்னிக் காவடி, தேர் காவடியுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கிரேன் காவடிக்கு போலீசார் தடை விதித்து உள்ளதால் பக்தர்கள் கிரேன் காவடி எடுக்கவில்லை. காவடி ஊர்வலத்தை தொடர்ந்து செக்காலத் தெருவில் காளைகள் மூலம் கல்செக்கில் எள் மூலம் நல் எண்ணெய் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
    Next Story
    ×