என் மலர்tooltip icon

    உலகம்

    ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு:  இஸ்ரேல்
    X

    ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு: இஸ்ரேல்

    • காசாவில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • ஸ்டாஃப்களின் செயல்பாடுகள் குறித்த தகவலை பரிமாற்றம் செய்ய சில அமைப்புகள் தவறியதாகவும் குற்றச்சாட்டு.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காசாவில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. சில அமைப்புகள் ஹமாஸ் மற்றும் மற்ற பயங்கரவாத குழுவினருக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு சில ஸ்டாஃப்களின் பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தவறி விட்டது எனத் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வருகின்ற 1-ந்தேதி முதல் ஸ்டாஃப், நிதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தகவல்களை பரிமாற்றம் செய்யவில்லை என்றால், காசாவில் செயல்பட தடைவிதிக்கப்படும் எனத் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கான எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு பதில் அளிக்கவில்லை. ஆனால் மற்ற சர்வதேச அமைப்புகள் இது ஸ்டாஃப்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளன.

    Next Story
    ×