என் மலர்
ஸ்பெயின்
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
- இதில் கிரேக்க வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார்.
இதில் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அத்துடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோதினார்.
- இதில் காஸ்பர் ரூட் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- நார்வே வீரர் காஸ்பர் ரூட் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் செர்பிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், செர்பிய வீரர் டுசான் லஜோவிக்குடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு சுற்றுகளில் 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்டினுடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ், காஸ்பர் ரூட் ஆகியோர் மோதுகின்றனர்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார்.
இதில் நூரி 6-7 (4-7) 6-7 (1-7) என்ற செட் கணக்கில் தோற்று, தொடரில் இருந்து வெளியேறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதுகிறார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபெர்டோவுடன் மோதினார்.
இதில் நூரி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் முன்னணி வீரரான ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் மோதினார்.
இதில் டி மினார் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நடால் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிட கதேதோங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 17-21, 20-22 என இழந்து, காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
- ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டார்.
- விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மாட்ரிட்:
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.
அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.
ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.






