என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 இரண்டு கோல்கள் அடித்தார்.
    • 9-12வது இடங்களுக்கான போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

    எஸ்டாடி டெர்ரசா:

    15-வது மகளிர் உலக கோப்பை ஆக்கிப் போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன.  ஸ்பெயினின் எஸ்டாடி டெர்ரசா நகரில் நேற்று நடைபெற்ற 9-12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.

    இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 கோல்களும், தீப் கிரேஸ் எக்கா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் யூ அசாய் ஒரு கோல் போட்டார்.

    முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. 

    • எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
    • ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு

    மாட்ரிட்:

    நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புதின் எச்சரித்தார். நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது.

    ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

    ×