என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக காமேனியின் மகன் அறிவிப்பு #MojtabaKhamenei
    X

    ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக காமேனியின் மகன் அறிவிப்பு #MojtabaKhamenei

    • ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரது மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு ஆவார் என கூறப்பட்டது.

    டெஹ்ரான்:

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, அங்கு புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.

    இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×