என் மலர்tooltip icon

    உலகம்

    மேற்கு ஜெருசலேமில் 4 குடியிருப்பு கட்டிடங்களை உருக்குலைத்த ஈரான் ஏவுகணை: 9 இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு
    X

    மேற்கு ஜெருசலேமில் 4 குடியிருப்பு கட்டிடங்களை உருக்குலைத்த ஈரான் ஏவுகணை: 9 இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு

    • இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மூலம் சரமாரி பதிலடி கொடுத்து வருகிறது.
    • சைரன் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இன்று இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமில் உள்ள பெய்ட் ஷெமேஷ் பகுதியில் ஈரான் ஏவுகணை கடுமையாக தாக்கியது. இதில் 4 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து போனது. இதில் 9 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பலர் குழந்தைகள் ஆவார்கள்.

    இந்த ஏவுகணை இஸ்ரேலிய மக்கள் பதுங்கியிருந்த ஷெல்டர் வழியாக ஊடுருவி தாக்கியுள்ளது. ஷெல்டரில் விழுந்திருந்தால் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்கும்.

    ஈரான் அதிகமாக தாக்கக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை இஸ்ரேல் துரிதமாக செய்து வருகிறது.

    Next Story
    ×