என் மலர்tooltip icon

    உலகம்

    Iran War | ஈரான் போரால் மிகப்பெரும் வாய்ப்பு - ரூ.64 ஆயிரம் கோடிக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரஷியா
    X

    Iran War | ஈரான் போரால் மிகப்பெரும் வாய்ப்பு - ரூ.64 ஆயிரம் கோடிக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரஷியா

    • பாரசீக வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டது.
    • சர்வதேச நாடுகளுக்கு ரஷியா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.

    உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ரஷியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    இதை பயன்படுத்தி ரஷியாவில் இருந்து மானிய விலையில் இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அதற்கும் அமெரிக்கா தடை போட்டது.

    இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட ரஷியாவுக்கு, ஈரான் போர் மிகப்பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பாரசீக வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த சூழலை பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்கு ரஷியா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து பல நாடுகள் எண்ணெய் வாங்கி வருகின்றன. இதனால் ரஷியா பெருமளவில் சம்பாதித்து வருகிறது.

    அந்தவகையில் போர் தொடங்கியது முதல் இதுவரை 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.64 ஆயிரம் கோடி) அளவுக்கு ரஷியா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த அர்ஜ்வால்டு அமைப்பு கூறியுள்ளது.

    இது கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் ஆகும்.

    Next Story
    ×