என் மலர்
உலகம்

நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்: ஐ.நா.விடம் ஈரான் குற்றச்சாட்டு
- சனிக்கிழமை காலை ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதல்.
- அணுசக்தி தளமும் அமெரிக்காவின் டார்கெட்டில் அடங்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முன்வராத காரணத்தினால் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை திடீரென இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் 120 நகரங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும், இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் ஈரானின் ஏற்பட்ட விளைவுகள் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் நடான்ஸ் சேதமடைந்துள்ளது என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் ஈரான் புகார் அளித்துள்ளார்.
மீண்டும் ஈரானின் அமைதி மற்றும் பாதுகாப்பான அணுசக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அணு குண்டு தயாரிப்பதற்காக யூரேனியத்தை செறிவூட்டும் பணி இந்த நடான்ஸ் அணுசக்தி மையத்தில் நடைபெற்று வருகிறது. அணுகுண்டு தயாரிப்பதற்கு 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தேவை. ஈரான் 60 சதவீதம் வரை யூரேனியத்தை செறிவூட்டியுள்ளது.






