என் மலர்tooltip icon

    உலகம்

    அகமதாபாத் விமான விபத்து: புலனாய்வுக் குழுவை அனுப்பும் இங்கிலாந்து
    X

    அகமதாபாத் விமான விபத்து: புலனாய்வுக் குழுவை அனுப்பும் இங்கிலாந்து

    • விபத்துக்குள்ளான விமானத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 53 பேர் பயணம்.
    • இந்தியா தலைமையில் விசாரணை நடத்த இங்கிலாந்து ஒரு குழுவை அனுப்புகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.

    இந்த விமானத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பல்துறை புலனாய்வுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்புகிறோம். இந்தியா தலைமையில் விசாரணை நடத்த இந்த குழு உதவி செய்யும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

    Next Story
    ×