search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா விராட் கோலி
    X
    ஹர்திக் பாண்டியா விராட் கோலி

    ஐந்தாவது பந்து வீச்சாளராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு விராட் கோலி பாராட்டு

    வங்காள தேச அணிக்கெதிராக 10 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியாவை விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
    வங்காள தேச அணிக்கெதிராக அதிரடியாக விளையாட விரும்பிய இந்திய அணி கேஜர் ஜாதவை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்த்தது. விஜய் சங்கர் ஏற்கனவே அணியில் இருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடி வருகிறார்.

    இதனால் இந்தியா பும்ரா, புவி, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான்  விளையாடியது. கூடுதல் பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஐந்து பேரும் 10 ஓவர்களை நிறைவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

    ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் 10 ஓவர்களை நிறைவு செய்வதில்லை. நேற்றைய போட்டியில் கட்டாயமாக 10 ஓவர்கள் வீசியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    சிறப்பாக பந்து வீசிய அவரை இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார். ஹர்திக் பாண்டியா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவுடன் நாங்கள் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர் மிகவும் நெருக்கடிக்குள் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டும் இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார்.

    ஹர்திக் பாண்டியா

    எப்படி ரன்கள் அடிக்க வேண்டும், விக்கெட் வீழ்த்துவது எப்படி என்ற வழியை கண்டுபிடித்துள்ளார். அணியின் வெற்றிக்கு தன்னுடைய பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இது அவருடைய கிரிக்கெட்டிற்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    ஹர்திக் பாண்டியா பந்து வீச வரும்போது, அவரை ஒரு பேட்ஸ்மேனாக நினைப்பார். பேட்ஸ்மேன் திணறும் வகையில் பந்து வீச விரும்புவார். ஏனென்றால், அவர்களின் உடல் அசைவுகளை அவரால் கணிக்க இயலும். இந்தியா அணிக்காக ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி கொண்டிருக்கிறார்’’ என்றார்.
    Next Story
    ×