என் மலர்
உலகம்

போரினால் அடைய முடியாத நிலத்தை அமைதி ஒப்பந்தம் மூலம் அடைய முயலும் இஸ்ரேல் - எச்சரிக்கும் ஹிஸ்புல்லா தலைவர்
- ஜோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய 'கிரேட்டர் இஸ்ரேல்' திட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்
- ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதங்களை கைவிடுதல், காசா நிர்வாகத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றை ஹமாஸ் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.
போரில் அடைய முடியாததை அரசியல் ரீதியாக இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் அடைய முயல்வதாகவும், இது பாலஸ்தீனியர்களின் நிலத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய 'கிரேட்டர் இஸ்ரேல்' திட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் என நயீம் காசிம் வலியுறுத்தினார்.
ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்ற இறுதி முடிவு ஹமாஸின் கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப்பின் திட்டத்தின்படி இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இருப்பினும், ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதங்களை கைவிடுதல், காசா நிர்வாகத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றை ஹமாஸ் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.






