என் மலர்
உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா?- ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மறுப்பு
- இன்று 3-வது நாளாக அமெரிக்கா- ஈரான் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
- ஈரான் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வருவதாக அமெரிக்கா மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
அணுசக்தி திட்டம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையிலும், ஒப்பந்தத்திற்கான அறிகுறி தென்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா துருப்புகள் ஈரான் நோக்கி முன்னோக்கி சென்றது.
திடீரென சனிக்கிழமை காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது கூட்டுத்தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் கடுங்கோபம் அடைந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கிடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானி முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது.
உச்சகட்ட போர் பதற்றம் நிலவும் நிலையில், பேச்சுவார்த்தைக்கான அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை. பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் போர் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.






