என் மலர்tooltip icon

    உலகம்

    அமைதி ஒப்பந்தத்தை குப்பையில் வீசிய இஸ்ரேல்.. காசா மீது தாக்குதல் -  46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி
    X

    அமைதி ஒப்பந்தத்தை குப்பையில் வீசிய இஸ்ரேல்.. காசா மீது தாக்குதல் - 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

    • அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
    • காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் காசா மீது போர் நிறுத்தத்தை மீறி தொடந்து தாக்குதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில் காசா மீது நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 46 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வெறியாட்டத்தின் பின்னர் காசாவில் இன்று முதல் மீண்டும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    ராஃபா பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வஞ்சம் தீர்க்க இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

    இஸ்ரேலின் ராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    ஆனால், ஹமாஸ் இந்த சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    Next Story
    ×