என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் நிலையில் புதிய பரஸ்பர வரிவிதிப்பை அறிவிக்கும் டிரம்ப்
    X

    இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் நிலையில் புதிய பரஸ்பர வரிவிதிப்பை அறிவிக்கும் டிரம்ப்

    • கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார்.
    • டொனால்டு டிரம்ப் அறிவிப்பார் வர்த்த போர் தொடங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம்.

    "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் ("MAKE AMERICA GREAT AGAIN)" என்ற முழக்கத்துடன் டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலை மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீனா நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தார். இதனால் வர்த்தக போர் உருவாகும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டள்ளார்.

    ஆனால் கூடுதல் வரி விதிப்பில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் புதிய பரஸ்பர வரி விதிப்பை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் Truth சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மூன்று சிறந்த வாரங்கள். ஒருவேளை இதுவரை இல்லாத வகையில் சிறந்த இருக்கலாம். ஆனால் இன்று மிகப்பெரியது: பரஸ்பர வரிவிதிப்பு (RECIPROCAL TARIFFS). அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னதாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவும் உள்ளார்.

    Next Story
    ×