search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்- ரஷிய தூதர் மறுப்பு
    X

     ஆன்ட்ரே விக்டோரோவிச் பெட்ரோவ்

    பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்- ரஷிய தூதர் மறுப்பு

    • கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை.
    • பாகிஸ்தான்-ரஷியா இடையே வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தையை ஷபாஸ் ஷெரீப் அரசு நிறுத்தி விட்டதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஹம்மாத் அசார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கான ரஷிய தூதர் ஜெனரல் ஆன்ட்ரே விக்டோரோவிச் பெட்ரோவ், இஸ்லாமாபாத்தில் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கும், ரஷிய அதிபர் புத்தினுக்கும் இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை என கூறினார்.

    ஐரோப்பிய நாடுகளின் சட்டவிரோத தடைகள் காரணமாக பாகிஸ்தான் -ரஷியா இடையே வர்த்தக உறவுகள் பாதிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். ரஷியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிக்க புதின் நிர்வாகம் விரும்புவதாக கூறிய பெடரோவ், ரஷியா பல துறைகளில் பாகிஸ்தானுக்கு முக்கியமான வர்த்தக பங்காளியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×