search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் உள்ள  சீன பணியாளர்களுக்கு பாதுகாப்பு- ஜி ஜின்பிங்கிடம் உறுதியளித்தார் ஷபாஸ் ஷெரீப்
    X

    ஷபாஸ் ஷெரீப், ஜி ஜின்பிங்

    பாகிஸ்தானில் உள்ள சீன பணியாளர்களுக்கு பாதுகாப்பு- ஜி ஜின்பிங்கிடம் உறுதியளித்தார் ஷபாஸ் ஷெரீப்

    • பாகிஸ்தான் பிரதமர், சீனாவில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம்.
    • சீன அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை.

    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் முதன்முறையாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்களில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு பணியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஷபாஸ் செரீப்பிடம் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சீனர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடுத்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அப்போது பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து சீன பணியாளர்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஷபாஸ் செரீப் உறுதிபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே அனைத்து தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறித்தும், பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×