என் மலர்tooltip icon

    உலகம்

    நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு மேலும் 7 ஆண்டு சிறை விதித்த ஈரான்
    X

    நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு மேலும் 7 ஆண்டு சிறை விதித்த ஈரான்

    • அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஈரானைச் சேர்ந்த நா்கீஸ் முகமதி.
    • அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

    டெஹ்ரான்:

    ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் அணியாததால் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

    இந்தப் போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது. இதைத்தொடா்ந்து, கடந்த 2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது.

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19-வது பெண் மற்றும் ஈரானின் 2-வது பெண் ஆவாா் நர்கீஸ் முகமதி.

    இந்நிலையில், கடந்த 2-ம் தேதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது.

    Next Story
    ×