என் மலர்
உலகம்

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதி தலையிடுமா? பாகிஸ்தான் அமைச்சரின் பதில்..!
- ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம்.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.






