search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி
    X

    தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மிகவும் மெதுவாக ஆடியதாக விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 28-வது லீக் ஆட்டத்தின்போது எம்எஸ் டோனி 52 பந்துகள் சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து போட்டியில் மிகவும் மந்தமாக ஆடியதாக டோனி மீது கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தினர்.

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கரும், டோனி விளையாடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறியதாவது:-

    டோனி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது அவர் மந்தமாக ஆடினார் என்பதற்காக அவரின் திறமையினை விமர்சிப்பது சரியான நடைமுறை அல்ல. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தான் யார் என்பதை எம்எஸ் டோனி நிச்சயம் நிரூபிப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை (ஜூன் 27) மான்செஸ்டரில் நடைபெற உள்ள 34-வது லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியினை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×