என் மலர்
உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் அழைப்பு இல்லை - வெள்ளை மாளிகை மறுப்பு
- அமெரிக்க ஆயுதப்படைகளின் 250வது ஆண்டு விழா வாஷிங்டனில் நடைபெறுகிறது.
- "இராஜதந்திர பின்னடைவு" என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
அமெரிக்க ஆயுதப்படைகளின் 250வது ஆண்டு விழாவிற்காக வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
"இது தவறானது. எந்த வெளிநாட்டு ராணுவ தலைவர்களும் அழைக்கப்படவில்லை," என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முனீர் அழைக்கப்பட்டதை, "இராஜதந்திர பின்னடைவு" என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சிதிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Next Story