என் மலர்
உலகம்

ஈரானை தாக்க விமான தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி மறுத்த ஸ்பெயின்
- ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் தளத்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது.
- தங்களது இறையாண்மையின் படி அனுமதி வழங்கமாட்டோம் என்று ஸ்பெயின் மறுப்பு தெரிவித்துள்ளது.
அணுசக்தி திட்டம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையிலும், ஒப்பந்தத்திற்கான அறிகுறி தென்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா துருப்புகள் ஈரான் நோக்கி முன்னோக்கி சென்றன.
திடீரென சனிக்கிழமை காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது கூட்டுத்தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் கடுங்கோபம் அடைந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக ஸ்பெயின் நாட்டில் உள்ள ரோட்டா மற்றும் மோரோன் விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. மேலும், 15 விமானங்கள் அந்த தளங்களை நோக்கி சென்றன.
ஆனால், ஸ்பெயின் தங்களது தளங்களை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டது. இதனால் அமெரிக்க விமானங்கள் ஜெர்மனியில் தரையிறங்கியுள்ளது.
இதற்கிடையே ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்பரேஸ் கூறுகையில் "அமெரிக்காவும் ஸ்பெயினும் இணைந்து செயல்பட்டாலும் கூட எங்களுடைய இறையாண்மையின் கீழ் ஈரானை தாக்க ஸ்பெயின் தங்களுடைய விமான தளங்களை அனுமதிக்காது" என்றார்.
இங்கிலாந்தும் முதலில் அனுமதி மறுத்தது. பின்னர் கூட்டு சுய-பாதுகாப்பிற்காக அனுமதி அளித்துள்ளது.






