ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக போர் தொடுப்போம் - பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை

இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.கடந்த 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக போர் தொடுப்போம் - பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை
Published on

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து கத்தார், துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கியது. இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும். ஆனால் அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com